இது ஒரு எளிய, இனிய காதல் கதை!
தெரியுமா உங்களுக்கு???
உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு எது?
ஒரு விமான நிறுவனம் ஃபிளைட் அட்டென்டன்ட்டாக பெண்களை மட்டும் தேர்வு செய்யும் காரணம் என்ன?
ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்?
வாழைப்பழங்கள் ஏன் வளைந்திருக்கிறது?
ரூட்டின் வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆக, படியுங்கள், தெரிந்துக் கொள்ளுங்கள், ஸ்மைல் செய்யுங்கள்!
எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!
35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.
அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!
முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.
ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?
நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.
யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!