Chillzee KiMo Books - அன்றில்… - எஸ். பர்வின் பானு : Andril... - S Parveen Banu

அன்றில்… - எஸ். பர்வின் பானு : Andril - S Parveen Banu
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 13

Story Name - Andril

Author Name - S Parveen Banu

Debut writer - No


அன்றில்… - எஸ். பர்வின் பானு

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக எஸ். பர்வின் பானு பகிர்ந்திருக்கும் நாவல்.

 

                           1

 காஞ்சிபுரம் மாவட்டம்…

உத்திரமேரூர் வட்டம்..! சுந்தர வரதராஜ பெருமாள் கோவில்..!

  கோயிலின் முகப்பில் வழிபார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார் சண்முக வடிவேலு..! பட்டு வேட்டியும், அசல் தறி சில்க்குக் சட்டையும் அவரின் பகட்டோடு சேர்ந்து பகுமானம் பேசிக் கொண்டு இருந்தது..! காத்திருந்த ஆண்களும் பெண்களும் சலிப்புக்காட்டிக் கொண்டு நின்றார்கள்.

  உச்சுக் கொட்டினால் எங்கே சண்முக வடிவேலு முகம் சலிப்பாரோ என்று தான் அவர்கள் பாதையைத் திண்று கொண்டு நின்றார்கள்..!

   இளம்வெயில் அங்கே  மண்ணில் மல்லாந்து படுத்து இருந்தது..! மெல்லிய பூங்காற்று அவர்களின் நெஞ்சத்தை நீவி விட்டுக் கொண்டு இருந்தது..! கொத்துக் கொத்தாய் வந்து முகத்தில் மொத்திய காற்றை கண்கள் குறுக்கி கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் ஜனத் திட்டுக்கள்..!

 ’’ ஏன்மாமா, இன்னும் எம்புட்டு நேரமாகும்…’’ கைக் கடிகாரத்தை திருப்பிப் பார்த்துக் கொண்டார், சாரங்கன்..!

 ’’ வந்திருவாங்க மச்சான்..! பொறுத்துக்கங்க..! இந்தாம்மா விசாலாட்சி பொம்பளையாளுகளை கூட்டிட்டுப் போய் கோயிலுக்குள்ள உட்கார்த்தி வைங்க..! நான் வந்ததும் கூப்பிடறேன்..! ‘’ தடித்த தேகத்தை தூக்கி கூட்டத்தின் முன்னாகச் சென்று அவர் கட்டளை இட, பெண்கள் மெல்ல பட்டுப் புடவைகள் சரசரக்க உள்ளே அகன்றார்கள்..!

    ‘’ சண்முகா, என்னது இது..? நம்ம ஊர்ல என்ன, மாப்பிள்ளையே இல்லாமயாப் போச்சு..? யாரோ எவரோ..? ஒத்தைப் புள்ளையை பெத்து வச்சிருக்க, அதைக் கொண்டு போய் தள்ளிக் கொடுத்துட்டு என்னய்யா செய்வே..?’’ கேள்வி கேட்ட சித்தப்பாவை கொஞ்சம் வலியான விழிகளோடு பார்த்தார்..!

   ‘’ விடுங்க சித்தப்பா..! யாருக்கு எங்கேன்னு அந்த சுந்தரவரதராஜர் எழுதி வச்சிருக்காரே, அப்படித்தான் ஆகும்..! எங்கே இருந்தாலும் புள்ளைங்க நல்லா இருக்கணும்..! விடுங்க…’’ பேச்சை இடை வெட்டினார்..!

       பட்டாபி எல்லோருக்கும் காப்பியோடு வந்தான்..! கேத்தலில் இருந்த காப்பியை யூஸ் அண்ட் த்ரோ டம்ளர்களில் சரித்துத் தர, வாங்கியவர்கள் இதமாய் தொண்டையில் சரித்துக் கொண்டார்கள்..!

     ‘’ ஏன் அண்ணீ..! உங்க நாத்தனார் புருசன் ஒண்ணுமத்தவரா என்ன..? காப்பியைத் தர்றாரு..! ஏன் எதுவும் கூல்ட்ரிங்ஸ் வாங்கித் தந்தா ஆகாதாக்கும்..!’’ காதைக் கடித்த உறவுக்காரியை முறைத்தாள் இன்னொரு உறவுக்காரி..!

     இதுதான் உறவு நிலைகளின் சலசலப்பே..! இந்த மினுக்குகள் இல்லாவிட்டால் எந்த விசேசமும் களைகட்டாது..!

     காத்திருத்தலின் நேரத்தை நீடிக்க வைக்காமல் கோயில் எல்லையில் வாகனங்கள் வந்து வரிசைகட்டத் தொடங்கியது..! இரண்டு குவாலிஸ்களும், ஒரு மினி வேனும் வந்து நின்றது..!. பரபரப்புக் கூட எல்லோரும் வண்டியை நோக்கி நகர ஆலயத்தைச் சுற்றி இருந்த கிரானைட் சுவரை ஒட்டி நின்றவர்கள் மெல்ல நகர்ந்து வந்தார்கள்.

     ஆணும் பெண்ணுமாய் பலர் மெல்ல மெல்ல உதிர, இறுதியில் அவன் உதிர்ந்தான்.! அவனின் முகமும் கம்பீரமும், அழகும் அங்கே அத்தனை பேரையும் வசீகரிக்க, அவன் பேரும் வசீகரன் என்றே இருந்தது, இளம் மருத்துவர்..! துறைக்கு வேண்டிய கம்பீரம், துளிகூட குறையாமல் மின்னாமல் மிழுங்காமல் இருந்தது..!

     ‘’ ஆத்தாடி..! இதுதான் மாப்பிள்ளையா..? எம்புட்டு உசரம்..! எம்புட்டு அழகு…’’ மேவாயைக் கையில் தாங்கியது பெண்கள் கூட்டம்..!

     வரவேற்புக்கள் அங்கே வரிசங்கமாய் ஒலிக்க, எல்லோரும் இவர்களைத் தொடர்ந்து கோயிலுக்குள் நுழைந்தார்கள்..! சுந்தரவரதராஜாப் பெருமாளையும், ஆனந்தவல்லித் தாயாரையும் சேவித்து முடிய, ஓரமாய் நின்று கைகளைக் கட்டிக் கொண்டு இறுகிய முகமாய் நின்றான் வசீகரன்..! கண்களை அழகாய் அலங்கரித்து இருந்தது ப்ளைன் க்ளாஸ்..!

    சண்முக வடிவேலு கரங்களை பிணைத்துக் கொண்டு வெகுநேரம் மட்டுக்கும் சன்னிதியில் நின்றார்..!

    ‘’  நல்லநேரம் தப்பப் போகுது சண்முகா..! கிளம்பலாமா..?’’ பக்கத்தில் வந்து கேட்டார் மகாதேவன். மெல்ல கண் திறந்தார். இமை பிரித்த சண்முகத்தின் கண்களுக்குள் அடைகாத்து இருந்த கண்ணீருக்கு காரணம் மகாதேவனுக்குத் தெரிந்தே இருந்தாலும், அதை வெளிக் காட்டிக்