Chillzee KiMo Books - சின்ன மருமகள் - சசிரேகா : Chinna Marumagal - Sasirekha

சின்ன மருமகள் - சசிரேகா : Chinna Marumagal - Sasirekha
 

தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வந்த நாயகியே நாயகனின் வசம் தன் மனதை இழக்கிறாள் தோழிக்கு துரோகம் செய்தால் மட்டுமே நாயகி தன் காதலை அடைய முடியும் தன் காதலை வெற்றி பெற வைக்க அவள் நடத்தும் நாடகத்தில் யாருடைய மனம் மாறியது நாயகன் நாயகியின் காதலை ஏற்றானா அல்லது நாயகியே தன் தோழிக்காக நாயகனை விட்டுக்கொடுத்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

 


 

பாகம் 1.

காரைக்குடி.

காலை 10 மணியளவில் ஜானகி இரயில்வே நிலையத்தில் யாருக்காகவோ வெகு நேரமாக காத்திருந்தாள்.

”சே எம்புட்டு நேரம்தான் கால்கடுக்க காத்திருக்கிறது, எப்பவோ வரவேண்டிய ட்ரெயின் இன்னும் வரகாணோம், எங்கிட்டு இருக்குன்னு தெரியலை, எப்ப வந்து நிக்கும்னு தெரியலையே ஷ்ஷ்ஷ் யப்பா கடவுளே நான் புலம்பறது உனக்கு கேட்குதா இல்லையா” என வாய்விட்டே புலம்பும் அளவு நொந்துப் போயிருந்தாள்.

அவளின் புலம்பல் வீணாகவில்லை, கடவுளுக்கு அவளின் கஷ்டம் புரிந்துவிட்டது போலும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த திருச்சி ரெயில் தண்டவாளத்தில் மெதுவாக வந்துக் கொண்டிருந்தது. ரயிலைக்கண்டதும் ஜானகிக்கு நிம்மதியானது.

”அப்பாடா ஒருவழியா வந்துடுச்சி சந்தோஷம்” என சொல்லிக் கொண்டே ரயிலை பார்க்கலானாள். ரயிலும் மெதுவாக வந்து நின்றதும், பயணிகள் ரயிலில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். ஜானகியும் அப்படி இப்படி என யாரையோ தேட திடீர் என அவளின் இரு கண்களையும் யாரோ ஒருவரின் கைகள் மூடப்படவே ஜானகி ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்து மெல்ல சிரித்துவிட்டு,

”மஹதி” என்றாள் புன்னகையுடன். அடுத்து மஹதி கலகலவென சிரித்தபடியே தன் கைகளை எடுத்துவிட்டு ஜானகி முன் நின்றாள்.

”எப்படியிருக்க ஜானு” என மஹதி கேட்க அதற்கு ஜானகியோ நீண்ட பெருமூச்சு விட்டு,

”ஏதோ இருக்கேன்”,

”ஜானு என்னப்பா இப்படி டல்லா பேசற ஓஓஓ ரொம்ப நேரம் காத்திருந்தியா”,

”சே சே அப்படியில்லை உனக்காக காத்திருக்கறது ஒண்ணும் கஷ்டம் இல்லை, நான் வேற எதையோ நினைச்சேன் அதான்” என்றாள் அலுப்பாக,

”ஏன் இப்படி அலுப்பு சலுப்பா பேசி வைக்கற, போன்ல கூட நீ சரியா பேசலை ,ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே அது என்ன விசயம்”,

”என் பிரச்சனையை பேசற இடம் இது இல்லை வா போலாம்”,

”எங்க உன் வீட்டுக்குதானே, உன் ஹஸ்பெண்ட்டை பார்க்கனும்னு ஆசையா இருக்கு, சாரிடி உன்னோட கல்யாணத்துக்கு என்னால வரமுடியலை, அப்ப எனக்கு பரிட்சை இருந்தது அதான் வெரி சாரி ஜானு”,

”பரவாயில்லைடி அது ஒரு கல்யாணம், அது நடந்தது எனக்கே பிடிக்கலை, இதுல நீ வராததுதான் குறைச்சலா என்ன”,

”ஏன் இப்படி விரக்தியா பேசற, உனக்கு கல்யாணம் ஆகி ஜஸ்ட் 6 மாசம்தானே ஆகுது, அதுக்குள்ளயே ஏதோ வாழ்க்கையை வெறுத்தமாதிரி பேசற, என்னாச்சி ஜானு எனிதிங் சீரியஸ்”,

”அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு ரயில்வே நிலையத்தை விட்டு வெளியேறி அங்கு காத்திருந்த ஜானகியின் தந்தை காரில் இருவரும் ஏறிக் கொண்டார்கள், காரும் புறப்பட்டது. மஹதியோ ஜன்னல் வழியாக ஊரை வேடிக்கை பார்த்தபடி பயணித்தாள். ஜானகியோ டிரைவரிடம்,

”டிரைவர் அண்ணா நம்ம வீட்டுக்கு போங்க” என சொல்ல டிரைவர் குழம்பி,

”எங்கம்மா சொல்றீங்க”,

”என் அம்மாவீட்டுக்கு போங்கன்னு சொன்னேன்” என்றாள் அழுத்தமாக அதைக்கேட்டு டிரைவரும் வியந்தபடியே ஜானகியின் தாய் வீட்டிற்கு வண்டியை திருப்ப மஹதியோ,

”ஜானு எதுக்காக உன் அம்மா வீட்டுக்குப் போகனும், உன் ஹஸ்பெண்ட்டை நான் பார்க்கலையே, நான் உன்கூட உன் புருசன் வீட்ல