Chillzee KiMo Books - அழகான ராட்சசியே!!! - பத்மினி செல்வராஜ் : Azhagana Ratchashiyae!!! - Padmini Selvaraj

அழகான ராட்சசியே!!! - பத்மினி செல்வராஜ் : Azhagana Ratchashiyae!!! - Padmini Selvaraj
 

அழகான ராட்சசியே!!! - பத்மினி செல்வராஜ்

Summary:
நாயகன் மகிழன் IT துறையில் இருப்பவன்... நாயகியும் அதே துறையில் இருப்பவள்.. ஆனால் எதிர் எதிரான பிரிவு..நாயகன் மகிழன் டெவலப்மென்ட்(Development) லும் நம் நாயகி டெஸ்டிங் (Testing) லும் வேலை செய்பவர்கள்....

பொதுவாக எல்லா IT நிறுவனங்களிலும் டெவலப்மென்ட் டீமும் டெஸ்டிங் டீமும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி எப்பவும் முறைத்து கொண்டே இருப்பார்கள்...

அது மாதிரி நம் நாயகனும் நாயகியும் இப்படி பட்ட எதிர் எதிர் பிரிவில் வேலை செய்ய, அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், மற்றும் IT அலுவலகத்தில் நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் நிறைந்ததே இந்த கதையின் போக்கு...

இது ஒரு மோதல் + காதல் + கலாட்டாக்கள் கலந்த ஜாலியான கதை... முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக எழுதிய கதை..இந்த கதையை தொடர்ந்து படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

 

முன்னுரை:

னது காதோடுதான் நான் பாடுவேன் கதையில் கெஸ்ட் ரோலாக வந்த மகிழன்தான் இந்த கதையின் நாயகன்...  

காதோடுதான் நான் பாடுவேன்  கதையை படித்திராதவர்களுக்கு அதன் சிறு சுருக்கம்...

சிவகாமி – இராணுவத்தில் பணிபுரிந்து இறந்த ஒரு இராணுவ அதிகாரியின் மனைவி.. அவருக்கு நிகிலன், மகிழன் மற்றும் அகிலா என்று மூன்று பிள்ளைகள்... தன் கணவன் இறந்த பிறகும் தனி ஆளாக நின்று  தன் பிள்ளைகளை  வளர்த்து விட்டார்..

நிகிலன் IPS முடித்து சென்னையின் புகழ் பெற்ற அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர்  ஆக இருக்கிறான்... மகிழன் IT துறையில் வேலை பார்க்கிறான்...

31 வயது முடிந்தும் நிகிலன் திருமணத்திற்கு ஒத்து கொள்ளாததால் தன் அன்னையுடன் இணைந்து நாடகமாடி நிகிலனுக்கு மதுவந்தினியுடன் திருமணத்தை  நடத்தி வைக்கிறான் மகிழன்..

அதனால் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவன் தன் அண்ணன் மகள் பிறந்த பிறகு திரும்ப வந்து தன் குடும்பத்துடன் இணைகிறான்...

இனி அவன் வாழ்வில் நடக்கும் சம்பங்கள்தான் இந்த பயணம்..இந்த கதையின் நாயகன் மகிழன் என்றாலும் அவன் குடும்பத்தை சேர்ந்த உங்கள் மனதுக்கு பிடித்த உறுப்பினர்கள் சிவகாமி, நிகிலன், மது,  அகிலா ஆகியோரும் இந்த கதையில் அப்பப்ப வந்து போவார்கள்.. வாங்க இனி நம் பயணத்தை தொடங்கலாம்.....

****** 

அத்தியாயம்-1

சென்னை ECR ரோட்...

காலை பதினொன்று மணிக்கு மேல் ஆகியும் இன்னும் மக்கள் தங்கள் அலுவலகத்துக்கு அவசரமாக பறந்து கொண்டிருந்தனர்....

அட்லீஷ்ட் மதியத்திற்கு முன்னதாகவாது அலுவலகத்துக்கு சென்று விட வேண்டும் என்று ஒவ்வொருவரும் தங்கள் வாகனங்களை விரட்டி கொண்டிருந்தனர்..

சிலரோ இந்த நேரத்துக்குள்  அலுவலகத்தை அடைந்து விடலாம் என்று கால்குலேசன் போட்டு வீட்டில் இருந்து கிளம்பி இருக்க, எதிர்பாராத போக்குவரத்து நெரிசலால் அவர்கள் போட்ட கணக்கு தப்பாகி விட, அவர்கள் அட்டென்ட் பண்ண வேண்டிய மீட்டிங் சென்னை ட்ராபிக் விலகும் வரை காத்திருக்காமல் அது பாட்டுக்கு ஆரம்பித்து இருந்தது....

