Chillzee KiMo Books - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - சசிரேகா : Ennulle mounathin sankamangal - Sasirekha

என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - சசிரேகா : Ennulle mounathin sankamangal - Sasirekha
 

திருமணம் நடைபெறாமலே உறவினர்களால் இளம் விதவையாக்கப்பட்ட இளம்பெண்ணின் வாழ்வில் அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளின் கதை இது.

  

 

பாகம் 1.

1980.

பூசாரிபட்டி கிராமம்.

இன்று ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளிவந்தது, அதற்காகவே மாணவ மாணவிகள் தங்களின் பரிட்சை முடிவுகள் தெரிந்துக் கொள்ள தாங்கள் படித்த பள்ளியில் குவிந்திருந்தார்கள். வெற்றி பெற்ற மாணவர்களின் பரிட்சை எண்ணை ஒரு பெரிய போர்டில் எழுதியிருந்தார்கள் அந்த போர்டை சுற்றியே மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களின் எண்ணை தேடிக் கொண்டிருந்தார்கள். அதே வரிசையில் சுந்தரேசனும் ஒரு எண்ணை தேடிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு சுற்றியிருந்த மாணவர்களுக்கு சிரிப்பாக இருந்தது,

”அண்ணே என்ன நீ இங்க இருக்க, இன்னுமா நீ படிச்சிக்கிட்டு இருக்க, இப்பவாச்சும் பாஸானியா இல்லை பெயிலானியான்னு பார்க்க வந்தியா” என கேலி செய்ய அதற்கு சுந்தரேசனோ,

”எலேய் அடங்குங்கடா நான் எல்லாம் படிக்காத, மேதை உங்களை போல படிச்சிதான் முன்னுக்கு வரனும்னு இல்லை, நமக்கெல்லாம் பட்டறவு தேவையில்லைடா அனுபவ அறிவு ஒண்ணு போதாதா”,

”பின்ன எதுக்காக இங்க வந்தியாக்கும்”,

“ஏன் நான் எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாதாக்கும், எல்லாம் என் மாமன் பொண்ணோட  மார்க் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”,

”ஓஹோ ஜானகிகாக வந்தியா”,

”ஆமாம் உனக்கென்ன தள்ளி போடா, போர்டே தெரியலை” என அவனை தள்ளிவிட்டு முந்திக் கொண்டு போர்டில் ஜானகியின் பரிட்சை எண்ணை வைத்துக் கொண்டு தேடினான். கிடைக்கவில்லை. உடனே சோகமாகிப் போனான், மாணவர்களின் கூட்டத்தில் இருந்து வெளியேறி சோகமாக ஒரு பக்கம் நின்றுக் கொண்டான்,

”சே என்ன இப்படி ஆகிப்போச்சே, இப்ப நான் எந்த முகத்தை வைச்சிக்கிட்டு ஜானகி முன்னாடி நிக்கறது, பாவம் அவள் வேற காத்திருப்பாளே, இப்ப போய் உன் பரிட்சை எண்ணே இல்லைன்னு சொன்னா கவலைப்படுவாளே, ப்ச் நல்லாதானே படிச்சா, நாமளும் பார்த்தோமே, பின்ன எப்படி அவளோட பரிட்சை எண் போர்டில இல்லை, ம்ம் இப்ப என்ன செய்யலாம், சரி போ பரிட்சையா முக்கியம் அவள்ட்ட போய் நீ பாஸாயிட்டன்னு சொல்லிபுடலாம் ஆனா, மார்க் கேட்பாளோ மார்க்குக்கு என்ன செய்றது, நாமளா எதையாவது சொன்னா அவள் நம்ப மாட்டா, அதுக்காகவே பள்ளிக்கூடத்துக்கு வந்து பார்ப்பாளே அப்படி அவள் வந்தா அவளோட பரிட்சை எண் இல்லைன்னு தெரிஞ்சி வருத்தப்படுவாளே கூடாது என் மாமன் பொண்ணை நான் வருத்தப்பட விடமாட்டேன், எங்க அந்தாளு அந்தாளை பிடிச்சி கேட்கலாம்” என நினைத்தபடியே அவசர அவசரமாக பள்ளி தலைமை ஆசிரியரை காண விரைந்தான்.

தலைமை ஆசிரியர் அவரின் அறையில் இருக்க தடாலடியாக உள் நுழைந்தான் சுந்தரேசன், அவனின் வரவை சற்றும் எதிர்பார்க்காத தலைமை ஆசிரியர் அவனிடம்,

”யார்ப்பா நீ இப்படி உள்ள வந்து நிக்கற, மரியாதைக்கு உள்ள வரலாமான்னு கேட்க மாட்டியா”,

”அதெல்லாம் இருக்கட்டும், இன்னிக்குதானே பன்னிரெண்டாம் வகுப்புக்கு பரிட்சை முடிவுகள் வெளியிட்டீங்க”,

“ஆமாம் அதுல என்ன இப்ப”,

”மேற்கொண்டு ஏதாவது முடிவுகள் வெளியிடுவீங்களா”,

”இல்லையே இதுதான், வெளிய போர்டு இருக்கே அதை நீ பார்க்கலையா”,

”பார்த்தேன் பார்த்தேன், அதுல என் மாமன்பொண்ணு நெம்பர் வரலையே ஏன்”,

”ஏன்னா இதென்ன கேள்வி அவள் ஒருவேளை பெயிலாகியிருப்பா” என சொல்ல உடனே சுந்தரசேனுக்கு மலையளவு கோபம் வந்தது,

”என்னய்யா சொன்ன, உன் நாக்கை அறுத்துடுவேன் ஒழுங்கா பேசு” என மிரட்ட அதில் அவர் பயந்து,

”என்னப்பா நீ இப்படி மிரட்டற, நான் என்ன தப்பா சொல்லிட்டேன்,