Chillzee KiMo Books - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா : Kothai vizhigalil jalamidum kadhal - Sasirekha

கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா : Kothai vizhigalil jalamidum kadhal - Sasirekha
 

கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா

 

 

லண்டன் நகரம்

அன்று காலை மணி 9 கோர்ட்டு வளாகம்

லண்டனில் கதை நடப்பதால் அங்கு ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள் தமிழில் கீழே

கோர்ட்டின் உள்ளே கோதை தன் தந்தை மணிமாறன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வந்துவிடும் தீர்ப்பு பற்றி எந்த கவலையும் இன்றி மணிமாறன் இருக்க கோதைக்கோ கஷ்டமாக இருந்தது. அவளது கவலை அவள் முகத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது

அதைப்பற்றி சிறிதும் கவலையில்லாமல் அவளது தாய் மாயா டைவர்ஸ் கேஸ் தீர்ப்பிற்காக காத்திருந்தாள்.

ஜட்ஜ் வந்ததும் வழக்கு ஆரம்பமானது

இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஜட்ஜிடம் தங்கள் கட்சிக்காரர்களுக்கு சாதகமாக பேசினர்.

முடிவில் ஜட்ஜ் மாயாவிடம்

”நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த விவாகரத்துல உங்களுக்கு சம்மதமா” என கேட்க மாயாவும் சிறிதும் யோசிக்காமல்

”சம்மதம்” என்றாள்.

”உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா அவளோட வயசு இப்ப 25 அவளோட பாதுகாப்பு பற்றியும் நீங்க யோசிக்கனும் உங்க பொண்ணை பத்தி நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க”

“எனக்கும் அவளுக்கும் என்னிக்குமே ஒத்துப்போகலை அவள் எப்பவும் மணிமாறன் பேச்சை கேட்டுத்தான் நடப்பா நானும் அவளை விட்டுட்டு தனியா வந்து 10 வருஷமாச்சி அவள் நான் இல்லைன்னா கூட நல்லா தான் அவள் அப்பா கூட வாழ்ந்திருக்கா அதனால இப்ப  எங்களுக்குள்ள விவாகரத்து நடந்தாலும் பெரிசா அவள் மனசு உடைஞ்சிப் போகாது” என மாயா சொல்லவும்

ஜட்ஜ் மணிமாறனிடம்

”நீங்க என்ன சொல்றீங்க இந்த விவாகரத்துக்கு சம்மதமா”

“முழு சம்மதம் அவளோட நான் இந்த 10 வருஷமா வாழலை அவளோட வாழனும்ங்கற எண்ணம் கூட என்னை விட்டு போயிடுச்சி அவளால நான் ரொம்ப நொந்து போயிட்டேன் என் பொண்ணு எப்பவும் என் கூடவே இருந்தா இனிமேலும் என்கூடவேதான் இருப்பா நான் அவளை நல்லா பார்த்துக்குவேன் நான் மாயாவை கல்யாணம் செய்துக்கொண்டு  இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு வந்து செட்டில் ஆனேன். மாயா இந்த நாட்டுல பிறந்த பெண் அவளும் இந்த நாட்டு சிட்டிசன்தான் இந்த நாட்டுலதான் என் பொண்ணு கோதை பிறந்தாள்.  அவளும் இந்த நாட்டு சிட்டிசன் அதனால அவளுக்கான கஸ்டடியை எனக்கு கொடுங்க” என சொல்லிவிட்டு கோதையைப் பார்க்க அவளோ எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் பேசாமல் நின்றாள்

ஜட்ஜ் இப்போது கோதையிடம்

”மிஸ்.கோதை நீங்க என்ன சொல்றீங்க இந்த விவாகரத்துக்கு அப்புறம் நீங்க யார்கூட இருக்க விரும்பறீங்க” என அவர் கேட்கவும் கோதையும்

”நான் என் அப்பாகூட இருக்கேன்” என சொன்னாளே தவிர அதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை.

ஜட்ஜ் மூவரின் கருத்துக்களை கேட்டுவிட்டு மறுபடியும் மாயாவிடம்

”நீங்க ஜீவனாம்சமா என்ன எதிர்பார்க்கறீங்க” என கேட்க அதற்கு மாயா அவரிடம்

”மணிமாறன் கிட்ட இருக்கற பேக்டரியை தவிர அவர் சம்பாதிச்ச பணத்தில இருந்து 50 சதவீதம் பணம் எனக்கு வேணும்”

அதற்கு மணிமாறனின் வக்கீல்

”என் கட்சிக்காரர் இந்த விவாகரத்தை போடல அதனால அவர் ஜீவனாம்சம் கொடுக்கனும்னு கட்டாயம் இல்லை”

”இருந்தாலும் எனக்கும் அவர் ஏதாவது கொடுத்துதானே ஆகனும்” என மாயா சொல்ல மணிமாறன் ஜட்ஜிடம்

”மாயாவுக்காக நிறைய சொத்துக்கள் நான் வாங்கி வைச்சிருக்கேன் அதை அவள்ட்ட ஒப்படைச்சிடறேன். அதோட எனக்கு பொண்ணு இருக்கா அவளுக்கும் நான் சொத்து சேர்க்கனும் அவளோட எதிர்காலத்தையும் நான் யோசிக்கனும் மாயா ஏற்கனவே 10 வருஷமா இன்னொரு பணக்காரனோட கல்யாணம் ஆகாமலே வாழ்ந்துக்கிட்டு இருக்கா என்னால அவளுக்கு 50 சதவீதம் பணம் தரமுடியாது” என அவர் தீர்மானமாக சொல்லவும் ஜட்ஜ் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பும் வழங்கினார்.

”இந்த வழக்கை விசாரித்ததில் மாயாவும் மணிமாறனும் இனி கணவன் மனைவியில்லைன்னு அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கிறேன். மாயா ஏற்கனவே 10 வருடங்களாக கணவனோட தொடர்பு இல்லாததாலும் மகளோட கஸ்டடிகூட அவருக்கு இல்லாததாலும் ஜீவனாம்சம் தரவேண்டிய அவசியமில்லை. அதுக்கு பதிலா மாயாவுக்காக மணிமாறன் வாங்கிய சொத்துக்களை அவருக்கு ஒப்படைச்சிடனும் இதுதான் தீர்ப்பு” என சொல்லிவிட்டு அவர் எழுந்துக் கொண்டதும்