Online Books / Novels Tagged : பிந்து வினோத் - Chillzee KiMo

உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - பிந்து வினோத்

Edition Number - 2

தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???

   

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி! - பிந்து வினோத்

 

Published in Books

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - பாகம் - 2 - பிந்து வினோத்

பிறந்து வளர்ந்த குடும்பத்தை பிரிந்து, புதிதாய் ஒரு பந்தத்தை கொடுக்கும் திருமணம், எல்லோருடைய வாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் தான்!

அப்படி சாதாரண சந்திப்பில் தொடங்கி, காதலாக மாற்றம் கொண்டு, கல்யாணத்தில் இணைந்து, குடும்பமாய் தொடரும் மஞ்சு - மனோஜின் கதையின் இரண்டாம் பாகம் இது. 

இந்த இரண்டாம் பாகம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Pottu Vaitha Vatta Nila - Part 1

   

 

Episodes:

00. Part 1 Recap

01 - 48. Free Preview - Go to Episode 01 - 48

49. Free Preview - Go to Episode 49

50. Free Preview - Go to Episode 50

 


 

Published in Books

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... - பிந்து வினோத்

Second edition.

தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.

திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Published in Books

உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்

Second edition.

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி! 

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா? 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Published in Books

மலரே ஒரு  வார்த்தைப் பேசு...  இப்படிக்கு  பூங்காற்று...! - பிந்து வினோத்

Second edition.

மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???

ம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.

திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள்.  சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...

விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.

மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!

பிரிந்தவர்கள் இணைவார்களா???

அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

 

Published in Books