மதியூர் மிஸ்டரீஸ் கதைகளின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதை, மதியூர் எனும் கற்பனைக் கிராமத்தில் நிகழ்வது. இந்தக் கதைகளில் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.
அவர்களுடன் மதியூர் மிஸ்ட்ரீஸ் கதைகளின் ஒரு கதாநாயகியான சக்தியும் இந்த கதையில் நமக்கு அறிமுகம் ஆகப் போகிறாள்.
'இன்ஸ்பெக்டர் தேன்' படிக்காதவர்களுக்காக ஒரு க்விக் இன்ட்ரோ:
இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.
தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள். தென்றல்வாணன் சத்யாவின் ஒரே மகள் ஷாலினி!
கதையைப் பற்றி:
மதியூர் எனும் அமைதியான கிராமத்தில் நிகழ்ந்த ஒரு மரணம், கொலையா விபத்தா என்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஊரில் இருக்கும் பலரும் நடந்தது கொலை, அதற்கு காரணம் அஹல்யா என்று நம்புகிறார்கள். அஹல்யாவை பற்றி பலரும் பலவிதமான தவறான செய்திகளை சொல்கிறார்கள்.
ஆனால், அஹல்யா நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா? அஹல்யா சம்மந்தப்பட்டதாக சொல்லப்படும் மரணம், கொலையா விபத்தா??
'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?
நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.
இது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை!
மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???
அம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...
விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.
மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!
பிரிந்தவர்கள் இணைவார்களா???
அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!