Chillzee KiMo Books - தவமின்றி கிடைத்த வரமே - பத்மினி செல்வராஜ் : Thavamindri Kidaittha Varamee - Padmini Selvaraj

தவமின்றி கிடைத்த வரமே - பத்மினி செல்வராஜ் : Thavamindri Kidaittha Varamee - Padmini Selvaraj
 

தவமின்றி கிடைத்த வரமே - பத்மினி செல்வராஜ்

நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....

அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.....

இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. Happy Reading!!!

 

அத்தியாயம் 01

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்...

ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா….

என்ற இனிமையான பாடல் தன் அருகில் ஓடிக் கொண்டிருப்பவரின் பாக்கெட்டில் இருந்த அலைபேசியில் இருந்து ஒலிக்க, அதை ரசித்த படியே தன் காலை ஓட்டத்தை ஓடிக் கொண்டிருந்தான் நம் பயணத்தின் நாயகன்...

அப்பொழுது தான் நினைவு வந்தது அவன் காதலி இன்னும் வந்திருக்க வில்லையே என்று... எப்பொழுதும் அவன் வருமுன்னே வந்து அவனுக்காக காத்திருப்பவள் இன்று இன்னும் வரவில்லையே... என்று  ஏக்கமாக சுற்றிலும் பார்த்தான்....

அவனின் தேடலை கண்டு கொண்டாளோ என்னவோ.. அவனை மேலும் தேடி ஏங்க  வைக்காமல் அடுத்த நொடி அவன் முன்னே வந்து நின்றாள்....

அவளின் வருகையை உணர்ந்தவன் முகத்தில் புன்னகை அரும்ப, தன் முகத்தை நிமிர்த்தி அவள் முன்னே நீட்ட, அவளும் அவனை ஏமாற்றாமல் சில்லிட்டிருந்த தன்  கரங்களால் அவன் முகத்தில் கோலமிட்டு அவனுக்கு குறுகுறுப்பை மூட்ட அதில் மெல்ல வெக்கப்பட்டு அதை  அனுபவித்து ரசித்தான்...

அவன் வெக்கப்படும் அழகை ரசித்த அவனின் காதலி மேலும் முன்னேறி அவன் முன் உன்னுச்சி கேசத்தை செல்லமாக கலைக்க, அதில் இன்னும் கரைந்து தான் போனான்...

அவளின் அந்த மெல்லிய ஷ்பரிசத்தில் தன்னை மறந்து அவளிடம் முழுவதும் சரணடைந்திருந்தான் அவன்...

கொஞ்ச நேரம் தன் காதலனுடன் கொஞ்சி விளையாடிய அவள் தனக்கு நேரம் ஆவதை உணர்ந்து அவனை பிரிந்து செல்ல முயல, அவளை எப்பொழுதும் தன்னுடனே பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் அவளை ஏக்கமாக பார்க்க, அவளோ அவனிடம் பிரியா விடைபெற்று செல்ல காத்து நின்றாள் ...

“ஹ்ம்ம்ம்ம் மீண்டும் நாளைதான் உன் தரிசனம் கிடைக்கும்....நாளையும் மறக்காமல் வந்து விடு அன்பே...“ என்ற பெருமூச்சுடன் தன் வசீகர புன்னகையோடு  தன் தென்றல் காதலியை விடை கொடுத்து அனுப்பி வைத்தான் வசி என்கிற வசீகரன்....    

வசீகரன்- நிறைய பேருக்கு நினைவு வந்திருக்கும்... என் மடியில் பூத்த மலரே நாயகன் ஆதி மற்றும் நிகிலனின் நண்பன் தான் நம்  இந்த புதிய பயணத்தின் நாயகன்...

பெயருக்கேற்றார் போல யாரையும் எளிதில் வசீகரிப்பவன்.. ஆறடி உயரமும் அடர்ந்த கேசமும் தன்னுடைய பிசியான செட்யூலிலும் தன் காலை உடற் பயிற்சியை தவறாமல் செய்து வருவதால் முறுக்கேறிய, ஆண்மை  ததும்பும்  தோற்றம் கொண்டவன்....  

தன் மற்ற இரு நண்பர்களை போல முகத்தை எப்பொழுதும் இறுக்கமாக வைத்திருக்காமல் எப்பொழுதும் இலகிய நிலையில் கனிவான முகமும் சிரித்த  கண்களும் யாரும் எப்பொழுதும் அவனை அணுகும் வகையில் மிகவும் மென்மையான குணம் கொண்டவன்...

நிறைய பேர் அவனிடமே வியந்து கேட்டிருக்கிறார்கள்.. அவன் எப்படி மற்ற இரண்டு பேருடன் நண்பனான் என்று..

பள்ளியில் மற்ற இருவரும் எப்பொழுதும் யாரையாவது முறைத்து கொண்டே இருக்க, இல்லையென்றால் யாருடனாவது சண்டையிட்டு கொண்டிருக்க, வசிதான் அவர்கள் இருவரின் கோபத்தை கட்டுபடுத்தி அவர்களை அமைதி படுத்துவான்....

இவன் எப்படி அவர்களுடன் நண்பனான் என்று பல நேரங்களில் அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும்...

காதல் எப்படி இனம், மொழி, குணம் பார்த்து வராதோ அதே போலத்தான் நட்பு என்பதும் மற்றவருடைய இனம், மொழி, குணம் பார்த்து  வருவதில்லை போல...

றாம் வகுப்பில் மூவரும் ஒரே வகுப்பில் சேர்ந்த பொழுது ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் உதவ, அதுவே நட்பாக மலர்ந்தது...12 ஆம் வகுப்பு வரை  மூவரும் ஒரே வகுப்பில் தான் ஒன்றாக படித்தனர்...

இடையில் ஆதி வேற வகுப்பிற்கு மாற்றப்பட, அவன் தன் தந்தையிடம் அழுது அடம் பிடித்து மீண்டும் தன் நண்பர்கள் இருந்த வகுப்பிற்கே மாற்றி வந்து விட்டான்...  

பள்ளி படிப்பிற்கு பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணித்தாலும் அவர்கள் நட்பு அப்படியே தான் தொடர்ந்து கொண்டிருந்தது....

பள்ளி, கல்லூரி முடிந்து அவரவர் பாதையில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வர்.... அலைபேசியில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உரையாடிக் கொள்வர்...

வசிக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவ துறையில் ஆர்வம் அதிகமாக இருக்க, மற்ற நண்பர்கள் இருவரும் அவனை ஊக்குவித்தனர்.... 12 ஆம் வகுப்பில் கொஞ்சம் மதிப்பெண் குறைந்து விட, அரசு கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை...

அவர்கள் இருந்த நிலைக்கு பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வது என்பது இயலாத ஒன்று

மருத்துவனாக அத்தனை தகுதி இருந்தும் தேர்வு நேரத்தில சரியாக பிரசன்ட் பண்ண