காதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி செல்வராஜ் : Kaathoduthaan naan paaduven... - Padmini Selvaraj
 

காதோடுதான் நான் பாடுவேன்...

முன்னுரை:

Hi Friends,

அனைவருக்கும் வணக்கம்....

எழுத்துலகில் எனது முதல் தொடர்கதையான “என் மடியில் பூத்த மலரே” க்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

நீங்கள்  அளித்த ஆதரவு+ஊக்கத்தால் எனது அடுத்த கதையான “காதோடுதான் நான் பாடுவேன்...” உடன் உங்களை மீண்டும் சந்திக்க நானும் மை பெஸ்ட் பிரெண்ட் வேல்ஸ் ம்  வந்திருக்கிறோம்...

கதையை பற்றி ?

தன் பக்தையின் குறையை தீர்க்க  நம்ம வேல்ஸ் ஒரு திட்டம் போட்டு கட்டம் போட்டு விளையாடப் போகிறான். அவனை எதிர்த்து ஒரு போட்டியாளரும் களம் இறங்க, அந்த போட்டியாளரை வென்று அந்த சிங்காரவேலன் தன் ஆட்டத்தில் வெற்றி பெறுவானா? அந்த வேலனையே எதிர்த்து நிற்கும் அந்த போட்டியாளர் யார்? என தெரிந்து கொள்ள இந்த கதையை படியுங்கள்..

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதை.. Happy Reading!!     

 

அத்தியாயம் 01

மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குல மகளே வா வா

தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா….

என்று அந்த வீட்டின் முன்னே மைக் செட் அலறியிருக்கும் அந்த காலமாக இருந்திருந்தால்...

மைக் செட் மட்டுமா?? திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பந்தகால் நடும் விழா னு ஊரே திரண்டு திருமண வீட்டிற்கு வந்து அங்காளி பங்காளிகள் எல்லாம் ஒருவரை ஒருவர் கலாய்த்துகொண்டு ப்ரெஷ்ஷாக வெட்டிய தென்னை மட்டையில் கீத்து முடைந்து வீட்டின் முன்னே ஒரு பெரிய பந்தலை  போட்டிருப்பர்....

அதற்கு முத்தாய்ப்பாக அந்த கல்யாண வீட்டு பந்தலை சுற்றி சீரியல் பல்புகள் எரிய பந்தலின் நுழை வாயிலில் “நல்வரவு” என்று பெயர் பலகை அழகான வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து அனைவரையும் வரவேற்று கொண்டிருக்கும்...

அதோடு வாயிலின் இரண்டு பக்கமும் வாழை மரங்கள் கம்பீரமாக நின்றிருக்க,  பந்தலில் வேப்பிலை மாவிலை தோரணம் கட்டி யாராவது புதியவர்கள் பார்த்தாலே இது கல்யாண வீடு என்று தெரியுமாறு இருந்திருக்கும் முன்பு...

பெண்களும் ஒருவருக்கொருவர் சீண்டி பேசி அந்த கல்யாண வீடே கலகலப்பாக அந்த நாள் மட்டும் இல்லாமல் கிட்ட தட்ட ஒரு வாரமே கல்யாண கலையும் கலகலப்பு நிறைந்து இருக்கும் திருமண வீட்டில்...

இன்றைய அவசர கால கட்டத்தில் அதெல்லாம் மிஷ்ஷிங்.. எல்லாத்துக்கும் அவசர படும் தலைமுறை இன்றைய தலைமுறை..

அதனால் தான் கோவிலில் சாமியை அவசரமாக தரிசிக்க சிறப்பு வழி, ட்ரெயினில் அவசரமாக டிக்கட் புக் பண்ண தட்கால் முறை  என்று எல்லாத்துலயும் அவசர முறைகளை கொண்டு வந்து விட்டனர் இன்றைய தலைமுறையினர்...

எந்த விஷேசம் ஆனாலும் உறவினர்கள் கூடி நின்று பந்தல் போடும் வழக்கம் மறைந்து இப்பொழுது ரெடிமேடாக இருக்கும் சாமியானா பந்தலாக மாறிவிட்டது.... 

