Chillzee KiMo Books - இதோ ஒரு காதல் கதை பாகம் 1 - பூர்ணிமா செண்பகமூர்த்தி : Idho oru kadhal kathai Pagam 1 - Poornima Shenbaga Moorthy

இதோ ஒரு காதல் கதை பாகம் 1 - பூர்ணிமா செண்பகமூர்த்தி : Idho oru kadhal kathai Pagam 1 - Poornima Shenbaga Moorthy
 

இதோ ஒரு காதல் கதை பாகம் 1 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

முன்னுரை:

வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை”. கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

 

1. இதோ ஒரு காதல் கதை பாகம் 1 – அத்தியாயம் 1

 

“அம்மா!அம்மா!” கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அமுதனின் குரலில் டன் டன்னாய் உற்சாகம்.

“என்ன அம்மு! ஒரே சந்தோசமா இருக்க?” அம்மா ஆவலுடன் கேட்க.

“எங்க டீம் பண்ண ஷார்ட் பிலிம் ஆல் இந்தியா லெவல்ல செலக்ட் ஆகி இருக்கும்மா!” ஸ்க்ரீனிங் ஐதரபாத்தில் நடக்கப்போகுது. அந்த சந்தோசம்தான்மா!”

“எல்லாம் உன் முயற்சிக்குக் கிடைச்ச வெற்றி தாண்டா தம்பி!” மகனின் நெற்றி தொட்டு முத்தமிட்ட அம்மாவிடம், “அப்பா எங்கே?” என்றான்.

அவர் ரூம்ல தாண்டா இருக்கிறாரு. உள்ளே சென்ற அமுதனைக் கூட கவனிக்காமல் எதோ சிந்தனையில் இருந்தார் அமுதனின் தந்தை திவாகர். என்னப்பா நான் வர்றது கூட தெரியாமல் ஒரே சிந்தனை? எதாவது பிரச்சினையா அப்பா? என்றான்.

இல்லை அமுதா! ஒன்னும் இல்லைடா! என்ன விஷயம்! உன் முகமே சொல்லுது எதோ சந்தோஷமான விசயம்னு

ஆமாப்பா! எங்க ஷார்ட் பிலிம் ஆல் இந்தியா லெவல்ல செலக்ட் ஆகிடுச்சு!

வாழ்த்துக்கள்டா! மென்மேலும் சிறப்பா பண்ணுங்க!

சரிப்பா!

அதற்குமேல் பேச ஒன்றுமில்லை என்பதுபோல் திவாகர் மௌனமாகிவிட, அமுதன் வெளியேறினான். “அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு? உடம்பு எதுவும் சரி இல்லையா? இல்ல அவர் ப்ராஜெக்ட்ல எதாச்சும் ப்ராப்ளம்? ஏன் இவ்வளவு டல்லா இருக்காரு?மற்ற நாள்ல இப்படி ஒரு விஷயம் சொன்னா, என்னைக் கட்டிப்புடிச்சு பாராட்டுவாரு! ஒன்னும் கண்டுக்கவே இல்லையே என்னதாம்மா ஆச்சு?

“அதான்டா எனக்கும் புரியல! ரெண்டு மூணு மாசமாவே சரியில்லடா! நான் கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாரு!”

கம்பெனில பிரச்சினையா?

அதெல்லாம் இல்லடா!அவர் கம்பெனில ப்ரஜெக்ட்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்காம்.

அப்புறம் என்னதான்மா பிரச்சினை!

அதை நீ அவர்கிட்ட தான்டா கேட்கணும்.

நீ வாரவாரம் உன் கல்லூரி தமிழ் மன்றம் பசங்க வெளியிடுறாங்கனு ஒரு பத்திரிக்கையைக் கொண்டு வர்றியே!

எது அந்த வெள்ளைத்தாமரைன்னு ஒரு இதழ் கொண்டு வருவேனே அதுவாம்மா?

அதே தாண்டா!

 

 

 

 

 

 

 

“அந்த புக் வர்றப்போ எதையோ அதில பார்க்கிறாரு. அதுக்குப்பிறகு அன்னிக்கெல்லாம் தான் இப்படியாகிடுறார். என்னோட பார்வைக்கு அப்படித்தான் தோணுது. நானும் அதில என்ன இருக்குன்னு மேலோட்டமா புரட்டிப்பார்த்தேன். அப்படி ஒன்னும் வித்தியாசமாத் தெரியல. உங்கப்பா கண்ணுக்கு எது தெரிஞ்சு அவரைப் படுத்துதோ? நீ வேணா எதாச்சும் தெரியுதான்னு பாரு!” “ஒரு புக்கைப் படிச்சிட்டா அப்பா இப்படி அப்செட்டா இருக்காரு?” அமுதனின் குரலில் வியப்பு. “தெரிலடா. உங்கப்பா கூட இத்தனை வருஷமா இருக்கேன். என்னால புரிஞ்சிக்க முடில. என்னோட கணிப்பு அந்த புக்ல இருக்கிற விஷயம் தான்னு”. “அந்த புக்லாம் எங்கே அம்மா இப்ப?” அமுதன் கேட்கவும், எல்லாத்தையும் அவர் ரீடிங் டேபிள் டிராவில் தான் வரிசையா அடுக்கி வச்சி இருக்காரு. அப்பப்போ எடுத்து வேற பார்த்துப்பாரு. என்ன தான் இருக்குன்னு முடிஞ்சால் கண்டுபிடிச்சு எனக்கும் சொல்லுறா!” சரி! இன்னைக்கு நைட்டு எல்லாத்தையும் நான் பார்க்கிறேன் அம்மா! “அது அவ்வளவு அவசரம் இல்ல அம்மு! நீ வந்து சாப்ட்டு ரெஸ்ட் எடு! நாளைக்குப் பகலில் பார்த்துக்கலாம்!” “சரிம்மா!”

அம்மாவிடம் சரி என்று சொல்லிவிட்டாலும், அந்த தமிழ் மன்ற இதழ்களில் என்ன தான் இருக்கிறது என்று அவனின் மனம் குறுகுறுத்தது. அப்பாவும் அம்மாவும் தூங்கியபிறகு படிக்கலாம் என்று காத்திருந்தான். அப்பா வெகுநேரம்