ஆழியின் காதலி - விபா : Aazhiyin kadhali - Viba
 

ஆழியின் காதலி - விபா

கதைச் சுருக்கம்:

இந்தியாவின் மிகப்பெரும் கடல் ஆராய்ச்சி நிறுவனமான அர்னவ் கடல் ஆராய்ச்சிக் கப்பல் இந்திய பெருங்கடலில் ஒரு பொருளைத் தேடிச் செல்லுகையில் காணாமல் போகிறது. அதில் உலகப்புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் குருநாதனும் இருக்கிறார்.

அவரது பயணம் வெளி உலகிற்கு ரகசியமாக வைக்கப் பட்டிருந்தாலும், கப்பல் காணாமல் போனபின்பு அவ்விஷயம் வெளியே கசிகிறது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும், அந்தப் பொருளின் தேடலைத் தொடரவும் நாயகன் அர்னவ், தன் நண்பன் விக்ரமுடன் தனது கடல் பயணத்தை மேற்கொள்ளுகிறான். செல்லும் வழியில் ஒரு கடல் அரக்கியின் மூலம் அவர்களுக்கு ஆபத்து வருகிறது.

அந்த ஆபத்திலிருந்து ஒரு கூட்டம் அவர்களை காப்பாற்றுகிறது. அவர்கள் பார்ப்பதற்கு சாதாரண மனிதர்களை போல இருந்தாலும் அவர்களுக்குள் ஏதோ மர்மம் இருப்பதாய் உணர்கிறான் அர்னவ்.

அம்மக்கள் பௌர்ணமி அன்று மட்டும்  வேறெங்கோ செல்வதாகவும் அவர்கள் இருப்பிடத்தின் ஒரு பக்கத்த்திற்கு மட்டும் அர்னவும் விக்ரமும்   செல்லவேண்டாமெனவும் அவர்களிடம் கூறிவிட்டு செல்கிறார்கள். 

அம்மக்களின் மர்மத்தை அறிய அவர்கள் போகக்கூடாதென தடை விதித்த பகுதிக்கு இருவரும் செல்கிறார்கள். அந்த இடத்தின் ஒருபகுதியில் ஒரு அதிசய வனம் இருப்பதை கண்டறிகிறார்கள்.

அவர்கள் தடையை மீறி அங்கு சென்றதை அறிந்த அக்கூட்டத்தின் தலைவரின் மகள் அவர்களைக் கண்டு கோபத்துடன் வருபவள், தங்களது குருதேவரின் வழிகாட்டுதலின் படி, அர்னவ் தான் தங்களை காக்க வந்திருக்கும் ருத்ரதேவனென்று அறிகிறாள்.

அதன்பின்பு அம்மக்கள் அனைவரும் அர்னவை ஈசனெனத் துதிக்கிறார்கள். அதைக்கண்ட அர்னவும், விக்ரமும் ஆச்சர்யம் அடைகிறார்கள்.

ஏன் அவர்கள் அர்னவை கடவுளெனப் பார்க்கிறார்கள்? எதிலிருந்து அவர்களை அர்னவ் காக்கப் போகிறான்? அவர்கள் தேடி வந்த அந்தப் பொருள் என்னவானது? கடலில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? என விடை சொல்லவிருக்கிறது ஆழியின் காதலி.

 

அன்று சென்னை மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது.

 

இந்தியாவின் பிரபல கடல் ஆராய்ச்சி நிறுவனமான அர்னவ் கடல் ஆராய்ச்சி கழகத்தின் நீர்மூழ்கிக்கப்பல் இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது கரையுடனான அதன் சிக்கெனலை இழந்துவிட்டுருந்தது.

 

அந்தக் கப்பல் எந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது என வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அதன் ஆராய்ச்சியினால் அர்னவ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பலன் கிடைத்திருக்கும்.

 

இப்பொழுது அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி வேலவ மூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

 

"எங்க கம்பெனி இந்தியப் பெருங்கடல் பற்றிய முக்கியமான ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்தது. ஆனால் அசம்பாவிதமாக இன்னைக்கு காலையில் எங்க நீர்மூழ்கிக் கப்பல் கரையுடனான சிக்கெனலை முழுவதும் இழந்துடுச்சு." வேலவ மூர்த்தி.

 

"சார் அப்போ அந்தக் கப்பல்ல இருந்தவங்க என்ன ஆனாங்க?" நிருபர்.

 

"அவங்கள பற்றி எந்த தகவலும் இதுவரைக்கும் எங்களுக்கு கிடைக்கல... ஆனா கூடிய சீக்கிரம் ஏதாவது விவரம் தெரியவரும் னு நம்பறோம்" வேலவமூர்த்தி.

 

"அதெப்படி சார் கப்பலை முழுசா தொடர்புகொள்ள முடியலன்னு அதிகாரப்பூர்வமா சொல்லிடீங்க. அப்பறம் எப்படி மறுபடியும் அவங்க தொடர்பு கொள்ளுவாங்கனு நம்பறீங்க?” நிருபர்

 

"லுக் மிஸ்டர், கடைசி வரைக்கும் நாங்க அந்த கப்பல் அவ்வளோதான் .. அதுல இருந்தவங்க எல்லாரும் இறந்துட்டாங்கனு முடிவெடுக்கல. அவங்களுக்கு இடையில ஏதாவது ஆபத்து வந்திருக்கலாம். இப்போ கூட அவங்களுக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிட்டுதான் இருக்கோம்." வேலவ மூர்த்தி.

 

"சார், அப்போ அந்தக் கப்பல்ல நம்ம நாட்டோட மூத்த அறிவியலாளர் குருநாதன் இருந்ததா ஒரு தகவல் வந்துருக்கு. அவர் அந்தக் கப்பல்ல தான் இருந்தாரா?" மற்றோர் நிருபர்.

 

"உங்களுக்கு யார் இந்த மாதிரி தகவல்களை பரப்பறதுனு தெரியல. அவர் எங்க கப்பல்ல இல்ல. எனக்கு இன்னும் நிறைய மீட்டிங் இருக்கு. அதனால நாம பேட்டியை இத்தோட முடுச்சுக்கலாம்." வேலவ மூர்த்தி.

 

சார் சார் என மேலும் கேள்விகள் கேட்பதற்காக அவரை நிருபர்கள் பின்தொடர்ந்து செல்ல..வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டார் அவர்.

 

அர்னவ் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றவர்,அதன் தலைமை நிர்வாகி அர்னவிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

 

"அர்னவ் நிலைமை ரொம்ப கையை மீறி போயிட்டு இருக்கு. அந்த சைன்டிஸ்ட் நம்ம கப்பல்ல இருந்தார்னு ப்ரஸ்க்கு சந்தேகம் வந்துடுச்சு.இன்னும் நம்மளோட கடல் ஆராய்ச்சி எதுக்காகன்னு உண்மைய கண்டுபுடுச்சுட்டாங்கன்னா அது நமக்கு நிறையவே ஆபத்தாகிடும்."என்றார்.

 

அதற்கு அர்னவ், "எப்படி.. எப்படி அங்கிள் ஆவங்களுக்குக் குருமூர்த்தி பற்றி தெரிஞ்சுது?எனக்கு இங்க என்ன நடக்குதுனே தெரியல. இப்படித்தான் நேத்து அந்தக் கப்பல்ல இருந்து நாம தேடற அந்த பொருள் கிடைச்சுட்டதா