அதுமட்டுமா?? உண்ணும் உணவில் கூட அவசரத்தை கொண்டு வந்து விட்டனர்..   இரண்டு மணிநேரம் சமையல் அறையில் போராடி தன்  அன்பையும் பாசத்தையும் கொட்டி விதவிதமாக சமைத்து தன் குடுப்பத்தாருக்கு பரிமாறி அதில் வயிறும் மனமும் நிறைந்து பூரித்து நிக்கும் வீட்டு அம்மாக்களின் நிலைமாறி, 

பசிக்கிறதா?? உடனே செருப்பை மாட்டி கொண்டு தெருக்கோடிக்கு நடந்தால் பல பாஷ்ட் புட் கடைகள் அவர்களை வரவேற்கும்... அவர்களின் அவசரத்திற்கு அவர்களும் அவசரமாக அந்த உணவை சரியாக வெந்தும் வேகாமலும் எடுத்து கொடுக்க அதையும் அவசரமாக நின்று கொண்டே வயிற்றுக்குள் கடனே என்று தள்ளும் நிலைதான்... 

சமீபத்தில் அதையும் தாண்டி தெருக்கோடி வரைக்கும் நாம எதுக்கு நடக்கணும்?? அவர்களே நம்மளை தேடி வரட்டும் என்று வெளியில் நடக்க கூட அவசியமில்லாமல் மக்களை சோம்பேறிகளாக்கி  பல புட் டெலிவரி ஆப் வந்துவிட இந்த அவசரகாரர்களுக்கு இன்னும் வசதியாகி விட்டது...

பசிக்கிறதா??   விதவிதமா சாப்பிட வேண்டுமா??  இரண்டு மணி நேரம் அடுப்படியில் போராட வேண்டாம்... நம்முடன் எப்பவுமே ஒட்டி கொண்டிருக்கும் உடன் பிறவா சகோதரி/சகோதரனான அந்த அலைபேசியை எடுத்து அதில் இருக்கும் விதவிதமான ஆப் களில் எதில் அதிக டிஷ்கவுண்ட் தர்ரான் என்று ஒரு அவசர ஆராய்ச்சி பண்ணி உடனேயே தனக்கு வேண்டியதை ஆர்டர் பண்ண, அடுத்த பத்தாவது நிமிடம் அத்தனையும் அவர்கள் வீட்டின் டைனிங் டேபிலில் அமர்ந்து இருக்கும்...

அதோடு முன்பு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களின் முதல் கவலை  டிபன் பாக்ஷ் கொடுப்பதே.. என்ன செய்வது என்று இரவே தீர்மானித்து அதுக்கு எல்லாம் இரவே தயாராக ரெடி பண்ணி காலையில் எழுந்து பள்ளி வேன் வருமுன்னே   டிபன் பாக்சையும் ரெடி பண்ணி பிள்ளைகளையும் ரெடி பண்ணி வேனில் கொண்டு தள்ளிய பிறகே மூச்சு விட முடியும்...

இப்பொழுது அதுக்கும் விடிவு காலமாக, பள்ளி  குழந்தைகளுக்கு டிபன் பாக்ஷ் ஐ அவர்கள் வகுப்பறைக்கே சென்று கொடுப்பதற்கென்றே பல ஆப் கள்  (App) வந்துவிட்டன... ஒரு 10  மணிக்கு அலைபேசியை எடுத்து தன் குழந்தைக்கு என்ன வேணுமோ,  அதை ஆர்டர் பண்ணி விட்டால் போதும்..  பள்ளியை தேடி அவர்கள் வகுப்பறையில் சுடச்சுட உணவு டெலிவரி செய்யபடும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்...

இப்படி எல்லாமே அவசரமாக சுருங்கிவிட்ட நிலையில் திருமணத்தை மட்டுமா விட்டு வைக்க போகிறார்கள்?? ... 7 நாள் கல்யாணம் மூன்று நாளாக சுறுங்கி இப்பொழுது அதுவும் அரை நாள் கல்யாணம் ஆக மாறிவிட்டது.. பாதி பேருக்கு பக்கத்து வீட்டில் கல்யாணம் என்பதே அறிந்திருக்க மாட்டார்கள்..

காலையில் ஒரு கோவிலிலோ இல்லை கோவிலில் பண்ணினால் அதை ரிஜிஷ்டர் பண்ண வேறு அலையணும் என்று நேரடியாக ரெஜிஷ்டர் ஆபிஷ்லயே திருமணத்தை அவசரமாக