Chillzee KiMo Books - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals : Vennilavu enakke enakka - Chillzee Originals

வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals : Vennilavu enakke enakka - Chillzee Originals
 

ஹரீஷ் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். தன்னுடைய அறிவால் உருவாக்கி இருக்கும் ரோபோட்டை பிரபலப்படுத்தியப் பிறகு தான் கல்யாணம் என்ற முடிவுடன் இருப்பவன்.

ஹரீஷின் அமைதியான "பேச்சலர்" வாழ்க்கையில் புயலென வருகிறாள் நிலா. அவளின் இனிமை நிறைந்த அறிமுகம் ஹரீஷின் கொள்கைகளை ஆட்டம் காண செய்கிறது!

காதல் தோல்வியினால் வருத்தத்தில் இருக்கும் நிலாவிற்கும் ஹரீஷின் அறிமுகம் பிடித்திருக்கிறது.

எதிர்பாராமல் அவர்களுக்குள் திருமணம் நடந்து விட, ஹரீஷின் மனம் அவனின் ரோபோட்டிடம் இருந்து மனைவி பக்கம் தடம் மாறுகிறது.

ஆனால் நிலா ஹரீஷை விட்டு விலகியே இருக்கிறாள்.

ஹரீஷின் கனவு நிறைவேறியதா? ஹரீஷ் - நிலா வாழ்க்கை என்ன ஆனது? என்பதை "வெண்ணிலவு எனக்கே எனக்கா' நாவல் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

  

அத்தியாயம் 1.

  

"Free your mind and everything'll follow."

  

லேப்டாப் பவர் பட்டனை அழுத்தி அதற்கு உயிர் கொடுத்தான் ஹரிஷ். மனசுக்குள் உலகத்தில் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் வணங்கினான்.

  

ஈமெயிலை ஓபன் செய்தப் போது மனதின் எதிர்பார்ப்பிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் அவனின் கை நடுங்கியது.

  

அவனுடைய ஆர்வத்தை புரிந்துக் கொள்ளாமல் பொறுமையாக ஓபன் ஆனது ஈமெயில் ஆப். அன்று வந்திருந்த ஈமெயில்கள் ஒவ்வொன்றாக டவுன்லோட் ஆனது. ஹரிஷின் கண்கள் அவன் எதிர்பார்த்த ஈமெயிலை உடனேயே கண்டுப்பிடித்தது. பொறுமை இல்லாமல் அந்த ஈமெயிலை ஓபன் செய்தான். அவனுடைய கண்கள் ஈமெயிலை ஸ்கான் செய்தது.

  

Dear Mr. Harish,

  

Thank you for sharing your product details. Unfortunately,

  

ப்ரேக் போட்டு மேலே படிக்காமல் நிறுத்தினான் ஹரீஷ். வேண்டாம் என்று சொல்லும் ஈமெயில்! முழுதாகப் படித்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. கைகளால் முகத்தை மூடிக் கொண்டான். ஏமாற்றம் மனதை அரித்தது. எந்த கனக்ஷனும், ரெகமன்டேஷனும் இல்லாமல் ஒருவன் வெற்றி பெறுவது அவ்வளவு கடினமா? எதற்காக யாரும் அவனுக்கு அங்கீகாரம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறார்கள்.

  

ப்ரோஃபசர் மாதேஷ் காலிங்’.’ இனிமையான பெண் குரலில் அறிவித்தது அவனுடைய மொபைல் virtual assistant app சுஷ்மா.

  

“கனக்ட் செய் சுஷ்மா.” ஹரீஷ் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

  

“குட் மார்னிங் ஹரீஷ்!” என்றார் ப்ரோஃபசர்.

  

“குட் மார்னிங் இல்லை சார். எப்போவும் போல unfortunate மார்னிங்,” என்றான் ஹரீஷ்.

  

“எடிசன் ஆயிரம் தடவை,” என்று தொடங்கிய மாதேஷை பேச விடாமல் தடுத்துப், பேசினான் ஹரீஷ்.

  

“இதை நீங்க என் கிட்ட பத்தாயிரம் தடவைக்கு மேல சொல்லிட்டீங்க சார்!”

  

“முயற்சி செய்துட்டே இரு ஹரீஷ். APJ இண்டஸ்ட்ரீஸ்ல என்ன காரணம் சொல்லி இருக்காங்க?”

  

“முழுசா படிக்கலை சார். படிச்சுட்டு சொல்றேன்.”

  

“அரை குறை ஞானம் ஆபத்து ஹரீஷ். முழுசா படி.”

  

“ஓகே சார்.”

  

ஹரீஷ் ஈமெயிலை படிக்காமலே ஈமெயில் ஆப்பை மூடி விட்டு அன்றைய வேலையை பார்க்கத் தொடங்கினான்.