Chillzee KiMo Books - ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ் : Ragasiya Snegithane!!! - Padmini Selvaraj

ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ் : Ragasiya Snegithane!!! - Padmini Selvaraj
 
TEN CONTEST 2019 - 20 - Entry # 03

Story Name - Ragasiya snegithane

Author Name - Padmini Selvaraj

Debut writer - No

ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை

கிராமத்தைச் சேர்ந்த வெகுளியான பேதைப் பெண் நம் கதையின் நாயகி.. தன் கல்லூரி படிப்பை முடித்து வாழ்வின் அடுத்த நிலையான திருமணத்திற்கு காத்து நிற்கும் பருவ மங்கையவள்..

எல்லா பெண்களையும் போல தன் திருமண வாழ்க்கையை பற்றி பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் சுமந்து நிற்பவள்..அவள் ஊர் எல்லையை கூட தாண்டியிராதவள் சந்தர்ப்ப சூழ்நிலையால், திருமணம் முடித்து நகரத்துக்கு தன் கணவனுடன் குடியேறுகிறாள்..

கூடவே இன்றைய நவீன பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் பழக்கமாகிறாள்.. அதனால் அவள் வாழ்க்கை படகு பெரும் சுழலில் சிக்கி தடம் மாறுகிறது..

அவள் கனவு கண்டு கொண்டிருந்த அவளுடைய கற்பனை, கனவு வாழ்க்கை நிறைவேறியதா?? தடுமாறிய அந்த பேதைப் பெண்ணின் வாழ்வு மீண்டும் நேரானதா? இல்லை அந்த சுழலில் சிக்கி அழிந்து போனாளா? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

என்னுடைய இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..நன்றி !!! Happy Reading!!!

***

அத்தியாயம்-1

பெங்களூர்...

இந்தியாவின் சிலிக்கான் வேலி(Silicon Valley) என்று அழைக்கபடும் நகரம்.. இந்திய மொழிகளில் பாதிக்குமேல் இங்கு வசிப்பவர்களிடம் உலா வரும்..

பெரும்பாலான மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான வேலை பணிகளுக்காக மக்கள் இங்கு குடியேறி வருகின்றனர்..

ஆரம்பத்தில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வர ஆரம்பித்தனர்..

அதை தொடர்ந்து அந்த நிறுவனங்களில் பணி புரிய கடைநிலை ஊழியர்கள், மென்பொருள் நிறுவனங்களை கட்டுவதற்கு கட்டுமான துறையில் பணி புரிய ஆட்கள், வீட்டு வேலை செய்ய ஆட்கள் அதை தொடர்ந்து காய்கறி விக்க  என்று அருகில் இருக்கும் மாநிலங்களில் இருந்தும் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வேலைக்காக குடியேறி இருக்க, இப்பொழுது மற்ற மாநிலத்தவர்கள் தான் அதிக  விழுக்காடு வசிக்கின்றனர் என்ற நிலையில் உள்ள நகரம் பெங்களூர்....

எங்கு பார்த்தாலும் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் என்று வீற்றிருந்த  மரங்களும் எப்பொழுதுமே மிதமாக வீசும் சில் என்ற மெல்லிய குளிர்  காற்றும் தெருவுக்கு ஒன்று என்று வீற்றிருக்கும் மால்கள்(mall), எங்கு சென்றாலும் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் வாகனங்களும் அதனால் ஆங்காங்கே கூடும் வாகன நெரிசல்களும் இந்த நகரத்தின் தனித்துவம் ஆகும்..

இரவு மணி பத்தாகிய பொழுதும் நகரத்தின் உற்சாகம் இன்னும் குறைந்த பாடில்லை..இப்பொழுதுதான் மக்கள் இன்னும் புத்துணர்ச்சியுடன் ஆங்காங்கே குழுமி எதையாவது சாப்பிட்டு கொண்டே அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்..

சொமாட்டோ (Zomato), ஸ்விக்கி(swiggy)  சீருடை அணிந்த டெலிவரி பையன்கள் நிறைய பேர் இப்பொழுதுதான் தங்கள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக விரைந்து கொண்டிருந்தனர் தாங்கள் கொண்டு வரும்  உணவை அதன் உரிமையாளரிடம் சேர்ப்பதற்காக..   

இப்படி நகரமே இரவில் சுறுசுறுப்பாக இருக்க, அந்த சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் தன் படுக்கை அறையில் அமர்ந்து தன் அலைபேசியையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்....  

அப்பொழுது மெல்லிய தென்றல் வீச, எங்கேயோ மறந்து திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழியாக அந்த தென்றல் புகுந்து வந்து அவளின் முன் உச்சி நெற்றி கேசம் கலைத்து பின்  அவள் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டு அவள் மேனியை தழுவியது...

அதில் சிலிர்த்தவள் அதன் முத்தத்தையும் தழுவலையும்  ரசித்து கொண்டே தன் அலைபேசியில் இருந்த வாட்ஸ்அப் ஐ  ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவளை ஏமாற்றாமல் அதன் திரை ஒளிர்ந்தது..  

“ஹாய் பேபி... ஹவ் ஆர் யூ ? “ என்று ஒளிர்ந்ததை கண்டதும் உள்ளம் துள்ளி குதித்தது அவளுக்கு...

இதுவரை அவனிடம் இருந்து மெசேஜ் எதுவும் வராதா என்ற ஆவலுடன் தன் அலைபேசியை பார்த்து கொண்டிருந்தவளுக்கு திடீரென்று மின்னிய வார்த்தைகளை கண்டதும் அதுவரை வாடியிருந்த அவள் முகம் சூரியனை கண்ட தாமரை போல அழகாக மலர்ந்தது...

ஆனாலும் உடனே அவனுக்கு பதில் அளிக்காமல் சில நொடிகள் கழித்தே தன்