Chillzee KiMo Books - இதோ ஒரு காதல் கதை பாகம் 2 - பூர்ணிமா செண்பகமூர்த்தி : Idho oru kadhal kathai - Poornima Shenbaga Moorthy

இதோ ஒரு காதல் கதை பாகம் 2 - பூர்ணிமா செண்பகமூர்த்தி : Idho oru kadhal kathai - Poornima Shenbaga Moorthy
 

இதோ ஒரு காதல் கதை பாகம் 2 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

முன்னுரை:

வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம்.

படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை” .

முதல் பகுதியில் சந்தர்ப்பவசத்தால் அவர்களின் காதல் இருவரும் சொல்வதற்குள் பிரிந்து விட்டது போல் அமைந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் காதலை ஒத்துக் கொண்டு காதலித்து இருந்தால் அவர்களின் கல்லூரிக்காலம் எப்படி இருந்திருக்கும் என்பதே இந்த இரண்டாவது பாகம்.

கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

 

“இதோ ஒரு காதல் கதை -முதல் பாகம்” கதைச் சுருக்கம்:


ரம்யா பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியில் படித்தவள்.

 

இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்கிற அவளின் ஆசைக்காக அவள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேர்த்துவிடும் அப்பா. இருபாலர் பயிலும் கல்லூரி என்பதால் ஆண் மாணவர்களிடம் பேசக்கூடாது என்கிற அளவு கண்டிப்பான அம்மா.

 

தனது லட்சியத்தில் எந்த கவனச்சிதறலும் வரக்கூடாது என்னும் ரம்யாவைக் கல்லூரியில் கண்டதும் காதல் கொள்கிறான் தினேஷ்.

 

அவளின் மனத்தை வெல்ல அவள் செல்லுமிடம் எல்லாம் சென்று, அவளிடம் பேச முயற்சி செய்து தோல்வியுற்றுக் கொண்டே இருக்கிறான்.

 

ரம்யாவின் பள்ளித் தோழி சத்யா கலைக்கல்லூரி ஒன்றில் பயில்கிறாள். நேரிலோ இல்லை போனிலோ எப்படியேனும் இருவரும் தினமும் பேசிவிடுவார்கள். கண்மணி ரம்யாவின் கல்லூரித் தோழி. தினேஷின் நண்பர்கள் ராபின், கார்த்திக். கண்மணியும் கார்த்திக்கும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். நட்பு காதலாகி இப்போது வீட்டில் தெரிந்து இருவரின் பெற்றோர்களும் மிகுந்த கண்டிப்புடன் நடத்துமளவு நிலைமையில் இருப்பவர்கள். ராபின் ரம்யாவின் அண்ணன் முறை உறவினன்.

 

குடும்பத்தில் பிரச்சினை ஏற்படவிடாமல் ரம்யாவை தினேஷிடம் இருந்து விலக்கி வைப்பதே அவன் நோக்கம். தினேஷுக்கு ரம்யாவிடம் நேரில் காதலைச் சொல்ல பயம். அவளுடைய வீட்டுக்குத் தொலைபேசியில் அழைப்பதும், பேசத் தயங்குவதுமாய் இருக்கின்றான்.

 

கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் அமைதியான குளம் போலிருந்த ரம்யாவின் உள்ளத்திலும் கல்லெறிந்து சலன அலைகளை உருவாக்குகிறது. இந்நிலையில்,முதல் செமெஸ்டர் வகுப்புகள் நிறைவடையும் இறுதி நாள் வருகிறது. இனி..

 

1.  இதோ ஒரு காதல் கதை  பாகம் 2 – அத்தியாயம் 1

 

18th November 2002

முதலாம் செமஸ்டர் இறுதி நாள். சொல்லிவைத்து வகுப்பு மாணவிகள் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்து வந்தனர். இது ஒன்று தான் எல்லாப் பிரிவினரும் சேர்ந்து இருக்கும் கடைசி வகுப்பு. அடுத்த செமஸ்டர் அவர்கள் துறைவசம் சென்று புதிய வகுப்பினருடன் பயிலத் தொடங்குவார்கள். இரண்டாவது பாடவேளை , இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் சார் பரீட்சைக்குத் தயாராகும்  விதம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.  எல்லாரும் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டு இருந்தார்கள். ரம்யாவும் தான்.

