நம் தேசம் காப்போம் - சதீஷ் : Nam Desam Kappom - Satish
 

நம் தேசம் காப்போம் - சதீஷ்

 

 

ன்னை ஒரு நாள் யாரோ வெகு உயரத்தில் எங்கேயோ கொண்டு செல்வது போல இருந்தது, வெளியில் பார்த்தால் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, நானும் யாரிடமாவது நாம் எங்கே செல்கிறோம் திடீரென்று இவ்வளவு உயரத்தில் பறப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்? அதுவும் இல்லாமல் அருகில் பல பேர் என்னை சுற்றி வித்தியாசமாகவும் வேற்று கிரகத்தில் வந்தது போல பா       ர்க்கிறார்களே அது ஏன்? நான் பேசும் தமிழும் யாருக்கும் விளங்கவே இல்லையே. எனக்கு தமிழை தவிற வேறு மொழியும் தெரியாதே, என்ன செய்வது ஏது செய்வது என்று திகைத்து நின்றிருக்கும்போது ஒரு பெண் என்னிடம் வந்து "என்ன பண்ணிட்டு இருக்க? எல்லாரும் சந்தோஷமாதான இருக்காங்க நீ மட்டும் ஏன் சோகமா இருக்க? உனக்கு என்ன பிரச்சனை இப்போ? நீ பேசறது இங்க யாருக்கும் புரியல்லேனு பீல் பண்றியா?" என்று அவளுக்கு தெரிந்த அரைகுறை தமிழில் கேள்விகளை தொடுத்து கொண்டே போக நான் அவளை பார்த்து "நீயாவது என்னிடம் தமிழில் பேசுகிறாயே! எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பேச்சுதுணைக்கு ஆள் கிடைத்தது போல இருக்கிறது, நாம் எங்கே செல்கின்றோம்? நம்மை எங்கே அழைத்து செல்கிறார்கள் இவ்வளவு உயரத்தில் செல்வதை பார்த்தால் எனக்கு பயம் அதிகரிக்கிறது உனக்கு பயமே இல்லை போல இருக்கிறதே. ஆனாலும் நீ மிகவும் தைரியமான பெண் தான்" என்று கூற "என்னை புகழாதே, ரொம்ப வெட்கமாக இருக்கு. எனக்கும் எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை , பயமா தான் இருக்குது, ஆனா என்ன போல இங்கே நிறைய பேர் இருக்கிறதால கொஞ்சம் தைரியம் இருக்கு அவ்வளவுதான். சரி நீ சொல்லு, உன் பேர் என்ன? எந்த ஊரு?" என்று கேட்க "என் பெயர் காங்கேயன், நான் கோவையின் தாராபுரம் தாளுக்கில் அமைந்துள்ள புதூர் எனும் கிராமத்தில் வளர்ந்தேன். நான் பிறந்ததில் இருந்தே என் தாய் தந்தையை பார்த்தது இல்லை ஆனால் என் தந்தையின் வீர தீர செயல்களை பல பேர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். என் எசமானன் முருகன், எசமானம்மா வள்ளி இவர்கள் இருவர் தான் எனக்கு எல்லாமே. எசமானன் ஒரு விவசாயி, அவருடைய நிலத்தில் உழுவதற்கு தினமும் காலை ஐந்து மணிக்கே சென்று விடுவேன், காலையில் ஒரு பாதி நிலத்தின் வேலையை முடிக்க மணி பன்னிரண்டு ஆகிவிடும். என் தாய் போல எசமானம்மா எனக்கு தீவனமும் எசமானனுக்கும் எனக்கும் நொய்யரிசி கஞ்சியையும் கொண்டு வருவார்கள், அதை உண்டு விட்டு நானும் எசமானனும் வேலையை தொடர்வோம், சாயுங்காலம் ஆனவுடன் நான் கொஞ்ச நேரம் புல்களை உண்பதற்காக சென்று என்னுடைய நண்பர்கள் செவலை, மயிலை, காரி மற்றும் பிள்ளையிடம் விளையாடிவிட்டு எசமானன் வீடு செல்லும் முன் நான் வீட்டை அடைந்து எசமானம்மா எனக்காக வைத்திருக்கும் வைக்கோலையும் கழினி நீரையும் அருந்தி விட்டு உறங்க ஆரம்பித்து விடுவேன். உறங்கி எழுந்ததும் இரவு கொஞ்சம் கஞ்சியை குடித்துவிட்டு மறுபடியும் உறங்கி விடுவேன்.

நான் பிறக்கும் போதே செக்க செவ்வேளென்று இருந்ததாகவும் ஆனால் ஒரு சில மாதங்களிலே நிறம் கருப்பாக மாறியதாகவும் என் எசமானம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். கருப்பாக இருந்தாலும் நான் ரொம்பவும் கலையாக இருக்கிறேன் என்று எப்போதும் புகழுவார்கள். வீட்டிலும் சரி ஊரிலும் சரி நான் நடந்தாலே ஒரு ஆஜானுபாகுவான துருவம் நடப்பது போலவும் ஏனென்றால் என்னோடைய எடை ஒரு எழுநூறு கிலோகிராம் வரை இருக்கும் அது போதாமல் என்னோடைய கொம்புகள் ரொம்பவும் தடியாகவும் நீளமாகவும் இருப்பதால் என்னை பார்த்து பலரும் பயந்து ஓடி ஒளிவார்கள், என்னோடைய பரந்து ஆழ்ந்த மார்புகளும் திடமான கால்களும் முரட்டுத்தனமான தோள்களும் அதற்கு காரணமாக இருக்குமோ என்று பலமுறை எனக்கே மனதில் கேள்வி எழும். எனது நண்பர்களுக்கும் எசமானர்களுக்கும் மட்டும் தான் நான் சாதுவாக காட்சியளிப்பேன் மற்றவர்களிடம் நான் முரண்டு பிடித்து போவதால் எனக்கு முரட்டுக்காங்கேயன் என்ற அடைமொழி வைத்து அழைத்தார்கள்.

நானும் எசமானனும் விவசாயத்தில் இருப்பினும், எங்கள் இருவருக்கும் ஏறுதழுவல் என்கிற சல்லிக்கட்டு மீதும் மாட்டுவண்டி பந்தயம் என்கிற ரேக்ளா ரேஸ் மீதும்  கொள்ளை பிரியம். ஒவ்வொரு மாட்டுப்பொங்கலுக்கு நடக்கும் அலங்காநல்லூர், ஆவணியாபுரம் சல்லிக்கட்டு மற்றும் காணும்பொங்கலுக்கு நடக்கும் விளாத்திகுளம், பெரியமேடு ரேக்ளாரேஸ்  இப்படி பல இடங்களில் நடக்கும் அணைத்து விளையாட்டுகளில் பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று இருக்கிறோம். என் எசமானன் வீட்டில் நாங்கள் இருவரும் வாங்கிய பரிசுகளும் அவ்விழாக்களில் எடுத்த புகைப்படங்களும் தான் எங்கு பார்த்தாலும் கண்ணில் தென்படும். என்னுடைய முழு பயிற்சியாளர் எப்போதுமே என் எசமானன் தான், அவரை நான் எப்படி பயிற்சியின் போது முட்டுவது, அவருக்கு ஏதாவது என் கொம்பினால் ஆகிவிடுமோ என்ற கூச்சமும் பயமும் வரும்போதெல்லாம் அவர் என்னை பார்த்து "குஞ்சி மிதித்து கோழி சாகாது காங்கேயா" என்று அவர் என்னை தன் பிள்ளைபோல் கருதி என்னிடம்