Chillzee KiMo Books - இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா : Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha

இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா : Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha

இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா : Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 29

Story Name - Idhayam pesugindra varthai unthan kathil ketkumo

Author Name - Sasirekha

Debut writer - No


இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா

முன்னுரை

இரு மனைவிகளை திருமணம் செய்துக் கொண்ட நாயகனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இக்கதையாகும் இரு நாயகிகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க போராடும் அன்பான கணவனாக நாயகனும் கணவனின் அன்பிற்காக ஏங்கும் இரு நாயகிகளும் அவர்களுடன் கதையில் இணைந்து வரும் சொந்தங்களும் என கதையின் போக்கு அமைந்துள்ளது.

 

சென்னையில் பள்ளிவாத்தியார் உலகநாதன் வீட்டில்

”அப்பா ப்ளீஸ் நான் சிட்டி பொண்ணு சென்னையில வளர்ந்த பொண்ணு என்னை சிட்டியில இருக்கற மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செஞ்சி வைங்கப்பா இந்த கிராமமே வேணாம்” என்றாள் மைத்ரேயி

”அது என்ன குக்கிராமமா டவுன் போலதான் மாப்பிள்ளையும் தங்கமானவரு, நானே நேர்ல போய் பார்த்துட்டு வரேன் ஊரு தஞ்சாவூர் அடுத்த கும்பகோணம் 5 அடுக்கு ஷாப்பிங் மால் போல வைச்சி நடத்தறாரும்மா. கீழ் அடுக்குல துணிக்கடை 2வது அடுக்குல பாத்திரக்கடை 3வது அடுக்குல நகை கடை 4வது அடுக்குல வீட்டு உபயோகப்பொருட்கள் 5வது அடுக்குல கம்ப்யூட்டர் பர்னிச்சர்னு கடை பெரிசும்மா, நீ பார்த்தன்னா அசந்து போயிடுவ அவருக்கு ஒரே ஒரு தம்பி அவனும் அந்த கடையில அண்ணன் பேச்சை கேட்டுக்கிட்டு வேலை செய்றான். ஒரே தங்கச்சி அழகான வீடும்மா, அவர் என்கிட்ட எவ்ளோ பாந்தமா பேசறார்ன்னு தெரியுமா” என்றார் மைத்ரேயி தந்தை உலகநாதன்

“ஆனா என்னால எப்படி அந்த இடத்தில அட்ஜஸ்ட் பண்ணி வாழமுடியும் என்னால முடியாதுப்பா”

”ஏன் இப்படி சொல்ற நீ யாரையாவது காதலிக்கிறியா” என நேராகவே தன் மனதில் இருந்த சந்தேகத்தை முன் வைத்தார்

ஏற்கனவே அவளுக்கு 4 பேரின் பரிட்சயம் இருந்தது அவளே குழம்பிப்போய் இருந்தாள் இதில் தன் தந்தை வேறு புதிதாக மாப்பிள்ளை என ஒருவரை அறிமுகம் செய்வதை நினைத்து கலங்கினாள்.

இருக்கும் 4 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே ஒரு வேளை அப்பா பார்த்து வைத்த ஆள் நன்றாக இருந்தால் அவரை செலக்ட் செய்துவிடலாம் என்ற ஒரு எண்ணத்தில் இருந்தாள்

ஆனால்  மாப்பிள்ளை சென்னை போன்ற சிட்டியில் வாழ்பவர் அல்ல என தெரிந்ததும் அவள் உடனே தன் மனதை மாற்றிக்கொண்டாள். அவள் என்றால் அந்த 4 பேருக்குமே உயிர். அவள்தான் ஒவ்வொருவரையும் கல்யாணம் என்ற பந்தத்திற்கு தகுதியானவரா என்பதில் குழம்பி வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு வைத்தாள்.

இதில் அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் விஷ்வா ஒரு ப்ளே பாய். ஆண்கள் இருக்கும் இடத்தில் அவனை தேடினால் பிரயோசனமேயில்லை பெண்கள் இருக்கும் இடத்தில் கட்டாயம் அவன் இருப்பான். அழகானவன் அவனுடைய வசீகர பேச்சில் மயங்காதவர்கள் யாரும் இல்லை.

விஷ்வாவும் மைத்ரேயியும் சென்னையில் உள்ள பிரபலமான கம்பெனியில் பணிபுரிகிறார்கள்.

உலகநாதன் ஒரு முறை கோயில்கள் யாத்திரைக்காக தன் மனைவி அம்மா அப்பா தங்கை தங்கை கணவன் என நால்வரையும் அனுப்பிவைத்தார். எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற பஸ் விபத்தானது. அதில் 30 பேர் பயணித்தனர்.

அதில் 10 பேர் இறந்துவிட்டனர் மீதி பேருக்கு சரியான காயங்கள் ஏற்பட்டது. பாவம் உலகநாதனுக்கு அவருடைய மனைவி அம்மா அப்பா தங்கை தங்கை கணவன் அனைவருமே இறந்துவிட்டனர். தங்கை பெண்ணான ஜனனியை தன்னுடனே வைத்துக்கொண்டார். ஆனால் அவளோ தன் பெற்றோரின் இறப்பிற்கு பின் யாரையும் நம்பாமல் ஹாஸ்டலில் தங்கி எம்பிஏ படிக்கிறாள்.

அவளது பெற்றோர் இறந்தபின்பு அவர்களுடைய சொத்துக்களை விற்று அதில் வந்த பணத்தை பேங்கில் போட்டு தன்னுடைய செலவுகளை பார்த்துக்கொண்டாள். அவ்வப்போது உலகநாதன் வீட்டிற்கும் சென்று வந்தாள்.

விபத்தாகி 5 வருடங்கள் ஆன நிலையில் உலகநாதனால் தன்னுடைய மகனையும் மகளையும் நல்வழிப்படுத்த முடியாமல் போனது. அவர் சொன்ன வேலைகளில் சேராமல் அவர்கள் இஷ்டப்படி வேலையில் சேர்ந்தது ஒன்று

எது சொன்னாலும் அதை மதிக்காமல் எதிர்த்துப்பேசுவது ஒன்று

வீட்டிற்கு அடிக்கடி வராமல் அவரை இருவருமே கலவரப்படுத்தினார்கள் அது ஒன்று

பணம் தாராளமாக புரள்வதினாலும் கெட்ட சகவாசத்தினாலும் அவருடைய இரு பிள்ளைகளுமே யார் பேச்சையும் கேட்காதவர்களாகவும் தங்களுக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு மனம் போன வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

உலகநாதனின் மனைவி இருந்தவரை அவர் பொறுப்பாக பிள்ளைகளை பார்த்துக்கொண்டார். அவர் இறந்த பின்பு இவர்களுக்கு ஏதோ விடுதலை கிடைத்தது போல உணர்ந்து வானில் பறக்க ஆரம்பித்தனர். அவர்களை பிடிக்க முடியாமல் தத்தளித்தார் உலகநாதன்.

பையன் விஷ்வா இனி திருந்தவே மாட்டான் என்ற எண்ணம் அவரது மனதில் ஊறிவிட்டது. அதனால் பெண்ணை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என தீர்மானித்தார். இதில் தங்கை மகளுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படுத்த வேண்டும். அவருக்கு அவள் மட்டும்தான் ஒரே ஆறுதல்.