Chillzee KiMo Books - கடலோடு முகில் பிரியும் - வளர்மதி கார்த்திகேயன் : Kadalodu mugil piriyum - Vazharmathi Karthikeyan

 

கடலோடு முகில் பிரியும் - வளர்மதி கார்த்திகேயன் : Kadalodu mugil piriyum - Vazharmathi Karthikeyan
 

கடலோடு முகில் பிரியும்

Chillzeeயில் 'கதையைத் தொடரவும்' ஆக வெளிவந்த இந்த கதையின் முதல் சில அத்தியாயங்களை சுஜனா மற்றும் சில தோழிகளும் எழுதி இருந்தார்கள்.

தொடர்ந்து இந்த கதையை எழுதி முடித்த பெருமைக்கு உரியவர் வளர்மதி கார்த்திகேயன்.

இனிய, எளிய குடும்பம் + காதல் கதை.

 

அத்தியாயம் 1 

அவன் மிகவும் களைப்புற்று இருந்தான். அவனிடம் தேவைக்கு அதிகமானதாகவே பணம் இருந்தது. அவனை எல்லோரும் பணக்காரன் என்றே சொன்னார்கள். ஆனால் அவன் மகிழ்ச்சியாக இல்லை.. அதன் காரணத்தையும் அவன் அறிந்தே இருந்தான். அவன் வாழ்வின் விலை மதிப்பிலாத பொருளை விற்று தான் இந்த பணத்தை சம்பாதித்தான். வழக்கம் போல் தன் அறையில் இருந்த ஜன்னல்லின் அருகே நின்று பார்த்தான். சூர்யன் அப்போது தான் வெளியே வர ஆரம்பித்திருந்தான். அவனின் வீடு ஒரு மலைவாழிடத்தில் இருந்தது, அதனால் அங்கே எப்போது குளிர் அதிகம்.

அவன் கண் வட்டத்துள் வந்த ஒரு பேருந்து அவன் சிந்தனையை கலைத்தது. இந்த பேருந்து இந்த நேரத்தில் இங்கே வர காரணம் என்ன என்று வியப்புற்றான். அப்போது தான் அவனுக்கு அவன் தங்கை சொன்னது நினைவில் வந்தது.... கல்வி சுற்றுப் பயணத்திற்கு வரும் சில கல்லூரி மாணவர்கள் அவர்களின் ஒரு பங்களாவில் தங்க போகிறார்கள். அந்த கல்லூரியின் முதல்வரும் அவன் அன்னையும் பழைய சிநேகிதிகள். அவனின் அன்னையே தன் தோழியிடம், சுற்றலாவிர்க்கு வரும் மாணவர்கள் தங்களின் பங்களாவில் தங்க வேண்டும் என்று விரும்பி அழைத்திருந்தார். 

அப்போது தான் ஏதோ ஒன்று அவன் கவனத்தை கவர்ந்தது. முதலில் அது வழக்கம் போல் அவன் கற்பனையே என்று எண்ணினான். விழிகளை மூடி திறந்தான்... ஆனால் அந்த உருவம் மறைய வில்லை. ஆம் அது அவளே தான், அவன் எப்படி அவளை மறக்க முடியும்? அந்த பேருந்தில் இருந்து இறங்கிய மற்ற பல பெண்களோடு அவளும் நின்றிருந்தாள். ஆனால் அவள் மாணவியாக இருக்க முடியாதே.........  

அத்தியாயம் 2

புயலைப் போல் பல சிந்தனைகள் அவனை தாக்கியது. அவளிடம் ஓடி சென்று பேச விரும்பினான். வேகமாக படிகளில் இறங்கி ஓடி சென்றான். பத்து வினாடிகளில் அந்த பேருந்து நின்றிருந்த இடத்தை அடைந்து விட்டான். அவனின் திடீர் வரவு அங்கே பேருந்தின் அருகில் நின்றிருந்தவர்களின் கவனத்தை கவர்ந்தது. ஆனால் அவன் அவளை மட்டுமே பார்த்தான்... வேறு எதுவும் அவன் கண்களுக்கு தென் படவில்லை. அவள் அப்படியே தான் இருந்தாள். அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அவளின் முகத்தில் அவனை அறிந்துக் கொண்டதற்கான எந்த தடயமும் தோன்றாதது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. அவள் முகம் அமைதியாக இருந்தது. அவளுக்கு அவன் முன்பே அறிமுகம் ஆனவன் என்று சொல்லக் கூடிய குறியீடு எதுவும் தோன்றவில்லை.

