காற்றின் கனல் - E.தமிழ் மதி : Katrin kanal - E.Tamil Mathi
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 08

Story Name - Katrin kanal

Author Name - E.Tamil Mathi

Debut writer - No


காற்றின் கனல் - E.தமிழ் மதி

அறிமுகம்

இவ்வுலகில் படைக்கப்பட்ட அற்புதமான படைப்பு என்பது ஒரு உயிரினமோ அல்லது ஒரு தாவரமோ அல்லது ஒரு இயற்கை காட்சியோ அல்ல.இவ்வுலகில் படைக்கப்பட்ட அற்புதமான மற்றும் விசித்திரமான படைப்பு மனிதனின் வாழ்வுதான்.வாழ்வு இது தான் உங்கள் வாழ்வில் விசித்திரம் எது ..?இயல்பு எது..? தத்துவம் எது ..?அழகு எது ..? அவலம் எது..? உண்மை எது..? பொய் எது..? என பல்வேறு உணர்வுகளுக்கும் விடையளிக்கிறது.நாம் வாழும் வாழ்க்கை பிரபஞ்சம் போன்று கணிக்க முடியாத ஒன்றே.எல்லோர் வாழ்வும் தட்டையாக இருப்பதில்லை.ஏதோவொரு சுவாரஸ்யத்தை வாழ்க்கை நமக்கு இன்பத்தின் மூலமாகவோ துன்பத்தின் மூலமாகவோ தந்து படம் கற்பித்து புதிய பாதை உருவாக்க உதவுகிறது.

சில நேரம் நீங்கள் இதுதான் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடப்பது அரிதினும் அரிது.இது நடக்காது என நினைக்கிற பொழுது அது நடப்பது மட்டுமல்லாமல் நாட்டியம் ஆடவும் செய்யும்.அனைவரும் காதல் குறித்தும் வாழ்க்கை துணை குறித்தும் பலவாறு கனவு காண்போம் ஆனால் நாம் நினைத்து பார்த்திட முடியாத ஒருவர் நமக்கு அமைவார்.பொட்டல் காடுகளை கொண்ட தமிழகத்தின் சிற்றூரில் நீங்கள் வசித்திருப்பீர்கள் .ஆனால்,ஒரு நாள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்.அரண்மனை ராஜாவாகவும் ராணியாகவும் வலம் வந்த நீங்கள் திடீரென பாதாளத்தில் விழுந்து கிடப்பீர்.ஏன் 2020ல் அமைதியாக எல்லோரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது சட்டென ஒரு சிறிய கொரோனா என்ற வைரஸால் மாத கணக்காக நாடே வீட்டில் முடங்கியது.

அதுவரை பொருளாதாரத்தில் முதலிடம் பெற போட்டியிட்ட நாடுகள் இன்று அத்தியாவசிய தேவைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றன.வாழ்க்கை எவ்வாறு நம்மை மாற்றுகிறது என்று பாருங்கள்.நாம் அனைவரும் பாதைகளை திட்டமிடுகிறோம்ஆனால் வாழ்வானது நம் வாழ்க்கையை திட்டமிடுவதில்லை சதுரங்க ஆட்டத்தில் ஒரு சிப்பாய் போல் நம்மை தேவையான தருணத்தில் எல்லா பாதையிலும் செல்லும் ராணியாகவோ நேர் பாதையில் செல்லும் யானையாகவோ குறுக்கு பாதையில் செல்லும் மந்திரியாகவோ மாற்றுகிறது.

சூழ்நிலைதான் ஒருவனின் குணத்தை தீர்மானிக்கிறது.அவன் குணம்தான் அவனது அடுத்த நகர்வுகளை தேர்வு செய்கிறது.அந்த நகர்வுதான் அவளை/அவனை முடிவு நோக்கி கொண்டு செல்ல உதவுகிறது.

வாழ்வானது அற்புதமானது அது கிடைப்பது எப்படி அது என்ன என யாருக்கும் தெரியாது.தெரிந்து கொள்ளவும் யாரும் முயல்வதில்லை.சிலர் அது குறித்த தேடலில் இறங்கியவர்களும் தோற்றுத்தான் போயுள்ளார்கள்.

நாம் நினைத்திருப்போம் எல்லாரும் ஒரே மாதிரிதான் தோன்றுகிறோம் மறைகிறோம்எல்லாரையும் மனிதன் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் இடையில் வாழும் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு வேறுபாடுகளை கொண்டுள்ளது.

வாழ்வு எதிர்பாரா தருணங்களை கொண்டது.