வெளியே ஓர் குரல், "எக்ஸ்கியூஸ்  மீ , சார் " என்றது.

சார் "எஸ்" என்றார்.

வெளியில் நின்றது வேறு யாருமல்ல தினேஷ்.

இந்த கிளாஸ் ரம்யாவை பிசிக்ஸ் டிபார்ட்மென்ட்  சாந்தி மேம் கூப்பிட்டுட்டு வரச் சொன்னங்க சார். 

ரம்யா எழுந்து "சார்" என்றாள்.

" யூ  மே கோ " என்றார். 

“தேங்க்யூ சார்” என்றவாறே வெளியில் சென்றாள். மனதுக்குள் சாந்தி மேம் இவன் கிட்ட போய் என்னை ஏன் கூட்டிட்டு வர  சொன்னாங்க ? மேடத்திற்கு வேற யாருமே கிடைக்கலையா ?அதுவும் இவனை விட்டு ? என்ற சிந்தனையுடன் அவன் பின் நடந்தாள். 

“எதுக்குக் கூப்பிட்டாங்க?”  அவரசமாக ரம்யா கேட்க..

“மாடில லேப்ல தான் இருக்காங்க. நீங்களே கேட்டுக்கோங்க !”

மாடிப்படி ஏறினார்கள் . நான்கு படிகள் ஏறியதும் தினேஷ் சட்டென்று நின்றான்.

“ரம்யா ஒரு நிமிஷம்!”

என்ன ?

தன்  கையில் இருந்து நான்காக மடித்த ஒரு பேப்பரை நீட்டினான் தினேஷ்.

“என்னது இது? என்கிட்டே தரச் சொல்லி  பிசிக்ஸ் மேடம் குடுத்தாங்களா?”

“இல்ல !  மேடம் உன்னைக் கூப்பிடவில்லை!”. 

“நான் தான் உன்னைக் கூப்பிட்டேன். இதைக் கொடுக்க. பிரிச்சுப் பார்.” 

பிரித்தாள் .

அதில் "ஐ  லவ் யூ " என்று  செந்நிறத்தில்  ரத்தத்தால் எழுதி இருந்தது.

பதறிப் போனாள் ரம்யா.

ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு..

"என்னது இது? யார்கிட்ட  கொடுக்கணும்?" என்றாள்.

தினேஷ் "உனக்குத் தான் ரம்யா,  உன்னைத் தான் ரம்யா நான் ! எப்படி சொல்றதுன்னு தெரியல?” " “நீயும், நீயும் தானே?சொல்லு!”

"நோ! நோ !" பேப்பரைக்  கசக்கி அவன் கையிலேயே திருப்பிக் கொடுத்து விட்டு வேகமாகப் படிகளில் இறங்கினாள்.

“ரம்யா! சொல்லிட்டுப் போ! ப்ளீஸ் ! “

“நோ!” என்றாள்  மறுபடியும் திரும்பி. 

வகுப்புக்குள் மறுபடியும் நுழைந்து தன்  இடத்தில் உக்கார்ந்தாள் , அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.  

“என்ன ஆச்சு? என்ன ஆச்சு ?” மெல்லிய குரலில் கேட்டாள் கண்மணி. ஒன்றுமில்லை “கண்மணி, எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுவியா  ?”

“கொஞ்சம் தண்ணி கொடேன்!

வாட்டர்பாட்டிலை எடுத்துத் திறந்து கண்மணி கொடுத்தும், ரம்யாவின் கை நடுக்கம் நிற்கவில்லை.

இப்படி நடக்கும் என்று அவள் ஒரு நாளும் எதிர்பார்க்கவில்லை! வகுப்பு முடிந்ததும் கண்மணியிடம் மட்டும் “ அந்த தினேஷ் இல்ல, அவன் என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணான்!”

நீ என்ன சொன்ன? என்றாள் கண்மணி.

“நோ!”ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு கிளாஸ் பக்கம் ஓடி வந்துட்டேன்.

“சரி! உன் முடிவை சொல்லிட்டேல!” ஒரு பிரச்னையும் இல்லை! ப்ரீயா விடு!”

“எவ்வளவு தைரியம் அவனுக்கு! மேம் கூப்பிடறாங்கன்னு பொய் சொல்லி கூப்பிட்டுப் போய் இப்படி சொல்றதுக்கு?”