உரிய நேரத்தில் அலுவலகத்தை அடைய முடியாமல் அந்த ட்ராபிக் ஐ திட்டி கொண்டே அலைபேசியிலயே கான்பிரன்ஷ் காலில் என்ட்ரியாகி உரையாடலை கவனித்து வந்தனர்...

காரில் வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.. இரைச்சல் இல்லாமல் கான்பிரன்ஷ் ல்  அட்லீஷ்ட் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என உள்வாங்கி கொள்ள முடியும்...

ஆனால் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பாடுதான் திண்டாட்டம்...

முக்கியமான conference call ஆக இருக்கும் பட்சத்தில் மேனேஜர் திட்டுவாரே என்று பயந்து கொண்டு அவர்களும் கான்பிரன்ஸ்  அட்டென்ட் பண்றேன் பேர்வழி என அலைபேசியில் கான்பிரன்ஸ் நம்பரை தட்டி விட்டு தங்கள் பெயரை சொல்லி ஒரு அட்டென்டன்ஸை போட்டுவிட்டு  பின் அலைபேசியை ம்யூட்( mute) ல் போட்டு தங்கள் பாக்கெட்டில் போட்டு விடுவர்...

அங்கு என்ன பேசுகிறார்கள் என கேட்க ஆர்வம் இருந்தாலும் வாகன இரைச்சலில் சரியாக கேட்காது... ஏதாவது கேள்வி வந்தால் மற்றவர்கள் கேட்டது ஒன்றும் இவர்கள் பதில் சொல்வது ஒன்றுமாக ஏதோ உளறி  சமாளித்து முடிப்பர்....

ப்படியாக போய் கொண்டிருந்த  அந்த பரபரப்பான நாளில் மற்றவர்களை போல அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிட்டதே என பதற்றம் எதுவும் இல்லாமல் கூலாக தன் ஷ்கூட்டியை ஓட்டி கொண்டிருந்தாள் அவள்....

முகத்தை ஒரு துணியால் மூடி வெறும் கண்கள் மட்டும் வெளியில் தெரிய, தலையில் ஹெல்மெட்டும், கைகளுக்கு  கை உறை அணிந்து எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ,  இலகிய முகத்துடன் தன் வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள்...

அவ்வளவு நெரிசலிலும் டென்சன் ஆகாமல், மற்றவர்களை போல ட்ராபிக் ஐ திட்டாமல்  கிடைக்கும் குறைந்த இடைவெளியிலும் இடம், வலம் என புகுந்து லாவகமாக தன் வாகனத்தில் பறந்து கொண்டிருந்தாள்...  

சிறிது தொலைவில் டிராபிக் சிக்னல் வந்திருக்க, தன் வண்டியை மெதுவாக்கி  நிறுத்தியவள் சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்..

சில விநாடிகளில் வேடிக்கை பார்ப்பது போர் அடிக்க, அருகில் நின்றிருந்தவர்கள்   ஒவ்வொருவரையும் உற்று நோக்கி அவர்களை  பற்றி மனதினில் கமென்ட் பண்ணி சிரித்து கொண்டிருந்தாள்...

திடீரென்று அவள் ஹேன்ட்பேக்கில் இருந்த அலைபேசி  அலறியது...

அழகான பாடல்தான் ரிங்டோனாக வைத்திருந்தாள்....

செந்தூர பூவே ….  !!!

செந்தூர பூவே...  செந்தூர பூவே...

ஜில்லென்ற காற்றே...  என் மன்னன் எங்கே

என் மன்னன் எங்கே

நீ கொஞ்சம் சொல்லாயோ !!!

என்று அவளின் அலைபேசி அவள் மன்னனை தேடி அழைத்தது...

தன் ஷ்கூட்டியில் அமர்ந்து இருந்தவள் குனிந்து முன்னால் வைத்திருந்த தன் ஹேன்ட்பேக்கை திறந்து தன் அலைபேசியை எடுக்க மனமில்லாமல் விட்டு விட, அது மீண்டும் மீண்டும் அவள் மன்னனை தேடி அலறியது....

டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்ததால் அனைத்து  வண்டிகளும்  ஆப் ஆகி சைலன்ட் ஆக நிற்க, அவள் அலைபேசியில் இருந்து சத்தமாக ஒலித்த அந்த பாடல் அனைவரின் காதிலும் விழுந்தது....

அந்த பாடலும் அதன் வரிகளையும்  கேட்டு எல்லோரும் திரும்பி அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்...

அதிலும் அருகில் நின்ற சில இளைஞர்கள் இவளை பார்த்து  குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அவளோ கையை நீட்டி கொன்னுடுவேன் .... என்ற ஆக்சனை காட்டி அவர்களை பார்த்து முறைத்தாள்.....

அதற்குள் அவள் எடுக்காததால்  அணைந்திருந்த அவள் அலைபேசி மீண்டும் அலர,