டைரியில் கதை படிப்பது சுவாரசியமான ஒரு விஷயம்! அப்படி ஒரு கதை படிப்போமா???
'என்னுடைய டைரிகளில் இருந்து...' ஒரு சின்னக் குட்டிக் கதை!
டைரி பக்கங்களை புரட்டுவோமா???
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...
அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!
காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா? அந்த திருமணம் வெற்றி பெற்றதா???
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!
அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...
மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!
நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.