காதல் கடிதம் - சசிரேகா : Kadhal Kaditham - Sasirekha
 

காதல் கடிதம் - சசிரேகா

  

 

காதல் கடிதம்

கல்லூரி கெமஸ்டிரி லேபில்

”டேய் என்னடா செய்ற” என கார்த்தியை பார்த்து ரமேஷ் கத்தினான்

”டேய் சும்மாயிருடா”

“இந்த கெமிக்கலை வைச்சி என்னடா செய்ற”

“இதை வெச்சி புதுசா ஒரு கெமிக்கலை தயாரிச்சி அதை யூஸ் பண்ணி நான் ஒரு லவ் லெட்டர் எழுதப்போறேன்”

”லவ் லெட்டரா ஏன்டா ஆயிரக்கணக்குல பேப்பர்ல நீ எழுதின லவ்லெட்டரையே அவள் படிக்கலை எப்ப கொடுத்தாலும் படிக்காமயே கிழிச்சி எரிஞ்சிடுவா உன்னையும் ஒரு ஆளா மதிச்சிதில்லை எப்ப பாரு உன்னை வில்லன் மாதிரியும் விரோதியை போலவே பார்ப்பா இதுல இப்படி நீ ஒரு ரிஸ்க் எடுக்கனுமா”

“என்னடா செய்றது நானும் எத்தனையோ லட்டர் கொடுத்தும் அவள் என் காதலை ஏத்துக்கலை அதுக்காக அவளை மறக்க முடியலைடா அவள் என்னை மதிக்கலைன்னா என்ன நான் அவளை மதிக்கிறேன் அது போதும் அதான்”

“அதுக்கு இந்த கெமிக்கல்தான் உனக்கு கிடைச்சதா பாவி இது கொஞ்சமா தெரியாம உன் கையில பட்டாலும் சரி கை வெந்துடும்”

“எனக்கும் தெரியும் நீ பேசாம இருடா”

“இதை வைச்சி நீ எழுதி கொடுத்தா எப்படிடா எழுதறப்ப உன் கை எரியாதா”

”இல்லைடா இதை அப்படியே மேல பட்டாதான் கை எரியும். இதோட ரெண்டு மூணு வேற வேற கெமிக்கலை நான் மிக்ஸ் பண்ணேன்னு வையேன் ஒண்ணும் ஆகாது. இதை அப்படியே நெருப்பில சூடு பண்ணா போதும் பேனாவில ஊத்தற மை போல மாறிடும். அப்ப இந்த கலவையை பேனால ஊத்தி அதை வைச்சி நான் லவ் லெட்டர் எழுதினா எழுத்துக்கள் அப்படியே ஷைனிங்கா 3ஜி எபெக்ட்ல வரும் பாரு அதை பார்த்து அவள் சந்தோஷப்படுவா பாரு” என கார்த்தி சந்தோஷப்படவும்

“முட்டாள் ஆயிரம் லட்டர் கொடுத்தும் அவள் மயங்கலை நீ தர்ற இந்த ஒரு கெமிக்கல் லட்டர்ல அவள் மயங்கிடுவாளா”

“முயற்சி செஞ்சிப்பார்க்கறேன்.”

“சரி அப்பவும் அவள் முடியாதுன்னு சொல்லிட்டா”

“மறுபடியும் வேற ஒரு லவ் லெட்டர் எழுதி தருவேன்”

“ஆக மொத்தம் நீ திருந்தவும் மாட்ட அவளை நீ விடவும் மாட்ட அப்படித்தானே”

“முடியாதுடா அவள் என்னோட ஏஞ்சல்”

“அவ ஏஞ்சலா ஏண்டா இது நிஜமான ஏஞ்சலுக்கு தெரிஞ்சா சூசைட் பண்ணிக்கும்”

“டேய் கிண்டலா”

”பின்ன என்னடா அவளை போய் தேவதைங்கற. சரியான பட்டிகாட்டு கிராமத்து பொண்ணு”

“டேய் எனக்கு பிடிச்சிருக்குடா”

“எனக்கு பிடிக்கலையே“

“உனக்கு ஏன் பிடிக்கனும். அவனோட காதலி அவனுக்கு மட்டும் பிடிச்சா போதும் அடுத்தவனுக்கு பிடிக்கனும்னு அவசியம் இல்லை”

”அப்படி என்னதான் இருக்கோ அவள்ட்ட சரியான சிடுமூஞ்சி அவள் சிரிச்சி நான் பார்த்ததில்லை”

”அப்படி சொல்லாதடா நானும் அவள் ஒருதடவையாவது என்னை நினைச்சி சிரிப்பாளான்னு பார்க்கறேன் ம்ஹூம். இன்னிக்கு மகளிர்தினம் இன்னிக்காவது அவள் முகத்தில நான் சிரிப்பை பார்க்கனும் மச்சான் அதுக்கப்புறம் இந்த லெட்டரை அவள் கிழிச்சாலும் எனக்கு கவலையில்லை”

”டேய் சரியான லூசுடா நீ, பெரிய பணக்காரன் பையன் காலேஜ்க்கு நீ கார்ல வர்ற உன்னை எத்தனை பொண்ணுங்க சைட் அடிக்கறாங்க தெரியுமா அத்தனை பேரையும் விட்டுட்டு போயும் போயும் இவளுக்காக இப்படி உருகுறியே”

”எத்தனை பொண்ணுங்க வந்தாலும் சரி அவளை போல வராதுடா அவள் நல்லா படிக்கற பொண்ணு க்ளாஸ்லயே பர்ஸ்ட், அடக்கமாயிருக்கா, அமைதியாயிருக்கா, மத்தவங்களை மதிக்கறா, ரொம்ப ஒழுக்கமாயிருக்கா, நேரம் தவறாம காலேஜ்க்கு வர்றா, எல்லா வேலையும் சரியா செய்றா அது மட்டும் இல்லைடா இன்னிக்கு வரைக்கும் அவள் எந்த பையனையும் ஏறெடுத்து பார்க்கலை தெரியுமா. அவ்ளோ ஏன் அவளோட சொந்த முறைபையன் கூட இங்கதான் படிக்கறான் அவன்கூட ஒரு வார்த்தை பேசலையே”

“அதுக்கு”

”அப்படின்னா பார்த்துக்க அவள் எவ்ளோ நல்ல பொண்ணுன்னு அதனாலதான் எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்வீட் கேர்ள் மச்சான்.”

“நீதான் மெச்சிக்கனும் சரி சரி ஆச்சா”

“இருடா 5 நிமிஷத்தில முடிஞ்சிடும்”

”டேய் இப்படி நாம இரண்டுபேரும் திருட்டுத்தனமா லேப்க்குள்ள இருக்கறத யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும்”