26.
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்,
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்,
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்,
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்,
இது எப்படி எப்படி நியாயம்,
எல்லாம் காதல் செய்த மாயம்!
ஜனனியின் உதடுகள் அதே பாடலை மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு எப்போதுமே காதல் மீது அதீத நம்பிக்கை இருந்தது. உண்மை அன்பு மட்டுமே இரண்டு ஜீவன்களை இணைக்க முடியும் என்று அவள் திடமாக நம்பினாள். பழைய காலம், புதிய காலம், தொழில் நுட்பக் காலம் என எந்தக் காலத்திலும் மனித உறவுகள் நிலைக்க தேவையானது அன்பும், பாசமும் மட்டும் தான் என்பது ஜனனியின் எண்ணம்.
Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya