11.
சரியாக அந்த நேரத்தில், “ஜனனி, எனக்கு மரியாதை கொடுக்குறதுக்காக நீ உமேஷோட கையை தள்ளி விடணும்னு கிடையாது,” என சொல்லிக் கொண்டே அங்கே என்ட்ரி கொடுத்தார் விஸ்வநாதன்.
தர்மாவும், காருண்யாவும் தெளிவாகி விட்ட முகத்துடன் விஸ்வநாதன் பக்கம் திரும்பினார்கள்.
சரியான நேரத்தில் விஸ்வநாதன் செய்த உதவி புரிந்து ஜனனி மரியாதையுடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
விஸ்வநாதன் கண்களை மூடி திறந்து அவளின் செய்கையை ஏற்றுக் கொண்டார். பிறகு மகளிடம், “காருண்யா, என்ன வீட்டுக்கு வந்த கெஸ்ட் இரண்டுப் பேரையும் நிக்க வச்சே பேசிட்டு இருக்க? நீ தானே அவங்களை உபசரிக்கனும்?” என்றார்.
Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya