Chillzee KiMo Books - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...! - தேன்மொழி : Kurukku vazhiyil vazhvu thedidum...! - Thenmozhi

 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...! - தேன்மொழி : Kurukku vazhiyil vazhvu thedidum...! - Thenmozhi
 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...! - தேன்மொழி

இந்த கதை மதியூர் எனும் கற்பனை மாவட்டத்தில் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டராக பணிப் புரியும் தென்றல்வாணனை பின்தொடர்கிறது.

இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எப்படி வழக்குகளை அணுகி, மர்ம முடிச்சுகளை விடுவித்து, குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார் என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Chillzee Reviews

Check out the Kurukku vazhiyil vazhvu thedidum...! novel reviews from our readers.

  

 

 

அத்தியாயம் – 01

மூடுபனியினால் சூழ பட்டிருந்த மலைகளின் அழகை ரசித்தப் படி நடந்த தென்றல்வாணன், கேட்டை திறந்து வீட்டினுள் நுழைந்தான்.

"எவ்வளவு நேரம்ப்பா? இன்னைக்கும் டோஸ் காத்துட்டிருக்கு"

மகள் ஷாலினி கொடுத்த க்ளுவினால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜேஷ்குமார் சொல்லும் 'ஞே' பாவனையுடன் சமையலறையினுள் நுழைந்தான் தேன் என்று நண்பர்களால் அழைக்கப் படும் தென்றல்வாணன்.

அவன் மனைவி சத்யப்ரியா காளி அவதாரத்தில் நின்றிருந்தாள்.

"டைம் என்ன ஆகுது?"

பற்களை கடித்த படி வார்த்தைகளை துப்பினாள் சத்யா.

"கொஞ்சொண்டு லேட் ஆச்சு சத்யா?"

"ஏழு மணிக்கு மார்கெட் போயிட்டு பத்து மணிக்கு வரது உங்களுக்கு கொஞ்சம் லேட்டா?"

"ஏழு மணி இல்லைம்மா ஆறே முக்கால்"

அப்பா, அம்மாவிடம் டோஸ் வாங்குவதை பார்த்து ரசித்தபடி இன்னும் கொஞ்சம் பற்றி எரிய பெட்ரோல் ஊற்றிய மகளை ஓரக் கண்ணால் கோபமாக பார்த்தவன், சத்யா முகத்தில் கடுப்பு அதிகமாவதை கவனித்து மீண்டும் பழைய முக பாவனைக்கு மாறினான்.

"எங்கே போயிருந்தீங்க? என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?"

"அது வந்து சத்யா....."

"முதல்ல அந்த பையை கொடுங்க...."

தென்றல்வாணனின் கையில் இருந்த பையை (கிட்டத்தட்ட) பிடுங்கி திறந்து பார்த்தவள், நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

"வெண்டைக்காய் காலி ஆகிடுச்சு சத்யா, ஆனால் நேத்து மாதிரி எதுவும் வாங்காம வரலை கத்தரிக்காய் வாங்கி இருக்கேன்"

"இதுக்கு பேர் கத்தரிக்காயா? காஞ்சு போன கருவாடு மாதிரி இருக்கு"

"நாளையிலேருந்து நான் கடைக்கு போறேன்ம்மா. அப்பாவை அனுப்பினால் தினம் தினம் நாம தயிர் சாதம் சாப்பிட வேண்டியது தான்"

ஷாலினியை பார்த்து,

"உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்" என முனுமுனுத்தவன்,

"சாரி சத்யா. நாளைக்கு கரெக்ட்டா செய்றேன்."

"இதே வசனத்தையே அலுக்காம பத்து வருஷமா சொல்றீங்க. ஆனால கரக்ட்டா நடக்குற வழியை காணும்"

"புது ஊராச்சே அதனால் கொஞ்சம் டைம் கொடு"

"கொடுத்திட்டாலும்!"

"வேற என்னம்மா உங்க டைம் முடியுறதுக்குள்ளே அப்பாவை வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் செஞ்சிடுவாங்க, திரும்ப இதையே ரீப்பீட்ல போட்ட பாட்டு மாதிரி பாடிட்டே இருப்பார்"

"ஹேய் குட்டி சாத்தான் இந்த போட்டு கொடுக்குற வேலை விட்டுட்டு ஏதாவது புக்கை எடுத்து படி"

"படிச்சு என்ன ஆக போகுது டாடி? நான் உங்களுக்கு ஒரே பொண்ணு காசு கொடுத்து பிடிச்ச காலேஜில சீட் வாங்கிட மாட்டீங்க"

"ஹேய்! யார் கிட்ட லஞ்சம் கொடுக்குறதை பத்தி பேசுற? நான் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி!"

"போதும் போதும் பழைய பல்லவியை ஆரம்பிக்காதீங்க"

"உனக்கும் இது பழைய பல்லவியா?"

"வேறென்ன சொல்ல? இத்தனை வருஷம் பரவாயில்லை, நம்ம பொண்ணுக்கு எட்டு வயசாகுது. நீங்க இப்படியே இருந்தா என்ன செய்றது? அவ படிப்பை பத்தி யோசிக்க வேண்டாமா? இது வரைக்கும் அஞ்சு ஸ்கூல் மாத்தி இருக்கோம், அவ பிறந்த அப்புறமே பத்து ஊரு மாறி இருக்கோம்"

"புரியுது சத்யா, என்னால சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்ய முடியலை. காக்கி சட்டை எனக்கு கடவுள் போல"

"எனக்கும் புரியுதுங்க! இது வரைக்கும் இருந்த சிட்டி போல இல்லாம இந்த மதியூர் மாவட்டதில இருக்குறது எல்லாம் கிராமம். நம்ம பொண்ணு ஸ்கூல் முடிக்குற வரைக்குமாவது இங்கேயே இருக்க பாருங்க"

"கிராமத்துல தங்கி இருக்குறது உனக்கு ஓகேவா?"

"கிராம வாழக்கை போல அமைதியான வாழ்க்கை இருக்கா என்ன? இங்கே குற்றங்களும் ரொம்ப கம்மி"

"அப்படியா சொல்ற?"

"வேறென்னங்க? இது போல ஒரு அழகான அமைதியான டூரிங் ஸ்பாட்டுக்கு வந்தா கொலைகாரனுக்கு கூட மனசு மாறி போயிடும். உங்களுக்கு வேலையே இல்லாம போக போகுது பாருங்க"

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்