Online Books / Novels Tagged : Thriller - Chillzee KiMo

தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா

முன்னுரை
முற்பிறவியில் முக்தியடையாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துப் போன பெண் ஆன்மா ஒன்று மறுபிறவியில் பிறந்த நாயகியின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தனது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கவும் செய்யும் போராட்டங்களால் நாயகிக்கு ஏற்பட்ட சோதனைகளும் நாயகன் அடைந்த பிரச்சனைகளும் அதோடு அந்த ஆன்மாவின் நிலைமை என்னவானது மற்றும் நாயகனும் நாயகியும் இறுதியில் என்னவானார்கள் என்பதை சொல்லும் கதையாகும். இக்கதை ஒரு பேய் கதை போன்று இருந்தாலும் இது ஒரு நல்ல ஆன்மாவின் காதல் கதையாகும் முற்பிறவியில் பிரிந்த காதலர்கள் இப்பிறவியில் சேர்ந்தார்களா சேர்ந்த போது ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை கதையாக வடித்துள்ளேன் நன்றி 

Published in Books

மாஷா - V சுரேஷ்

ஒ௫ Underworld கூட்டம் நகரத்தில் கால் பதிக்க திட்டம் இடுகிறது, அதன் அறிகுறி யாக  ஒ௫ பிரபல தொழிலதிபரை பகிரங்கமாக கொலை செய்து, தங்கள் பலத்தை அந்த நகரில் ௨ள்ள எல்லாம் பெ௫ம் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்து கின்றனர், இந்த கும்பலை தடுக்கவும், அவர்களை வேரோடு ஒழிக்கவும் காவல் துறை ஒ௫ சிறப்பு அதிகாரியை நியமிக்கிறது.

அந்த சிறப்பு அதிகாரி மேற்கொண்ட விசாரணை யின் போது வெளிபட்ட மர்மங்களும், தி௫ப்பங்களும், தவ௫ செய்தவர்கள் பிடிபட்ட சுவாரசியமான சம்பவங்களம், இ௫தியில் கொலையாளி பிடிபட்டபோது ஏற்படும் தி௫ப்பங்களும் அதன் பின்னனியும், இந்த கதையின் மூலம் சமூகத்திற்கு தெரிய படுத்த வி௫ம்பும்  க௫த்தம் என முற்றிலும் கர்பனையான கதை தான் இது.

 

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 16

Story Name - Tholaivil Ni Ninaivil Naan

Author Name - Sesily Viyagappan

Debut writer - Yes


தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக செசிலி வியாகப்பன் பகிர்ந்திருக்கும் நாவல்.

Published in Books

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - உன்னை கண் தேடுதே...! - Chillzee Originals

சமர்ப்பணம்:

பெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்!

 

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

நினைவுகளுக்கும் நிழல் உண்டு - பிரேமாமகள்

 

மனமார்ந்த நன்றி

கலங்கி நிற்கும் போதெல்லாம், ஆறுதல் சொல்லி அரவணைக்கும்
என் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும்!

 

அட்டைப்பட வடிவமைப்பு: நிவேதிதா மணிவண்ணன் 

கதைச்சுருக்கம்:

 தான் மணமுடிக்கப்போகும் மங்கை கமலினையைக் கண்கள் கண்ட பொழுதில் காதல் கொள்கிறான் கதையின் நாயகன் ஸ்ரீஹரிஹரன். சொந்தங்கள் ஆசிகூறி திருமணம் நடந்தேற, முதலிரவு அறைக்குள் தன் மனைவிக்காக காத்திருக்கிறான் அவன்.

அறைக்குள் பாதம் பதித்த கமலினிக்கு,   பிறருக்கு தெரியாமல், தன் விழிகளோடு மட்டுமே உறவாடும் காதலனைப் பற்றிச் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைக்கேட்ட ஸ்ரீஹரிஹரனின் நிலை என்ன?  அவர்கள் திருமண வாழ்க்கை மனங்களைச் சேர்க்குமா?  அதில் மணம் வீசுமா? என்ற பல வினாக்களுக்கு விடையே ,  திகில் கலந்த தித்திக்கும் காதல் கதை, `நினைவுகளுக்கும் நிழல் உண்டு`

Published in Books
Page 3 of 5