தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன் : Tholaivil Ni Ninaivil Naan - Sesily Viyagappan
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 16

Story Name - Tholaivil Ni Ninaivil Naan

Author Name - Sesily Viyagappan

Debut writer - Yes


தொலைவில் நீ நினைவில் நான் - செசிலி வியாகப்பன்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக செசிலி வியாகப்பன் பகிர்ந்திருக்கும் நாவல்.

 

அத்தியாயம் 1

 

ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்

நினைவு முகம் மறக்கலாமோ

 

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்

கண்ணனழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் - அந்த

நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

 

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த

வையம் முழுதுமில்லை தோழி

 

டெல்லி மாநகரம்

 

பாரதி வரிகளில் தன்னை தொலைத்த படி அந்த மிகப்பெரிய அடுக்கு மாடி குடியிருப்பின் கண்ணாடி சன்னல் வழியே வெளியில் தெரியும் அம்மாவாசை இருளை வெறித்துப் பார்த்துக்காெண்டிருந்த ஒளிர்மதி.

 

சூரியன் உறங்கச் சென்ற பின்னும் புத்துணர்வாேடு இயங்கிக்காெண்டிருக்கும் நகரின் பரபரப்பு எதுவும் ஔிர்மதி மனதில் பதியவில்லை.

 

ஆர்பரிக்கும் கடலிற்கு எதிர்பத ஆழத்தின் அமைதியென உள்ளத்தில் எழும் எண்ண அலைகளை மற்றவற்களிடம் மறைத்து வாழப் பழகிக் கெண்டவளுக்கு உள்ளத்தின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.

 

ஔிர்மதியை பாெறுத்தவரை அவள் வாழ்வில் 'கவலை என்றால் என்ன விலை?' என்று கேட்ட காலம் என்றாே முடிந்து  முடிந்து விட்டது.

 

இன்று அவள் மனமும் வெளியில் சூரிய விளக்கில்லா வானத்தில் நிறைந்திருக்கும் இருள் பாேல கவலைப்  பரவிக்கொண்டிருந்தது.

 

தனிமையில் தன்னை விரட்டும் நினைவுகள் சுகமா? சுமையா? என்று மட்டும் அவளால் வரையறுக்க முடியவில்லை. 

 

எந்த நினைவுகளை விட்டு விலகி வரவேண்டும் என்று நினைக்கின்றாளாே அதை மட்டும் அவளால் செய்ய முடியவில்லை.

 

இனிய நினைவுகள்......

இனித்த நினைவுகள்......

இன்றும் நினைத்தாளும் இனியை தரும் நினைவுகள்.....

 

இன்னும் மூன்று தினங்களில் இங்கிருந்து புறப்பட்டு வந்து சேர வேண்டிய உத்தரவு கிடைத்த பின்னும் புறப்பட முரண்டிய மனதை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தள்.

 

இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்.

புறப்பட்டால் பிறந்த ஊருக்கும் சென்றாக வேண்டும்.

அதன் பின்........?

 

மீண்டும் அதே பேச்சுக்கள்....