Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக பத்மினி செல்வராஜ் பகிர்ந்து இருக்கும் நாவல் 'ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ் : Ragasiya Snegithane!!! - Padmini Selvaraj'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

தாநாயகி திலோத்தமா அவளுடைய சகோதரிகளை விட நிறத்தில் குறைந்தவள். இதனால் அவளுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. கதைகளில் வருவதுப் போல ஹீரோவாக கணவன் வருவான் என்று ஆசையோடு காத்துக் கொண்டிருப்பவளின் மணாளனாக வருகிறான் குணசீலன்.

குணசீலனும் நிறத்தில் திலோத்தமாவை ஒத்து இருப்பவன். அதேப்போல உயரமாக குண்டாகவும் இருப்பவன். திலோத்தமாவிற்கு அவன் அவள் எதிர்பார்த்த கணவன் போல இல்லை என்ற வருத்தம் ஏற்படுகிறது.

குணசீலனுக்கும் அவனின் தோற்றத்தினால் மனசுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.

இருவருக்கும் திருமணம் நடந்தப் பிறகும் குணசீலன் திலோத்தமாவிடம் அவள் நினைத்ததுப் போல காதல் மழை பொழியாமல் அவனுக்கு வேண்டிய, பிடித்த விதத்தில் நடந்துக் கொள்கிறான். இதனால் திலோத்தமாவிற்கு மனசுக்குகுள் கசப்பு இருக்கிறது.

வருடங்கள் போய் குழந்தை பிறந்த பிறகும் இரண்டுப் பேரும் மனதை பகிராமல் வாழ்க்கையை தொடர்கிறார்கள்.

அப்போது வாட்ஸ் அப் நட்பு வழியே புதிதாக ஒருவன் திலோத்தமாவின் வாழ்க்கையில் வருகிறான். அவனுடைய பேச்சு திலோத்தமாவிற்கு மருந்தாக இருக்கிறது.

இந்த வாட்ஸ் ஆப் நட்பு அவளுடைய வாழ்க்கையில் புது பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அதை அவள் எப்படி சமாளித்தாள். திலோத்தமா குணசீலன் வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக் கதை.

 

ணவன் மனைவிக்குள் கம்யூனிகேஷன் எவ்வளவு முக்கியம் என்பதை நாவல் வழியாக சொல்லி இருக்கிறார் பத்மினி.

 

குடும்ப வகை நாவல் விரும்பும் ரீடர்ஸ்களுக்கான வித்தியாசமான கதை.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக Steve Rush பகிர்ந்திருக்கும் Lethal Impulse - Steve Rush நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

 

கசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ் : Ragasiya Snegithane!!! - Padmini Selvaraj போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!