Chillzee KiMo Books - கருவிழியாய் காப்பவனே - ஜெபமலர் : Karuvizhiyaai kaapavane - Jebamalar

கருவிழியாய் காப்பவனே - ஜெபமலர் : Karuvizhiyaai kaapavane - Jebamalar
 

கருவிழியாய் காப்பவனே - ஜெபமலர்

காதல் கதை.
முதல் சந்திப்பே மோதலில் தொடங்க நாயகன் மேல் வெறுப்பு கொள்ளும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகன் மேல் காதல் கொள்கிறாள். சாதாரணமாக இருந்தவளை சாதனை படைக்க வைத்த நாயகன் வாழ்க்கை பயணத்தில் நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா? என்பதே கதை.
 

அத்தியாயம் 01

பாபநாசம்.... 

 

       ஏண்டி உஷா பாபநாசம் போக வேண்டாம்னா கேட்க மாட்டேன்னுட்டீயே. இங்க டிராபிக்க பாரு. அருவியில் குளிப்பமோ இல்லையோ இந்த வெயில்ல குளிச்சு தான் ஆகனும் போல என்று குறைபட்டுக் கொண்டாள் தீபா.

 

  உன்னை குளிக்க வைச்ச பெருமை நம்ம டான் உஷாக்கு தான் சேரும் என்று தீபா காலை வாரினாள் கரோலின்.

 

  அப்போ காலை அமுக்கி விட்டு  அழுக்கு தேய்த்து விடுற பெருமையை நீ வாங்கிக்கோ.. என்றாள் தீபா.

 

ஆனால் இவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளாமல் கருமமே கண்ணாக கார் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் கீதா. இவள் தான் இந்த கதையின் நாயகி.

 

பேரழகி எல்லாம் கிடையாது. கிராமத்தில் வளர்ந்தவள். தோழிகளுடனே இருந்தாலும் அமைதியாக இருப்பவள். அதற்காக அவள் அமைதி பேர் வழி என்று நினைத்து விடாதீர்கள். அவளுக்கு வாயடித்துக் கொண்டு டைமிங் ஜோன் செய்து கொண்டு  துரு என்று இருக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவளுடைய மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அவளை இயல்பாக பேசுவதை கூட தடை செய்து விடுகிறது.

 

ஏய் கீதா... ஜன்னல் வழியே வெளியே குதிச்சிடாதே.. காப்பாற்ற கனவு நாயகன் வர மாட்டான்..... கரோ

 

இல்லடீ... கொட்டுற அருவியை கண் சிமிட்டாம பார்க்கனும்னு ஆசை.. எப்போ பார்ப்பேனு வெயிட்டிங்.. கீதா

 

உன்னை மலைல இருந்து தள்ளி விடுறேன். அப்போ கண் சிமிட்டாம அருவியோடு ஐக்கியமாகு. இப்போ கண்ணை உருட்டி பார்த்து ஸ்னக்ஸ் பாக்ஸ எடுத்து தா..... உஷா

 

அது எப்பவும் தீபாகிட்ட தான் இருக்கும். அவளையே கேளு என்று சொல்லி விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள். 

 

ஒரு வழியாக அகஸ்தியர் அருவியை அடைந்தது கார். அனைவரும் மாற்றுவதற்கு உடையை எடுத்து கொண்டு கிளம்ப கீதா மட்டும் கேமராவுடன் கிளம்பினாள்.

 

ஏன்டி... நீ குளிக்கலையா.... தீபா

 

அவ குளிக்க வரலை.. கேமரா வழியா ட்ரிம் பாய்ய தேட போறா..... கரோ

 

இப்போ நீங்க என்ன சொன்னாலும் அவ காதுல விழாது. திங்க்ஸ் பாதுகாக்க அவ இருக்கட்டும்.. நாம என்ஜாய் பண்ணுவோம்.... உஷா 

 

சரி டான்.. நீங்க எப்பவும் சரியா தான் சொல்விங்க........ கரோ

 

தோழிகள் குழிக்க செல்ல கீதா பாறையில் அமர்ந்து கொண்டு இடங்களை அழகான புகைப்படமாக்கி கொண்டிருந்தாள்.

 

பாறையில் அமர்ந்து காலை கொண்டு  தண்ணீரை தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள். அவள் பாதம் தண்ணீரில் மூழ்க மீன்கள் காலை சுற்றி கொண்டது. அதை மறக்காமல் தன் கேமராவில் பதிந்து கொண்டாள். 

 

எத்தனையோ அருவிக்கு சென்றிருந்தாலும் இந்த இடம் அவள் மனதை கவர்ந்தது. பாறையில் அமர்ந்து கொண்டு தோழிகளை போட்டோ எடுக்க முயற்சிகையில் அவர்களை மறைத்து கொண்டு ஒரு ஆடவன் இடையில்