வா.. வா.. என் தேவதையே..! - பிரேமா சுப்பையா : Vaa.. vaa.. en devathaiye.! - Prama Subbiah
 

வா.. வா.. என் தேவதையே..! - பிரேமா சுப்பையா

பிரேமா சுப்பையாவின் கை வண்ணத்தில் புது குறுநாவல்.

 
 

காலை ஐந்து முப்பது மணிக்கு அடித்த அலாரம் சத்தம் கேட்டு  மெல்ல கண்களை திறந்தாள் சுகன்யா. உறக்கம் அவளை விடாது பிடித்து வைக்க நினைத்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் கண் முன் வந்து நடனமாட, உறக்கத்தை விடுத்து எழ நினைத்தவளை இறுக்கி அணைத்தாள் அஞ்சலி.

மெல்ல அந்த பிஞ்சு கைகளை விடுவித்து எழுந்தவள் குளியலறை  சென்று முகம் கழுவிவிட்டு முகத்தை துண்டால் துடைத்தபடியே நான்கு வயது மகளின் அழகை சில நொடிகள் ரசித்து விட்டு, வீட்டு வாசலை கூட்டி, பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு, ஒரு நொடி நின்று  அந்த கோலத்தை  ரசித்து விட்டு சென்றவள், அடுத்ததாக பாலை காய்ச்சி  காபி போட. குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டது ..

"எழுந்துட்டாங்களா ?" என்று யோசித்தபடியே இரு கோப்பைகளில்  காபியை ஊற்றி, இரண்டையும் எடுத்தபடி உணவு மேசையை நோக்கி வர, அங்கே கீரையை கிள்ளியபடி அமர்ந்திருந்தார் ராதா.

முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாமல் கீரையை கிள்ளுவதில் அவர்கள் மும்முரமாய் இருக்க, இவளும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் அருகே ஒரு காபி கோப்பையை வைத்து விட்டு, உறங்கி கொண்டிருக்கும் மகள் அருகே சென்று அமர்ந்து மகளை ரசித்து பார்த்தவாறே காபியை பருகினாள்.

“மகள் அஞ்சலி, அளவில்லா காதலின் அடையாளம்” என்று தான் சுகன்யாவிற்கு நினைக்க தோன்றியது. அந்த காதல் இத்தனை சீக்கிரம் முடிந்திருக்க வேண்டாம்.

பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்திற்காக தன்னை, பிறந்த ஒரு சில தினங்களில்  ஆசிரமத்தில் விட்டு  சென்ற பெற்றோரின் மீது  கூட  அவளுக்கு வருத்தம் இருந்ததில்லை. காரணம் பெண் சிசு என்று கொல்லாமல்.. தனக்கு வாழும் சுதந்திரத்தையாவது விட்டு வைத்தனரே அதற்காக தன்னை பெற்றோருக்கு  நன்றி சொல்வாள் சுகன்யா.

எவ்வளவு படித்தவர்களும் கூட ஆணுக்கு நிகராய் பெண்ணை காணும் மனநிலையை அடையாது இருக்கும்போது,  "என் கணவன் என்னை எப்படி நடத்தினான் ..இயல்பிலேயே அவன் அத்தகையவன் தான்.." என்று எண்ணினாள். அவனை அவ்வாறு வளர்த்ததில் நிச்சயம் ராதாவின் பங்கு பெரிது என்று அவள் அறிவாள்.. எனவே ராதா மீது என்றும் அவளுக்கு பெரும் மரியாதை இருப்பதுண்டு ..ஆனால் ராதாவிற்கு தான் ..அவள் வேண்டாத மருமகள் ஆனாள்.. இருக்காதா  பின்னே .. ஒரே பிள்ளையை எப்படி சீராட்டி ..தாலாட்டி வளர்த்திருப்பார் ..வேலைக்கும் சென்று ..உடல்நலம் குன்றியிருந்த கணவனையும் பார்த்துக்கொண்டு ..மாமியார் கொடுமையையும் சகித்து வாழ்ந்தாராமே ..கணவன் அவ்வப்போது தாயை குறித்து  சுகன்யாவிடம்  பெருமை பேசுவான் ..

அவனது திருமணம் குறித்து அத்தனை ஆசைகளை ராதாம்மா மனதில் கோட்டை கட்டி வைத்திருக்க ..மருத்துவனான மகனோ ஓர் அனாதை பெண்ணை மணமுடித்து கொண்டு வந்து “இவள் தான் என் மனைவி” என்று அடையாளம் காட்டினால்..?

ராதாம்மா நிலையில் சுகன்யா இருந்திருந்தாலும் ராதாம்மா செய்ததை போல் செய்திருப்பாளா தெரியாது ஆனால் ராதாம்மா செய்தார்.

அழவில்லை ..ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ..ஒரு நொடி புருவம் சுருக்கி மகனை பார்த்தார், பிறகு “வாழ்த்துக்கள் ..சிவா  .." என்று கசந்த புன்னகையை சிந்தியவர் அமைதியாக உள்ளே சென்றுவிட்டார்..

சுகன்யாவிற்கு அது அதிர்ச்சி என்றால் சிவாவிற்கு  அது ஆச்சர்யம் தான். தனது தாய் அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் என்றெல்லாம் யோசிக்கவில்லை இருந்தாலும் நிச்சயம் ஏதேனும் செய்ய கூடும் என்று யோசிக்க ராதாம்மாவோ ..அமைதியாக வாழ்த்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார்

அதன்பின் இருவரோடும் பேசவில்லை ..தனக்கானவற்றை தானே செய்து கொண்டு அவர் வேலை செய்யும் வங்கிக்கு கிளம்பி சென்றுவிடுவார். சுகன்யாவோ ..தான் ஆசிரியையாய் வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்றுவிட ..சரண் அரசாங்க மருத்துவமனைக்கு ..சென்றுவிடுவான். சரியாக ஏழு நாட்கள் தான் இந்த நாடகம் அதற்கு பின் ராதாம்மா, தான் தனியாக செல்ல போவதாக அறிவித்து விட்டு சென்றுவிட்டார்.

மகனுக்கு பேச கூட வாய்ப்பை கொடுத்துவிடவில்லை. இரண்டு முறை ராதாம்மாவை பார்க்க சென்று தோற்று போய் வந்தான். முதலில் சுகன்யாவிற்கு இதில் வருத்தம் என்றாலும் ராதாம்மாவின் குணத்தை கணவன் எடுத்து சொன்னதால் அவளும் அதற்கு மேல் அன்றாட வாழ்வில் தன்னை பொருத்தி கொண்டு வாழ்வை வாழ தொடங்கினாள்.

பொதுவாகவே சுகன்யா மிகுந்த தன்மானம் நிறைந்த பெண். அவள் தன்மானத்திற்கு சிறிதும் களங்கம் வராமல் அவளோடு இன்பமாக வாழ்ந்து