"ஹலோ அருண், இங்கே என்ன செய்றீங்க?"

அந்த கேள்வி அவனை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது. அது அவன் தங்கையின் கணவன் சுந்தரின் குரல். வினாடிக்கும் குறைவான நேரத்தில் தன்னை கட்டு படுத்திக் கொண்டு திரும்பி சுந்தரை பார்த்து புன்னகை செய்தான்.

"ஒன்னும் இல்லை சார், ஒரு காலேஜ் பஸ் நம்ம பங்களா பக்கத்தில் என்ன பண்ணுதுன்னு பார்க்க வந்தேன்..."

"ஒ! உங்களுக்கு தெரியாதா? சில ஸ்டுடென்ட்ஸ் நம்ம பின் பக்க பங்களால ஒரு பத்து நாளைக்கு தங்க போறாங்க... அம்மாவோ தங்கச்சியோ சொல்லலியா?"

"ம்ம்ம்... கவிதா என்கிட்டே சொன்னான்னு நினைக்கிறேன்.. நான் தான் மறந்திட்டேன். ஓகே சார் நீங்க உங்க வேலைய பாருங்க, நான் கிளம்புறேன்.."

கவிதா அவனின் தங்கை. சுந்தர் அவளின் கணவன். அவர்களும் இங்கே தான் தங்கி இருந்தார்கள். திரும்பியே பாராமல் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அவளுக்கு மிகவும் குளிர்ந்து. காலை நேர குளிர் காற்று அவளை விறைக்க வைத்து கொண்டிருந்தது. ஆனால் அவள் மனம் திருப்தி அடைந்திருந்தது. இது போல் அருணை நேருக்கு நேர் சந்திக்கும் நேரத்திற்காக அவள் சில நாட்களாகவே எதிர்பார்த்திருந்தாள் தான். அவளுக்கு தெரியும் அவள், அவளின் பகுதியை சிறப்பாக செய்திருக்கிறாள் என்று. அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உணர்ந்து அவன் முகம் ஏமாற்றம் அடைந்ததை அவள் பார்க்க தான் செய்தாள். அவள் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை மலர்ந்தது. இந்த கல்வி சுற்றுலாவில் கலந்து கொள்ள அவளுக்கும் சிறிதும் விருப்பம் இல்லை. இது அவளின் வேலையும் அல்ல! அவள் எஸ் எஸ் எஸ் கல்லூரியின் கணக்கிடுதல் துறையில் பணி புரிந்தாள். ஆனால் அந்த சுற்றுலாவிற்கு துணை வர வேண்டிய மற்றொரு பேராசிரியை, உடல் நலக் கோளாறினால் வர முடியாது போகவும், தன் சிநேகிதி மாலதிக்காக இந்த சுற்றுலாக் குழுவில் சேர்ந்து கொண்டாள். தாவரவியல் பேராசிரியையான மாலதி அவளின் உற்ற தோழி. அவர்கள் இருவரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தனர். மேலும் அவளுக்கு இந்த வேலை கிடைக்கவும் மாலதி தான் உதவி செய்தாள். மாலதி மட்டும் உதவி செய்திரா விட்டால் என்ன நடந்திருக்கும்... அவளின் சிந்த்கனையை கலைப்பது போல் அவள் தலையில் ஏதோ இடித்தது... ஒரு மாணவியின் பெட்டி தான் இடித்தது... மன்னிப்பு கேட்டு விட்டு அந்த மாணவி நகர்ந்து சென்றாள். மாணவிகள் தங்கள் பெட்டிகளுடன் நடக்க தொடங்கி விட்டதை கண்டவள், தன்னுடைய பையையும் எடுத்துக் கொண்டு மாலதியுடன் இணைந்து நடந்தாள். மாலதியின் முகத்தில் இருந்த ஆர்வம் அவளுக்கு புரிய தான் செய்தது. ஆனால் மாலதி