Online Books / Novels Tagged : செல்வராஜ் - Chillzee KiMo

என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ்

டியர் ரீடர்ஸ்,

என்னுடைய முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதைக்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும் என் எழுத்தை புரிந்து கொண்டு பலர் எனக்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகபடுத்தினர்...

அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.. நான் அந்த கதையை எழுத ஆரம்பித்த பொழுது கொஞ்சம் வேற மாதிரியாக யோசித்து வைத்திருந்தேன்..

ஆனால் நடுவில் கொஞ்சமாய் ட்ராக் மாறி வேறு பாதையில் சென்றுவிட்டது.. நிறைய பேருக்கு அந்தக் கதை அவசரமாக முடிந்துவிட்டது போல தோன்றியிருக்கும்..

எனக்கும் அதே போல் தான்.. ஒரு சேட்டிஸ்பேக்சன் இல்லை..

அதனால் நான் நினைத்தபடியான ஒரு முடிவை அந்தக் கதையை இரண்டாவது பாகமாக என் உயிரானவள் ல்  மீண்டும் தொடர்கிறேன்..

நான் முன்பே சொன்னது போல இந்த கதை ஒரு பொழுதுபோக்கிற்கான ரொமான்டிக் கதை மட்டுமே.. 

தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...அதன் அடிப்படையில் காதலை மட்டுமே மையமாக வைத்து என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை...

இந்த கதையின் இரண்டாம் பாகம் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் பற்றியது.. இறுதியில் யார் வென்றார்கள் என்று பார்க்கலாம்..இது முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எழுதுவது...அதனால்    சீரியஸாக எடுத்துக் கொண்டு படிக்காமல் ரிலாக்சாக என்ஜாய் பண்ணி படியுங்கள்..Happy Reading!!

Published in Books

தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!


********

Published in Books

இதழில் கதை எழுதும் நேரமிது! - பத்மினி செல்வராஜ்

இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த கதை.

 

இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
Happy Reading!!!

 

********

Published in Books

நிலவே என்னிடம் நெருங்காதே!! - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..

கதையைப் பற்றி??

என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே  ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா  என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. Happy Reading!!!

********

Published in Books

தேடும் கண் பார்வை தவிக்க... - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்.. Chillzee ன் வாசகியாக இருந்த நான் ஆர்வக் கோளாறில் பொழுது போக்கிற்காக விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் முடிந்து விட்டது..

எழுத ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் எனக்குள்ளே நிறைய மாற்றங்கள்.. வாழ்க்கையை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள என் எழுத்தும் உதவியிருக்கிறது என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது..

அறிமுக எழுத்தாளராக Chillzee உள்ளே நுழைந்த எனக்கு என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும்  Chillzee ல் வெளியான எனது ஆறு கதைகளும் KiMo ல் நேரடியாக வெளிவந்த எனது மூன்று நாவல்களும் சேர்த்து பார்த்தால் நான் இப்பொழுது எழுதுவது எனது பத்தாவது கதை..

When I realize that, I said myself WOW.. ?..

என்னாலும் பத்து கதைகளை எழுத முடிந்தது என்று எண்ணும்பொழுது எனக்கே  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமான உங்களுக்கு மீண்டும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்..

கதையைப் பற்றி??

கதையின் தலைப்பிலிருந்து ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்..ஆம்... நம் பயணத்தின்  நாயகன் எதையோ தொலைத்து விட்டு தேட போகிறான்..அவன் தேடுவது அவனுக்கு கிடைக்குமா?  என்று அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

எனது பத்தாவது கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!

********

Published in Books
Page 1 of 3