Online Books / Novels Tagged : OKR - Chillzee KiMo

என் கனவு தேவதையே... - பிந்து வினோத்

Another edition available.

அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார்  (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.

இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.

அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??

Published in Books

மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மலர்களே! மலர்களே!! என்ற இந்த நாவல் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.

சேதுலட்சுமி அம்மாள் ஆதரவற்ற சில குழந்தைகளை வளர்க்கிறார். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்? அவரது வளர்ப்பு மகள் அமுதாவின் காதலால் அவருக்கு ஏற்பட்ட கடும் அவமானத்துக்குக் காரணம் என்ன? அவரது கடந்த காலம் அமுதா மற்றும் இதர குழந்தைகளை பாதிக்குமா?

நற்பண்புகளே உருவான சேதுலட்சுமி அம்மாளின் வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? அடிக்கடி வந்து போகும் ராஜு அண்ணனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அமுதாவின் காதலால் தாய், குழந்தைகள் என்று அவர்கள் இது வரை வாழ்ந்து வந்த வாழ்வு குலைந்து விடுமா?

சேதுலட்சுமி அம்மாள் உண்மையிலேயே நல்லவர் தானா? அமுதாவின் காதல் என்ன ஆனது?

இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் மலர்களே! மலர்களே!! நாவலை.

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books

எனதுயிரே! எனதுயிரே! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

எனதுயிரே! எனதுயிரே!! என்ற இந்த நாவல் ஒரு காதல் காவியம்.

வாழ்வில் வரும் காதல் சிலருக்கு வசந்தமாகவும் ஒரு சிலருக்கு சூறைக்காற்றாகவும் அமைந்து விடுகிறது.

நிகில் என்னும் இளைஞனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது அவன் காதல். அவன் தந்தையும் காதலை எதிர்க்கவில்லை.ஆனாலும் அவன் காதல் கை கூட என்னென்ன தடைகள்? தந்தையின் பாசம் ஒரு புறம், கடமை உணர்வு ஒரு புறம், கழிவிரக்கம் ஒரு புறம் என தடுமாறும் நிகில் என்ன முடிவு செய்கிறான்?

எப்படிப் பட்ட சூநிலையிலும் தீபா   மேல் அவன் கொண்ட காதல் கொஞ்சமும் மாறாமல் பாதுகாக்கும் கதாநாயகன் நிகில் உங்கள் மனதைக் கவர்வான்.

இறுதியில் அவன் மனதைக் கவர்ந்த தீபா அவன் மனைவி ஆனாளா? அதைப் பற்றித்தான்  பேசுகிறது எனதுயிரே! எனதுயிரே!! .

படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைக்கும் இந்த நாவல் படித்து முடித்தத்தும் இனம் தெரியாத மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கும்.

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books

கண்டேன் என் காதலை... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

அனைவருக்கும் வணக்கம்..

இதுவரை என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும்  அளித்து வரும் சில்சீ நட்பூக்களுக்கு நன்றி..

தொடர் கதையோடு நாவல் எழுதும் வகையில் அடுத்ததாக கண்டேன் என் காதலை என்ற எனது இரண்டாவது நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..

கதையை பற்றி??

காதலின் மகிமையை உணர்த்த, அந்த சிங்கார வேலன் ஆடும் திருவிளையாடலே இந்த கதை..

இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் குழப்பத்தை கொண்டு வந்து அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு அந்த வேலன் ஆடும் ஆட்டம் தான் கதையின் போக்கு.. இந்த ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!    

Published in Books

கண்கள் சொல்கின்ற கவிதை... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

கண்கள் சொல்கின்ற கவிதை என்பது முற்றிலும் புதிய தளத்தில் சொல்லப்பட்ட காதல் கதை.

அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதல் மனதில் பூத்திருக்கும். அதனை நினைவு படுத்தும் இந்தக் கதை.

காதல் ஒருவனை அழிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் பல கதைகளிலிருந்து சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் காதல் ஒருவனை எந்த அளவு உயர்த்தியது என்பதே சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அப்படி உயர்த்திய காதலியின் நிலை என்ன?

அவன் நிலை உயர்ந்ததும் காதல் என்ன ஆனது? வீட்டாரின் எண்ணங்கள் மாறினவா? காதல் தோற்று விட்டதா? நாயகி என்ன செய்தாள்?  இருவரும் இணைந்தார்களா?

தெரிந்து கொள்ள வேண்டுமானால் கட்டாயம் படியுங்கள் "கண்கள் சொல்கின்ற கவிதை..."

 

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books