 

அத்தியாயம் 1

 

 

2020

பிப்ரவரி 8

கோயம்பத்தூர்

 

அழியாத இயற்கை தன்னை பீடபூமியின் எல்லையில் போர்த்தியிருந்தது.அம்மேற்கு தொடர்ச்சி மலை முழுதும் காய் கனி செழித்து வளர்ந்து கொண்டிருக்கும்போது அதன் கீழே சம வெளியில் தென்னை தோட்டங்கள் நிலங்களை ஆக்கிரமித்து குளிர் காற்று நிரம்பிய மேகங்களுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்த வேளையிலும் தொழிற்சாலை இயங்கி நாட்டை செழிப்பாக்கும் கோயம்பத்தூரில் ஒரு  தென்னை மர தோட்டத்தில் ......

 

 

   சொட்டு நீர் பாசனத்திற்காக அமைக்கப்பட்ட சிறு கருக்குழாய்களையும் கூட மறைக்கும் அளவுக்கு புல் நிறைந்த அத்தோட்டத்தில் கட்டைகளை மூட்டையாய் கட்டி வயது முதிர்ந்த ஒருவர் ஆனால் கட்டுமஸ்தான உடல் கொண்ட அவர் அக்கட்டைகளை ஒரு கையால் தூக்கி கொண்டு வந்து பிரியாணி செய்யும் இடத்தில் போட்டார்.அங்கு புகை மண்டலம் சூழ்ந்து சமையல் பாத்திரங்களை மறைத்திருக்கும் போது அப்பாத்திரத்தின் அடியின் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் அருகில் நெருப்பை தன் கண்ணாக கொண்ட ஆதி கல்லில் அமர்ந்து தன் கால்களை நீட்டி புல்வெளியில் பரப்பி சுடர்விட்டு எரியும் செந்தீயை ஆட்கொண்டிருந்தான்.

 

அண்ணா 11 மணிக்கு வண்டில ஏத்துன்னா 12 மணிக்கு அன்னதானம் போட ஆரம்பிச்சர்லாம்” என்றான் ஆதி ஈஸ்வரனை நோக்கி.

“தம்பி நம்ம அப்பா அங்க வந்துருவாரா” என கொங்கு தமிழில் மரியாதையோடு கேட்டார் அப்பெரியவர்.

“இல்லிங்க அவரால முடியல அதுதான் நா வந்தேன்.இந்த பங்குனி உத்திரம் தை பூசம் வந்தாலே எங்கப்பாவ  கைல புடிக்க  முடியாது அந்த அளவுக்கு மருதமலை பழனி ல ஓடி ஓடி  அன்னதானம் போடுவாரு இப்ப முடியாம போச்சுன்னு வருத்த படுறாரு” என சோக தொனியில் கூறினான். 

“விடு முருகனுக்கு பன்றிங்களா எல்லாம் அவர் குணப்படுத்திருவாரு” என  அவர் ஆறுதல் படுத்த 

“அவர் என்ன நல்லவங்களையே சோதிப்பாரா” என அலுத்து போன குரலில் கேட்க.

“ஆமா தம்பி சோதிக்கறாரு நம்மள ஆட்டி படைக்கிறவன் அவனுக்கு  விஸ்வாசமா ஒருத்தங்க  இருக்கானான்னு சோதிக்கமாட்டானா “ 

ஆதி சிறு புன்னைகைத்துவிட்டு “சாமிய விட்டு தர மாட்டீங்க போல” 

 

 

சிறுது நேரம் கழித்து அத்தோட்டத்தில் உடன் வேலை பார்த்த நான்கு சிறுவர்களை அழைத்து  பாத்திர பண்டங்களை  வண்டியில் ஏற்றி முகில்கள் முருகனின் வேலை உரசும் பகுதிக்கு விரைந்தனர். 

 

பழுப்பு நிற சாலைகள் கண்ணிற்கு படாத அளவிற்கு மனித தலைகள் அவ்விடத்தை ஆக்கிரமித்து இருந்தன.தை பூச கூட்டம் பத்து ஊர் திருவிழாக்களை ஒன்றாக காண்பது போல் இருந்தது. பேருந்து நிறுத்தம் அருகே வண்டியை நிறுத்தி பாக்கு மட்டையில் உணவை கொடுத்து கொண்டிருந்தனர். உணவு என்பது பொதுவான ஒன்று அதை குறிக்கும் விதமாக பல இளம் ஆண்களுக்கும்  பல இளம் பெண்களுக்கும் உணவை அளித்து கொண்டிருக்கும் போது. ஆதி அருகே பரிமாறி கொண்டிருந்த சிறுவன் “அண்ணா நீ மாஸா இருக்கண்ணா உன்ன பாரு அவங்க சைட் அடிக்கிறாங்க” என்றான் குரு குரு குரலுடன்.ஆதி அவனை நோக்கி சிறு முறைப்பு