Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 11

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 11: - She is a beauty, but there's nothing special about it!!!

   

"Tee! என்னை ரொம்ப பயமுறுத்திட்டீங்க!!!" காரில் இருந்து இறங்கியதுமே ஓடி வராத குறையாக வந்து தான்யாவை கட்டி அணைத்துக் கொண்டாள் ஷெல்லி.

  

எப்போதும் படுத்துக் கொண்டே இருப்பது போர் அடிக்கவே, தான்யா அப்போது தான் மெல்ல நடந்துப் பார்க்கலாம் என்று புல்வெளி பக்கம் வந்திருந்தாள்.

  

ஹர்ஷாவும் அவளின் இரு மழலைகளும் பூச்செடிகள் நட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் முளைத்திருந்த களைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுஜயும், அறிவழகனும் போர்ச்சில் இருந்த குஷன் நாற்காலிகளில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home