அத்தியாயம் 16.
“கார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா.” நிரவி புதுக் காரை ஆசையுடன் தடவி பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“சாட்டர்டே சண்டே இனிமேல் எங்கே வேணா போகலாம்மா.” ஈஷானும் தன் பங்கிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
சமீபத்தில் நடந்த நிகழ்வுகளால், பூர்வி தன்னை முழுவதுமாக சுதந்திரமானவளாக மாற்றிக் கொள்ள விரும்பினாள். அதனால் தான் யாரையும் சார்ந்திருக்கும் அவசியம் இல்லாமல் இருக்க தனியாக ஒரு காரை வாங்கி இருந்தாள்.
Tagged under