Chillzee KiMo Books - என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ் : En uyiraanaval... - Padmini Selvaraj

(Reading time: 10.5 - 21 hours)
என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ் : En uyiraanaval... - Padmini Selvaraj
 

என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ்

டியர் ரீடர்ஸ்,

என்னுடைய முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதைக்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும் என் எழுத்தை புரிந்து கொண்டு பலர் எனக்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகபடுத்தினர்...

அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.. நான் அந்த கதையை எழுத ஆரம்பித்த பொழுது கொஞ்சம் வேற மாதிரியாக யோசித்து வைத்திருந்தேன்..

ஆனால் நடுவில் கொஞ்சமாய் ட்ராக் மாறி வேறு பாதையில் சென்றுவிட்டது.. நிறைய பேருக்கு அந்தக் கதை அவசரமாக முடிந்துவிட்டது போல தோன்றியிருக்கும்..

எனக்கும் அதே போல் தான்.. ஒரு சேட்டிஸ்பேக்சன் இல்லை..

அதனால் நான் நினைத்தபடியான ஒரு முடிவை அந்தக் கதையை இரண்டாவது பாகமாக என் உயிரானவள் ல் மீண்டும் தொடர்கிறேன்..

நான் முன்பே சொன்னது போல இந்த கதை ஒரு பொழுதுபோக்கிற்கான ரொமான்டிக் கதை மட்டுமே..

தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...அதன் அடிப்படையில் காதலை மட்டுமே மையமாக வைத்து என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை...

இந்த கதையின் இரண்டாம் பாகம் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் பற்றியது.. இறுதியில் யார் வென்றார்கள் என்று பார்க்கலாம்..இது முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எழுதுவது...அதனால் சீரியஸாக எடுத்துக் கொண்டு படிக்காமல் ரிலாக்சாக என்ஜாய் பண்ணி படியுங்கள்..Happy Reading!!

 

முன்னுரை:

இதழில் கதை எழுதும் நேரமிது கதையில் கடைசி அத்தியாயத்தை விட்டுவிட்டு இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.. அந்த கதையை படித்திராதவர்கள் நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.. உங்களுக்காக அந்த கதையின் சுருக்கம் இங்கே.... .

முதல் பாகம் கதைச்சுருக்கம்:

நாயகி மணிகர்ணிகா.. சென்னை ஹை-கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீலாக பணிபுரியும் மணிபாரதி மற்றும் இல்லத்தரசியாக இருக்கும் வாணியின் ஒரே செல்ல மகள்....

இயல்பிலேயே ரொம்பவும் துணிச்சலானவள்.. தைரியமானவள்.. எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தன் மனதில் சரி என்று பட்டதை தைரியமாக செய்பவள்..

பி ஆர்க் படித்துவிட்டு சௌமியன் கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில்  ஆர்க்கிடெக்ட் ஆக வேலை பார்த்து வருகிறாள்..

தன் பெற்றோர்களை போல காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்று தன் திருமணத்தை தள்ளி போட்டு வந்தாள்.. தன் மகளின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று கவலையாக இருந்தது அவள் அன்னை வாணிக்கு..  .

இந்த நிலையில் ஹைகோர்ட் ஜட்ஜ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காஞ்சனா தம்பதியரின் புதல்வன் மற்றும் வினோ கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளனுமான வினோதன்,  மணிகர்ணிகா வை ஒரு விழாவில் பார்த்தவன் அந்த நொடியே காதல் கொள்கிறான்..

மறைமுகமாக தன் காதலை அவளிடம் குறிப்பிட்டு காட்டி விட்டான்.. ஆனால் மணிகர்ணிகா அவன் மீது எந்த இன்ட்ரெஸ்ட் ம் இல்லை என்று அவனைப் போலவே மறைமுகமாக பதில் அளித்து விட்டாள்..  ஆனாலும் அவள் மனம் மாறுவதற்காக காத்திருப்பேன் என்று சொல்லி காத்திருக்கிறான்..

அவளை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்பதற்காகவே அவனுடைய சொகுசு பங்களா கட்டும் பணியை அவனுடைய நண்பனான சௌமியனின் நிறுவனமான சௌமியன் கன்ஸ்ட்ரக்சன் இடம் கொடுத்து அதில் மணிகர்ணிகா வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டு அதன் சம்பந்தமாக அடிக்கடி அவளை  சந்தித்து வந்தான்..

இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்தது...

இந்த நிலையில் மணிகர்ணிகா ஒருநாள் ஷாப்பிங் காம்ப்ளக்சில் ஒரு நெடியவனை சந்திக்கிறாள்..அவன் துஷ்யந்த்..  .

துஷ்யந்த்- தற்பொழுது இன்டஸ்ட்ரியில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் முதல் மூன்று பணக்காரர்கள் வரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவன்..

வெளிநாட்டில் சென்று கட்டடகலையை பற்றி படித்து வந்தவன் அவனுடைய குடும்ப தொழிலான ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ் ல் ஆர்வம் இல்லாமல் சொந்தமாக ஜெயா இன்டஸ்ட்ரிஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருபவன்..

ஜெயா இன்டஸ்ட்ரிஸ் ல் பல துறைகள் இருந்தாலும் கன்ஸ்ட்ரக்சன் ல் தனிக்கவனம் செலுத்தி வருபவன்.. அதனாலயே கன்ஸ்ட்ரக்சன் ல் நம்பர் ஒன்னாக விளங்கும் மிகப்பெரிய லெஜென்ட் அன்ட் சக்சஸ்புல் பிசினஸ்மேன்..

மற்றவர்களால் க்ரௌச்சிங் டைகெர்.. ஹிட்டென் ட்ராகன் அன்ட் பிசினஸ் மேக்னெட் என்று பல பெயர்களில் அழைக்க படுபவன்...

தொழிலில் சக்கரவர்த்தியாய் கொடி கட்டி பறந்தாலும் சொந்த வாழ்வில் கொஞ்சம் வெளிநாட்டு மாடர்ன் கல்ச்சரை பின்பற்றுபவன்.. திருமணத்தில் விருப்பம் இல்லாதவன்.. தன் வார விடுமுறைகளை உல்லாசமாய் களித்து வருபவன்..  .

மணிகர்ணிகா முதன்முதலில் அவனை சந்தித்தபொழுது பொது இடத்தில்  ஒரு அழகியை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடந்து வந்ததை கண்டதும் முகத்தை சுளித்தாள்..  .

கூடவே அவனும் அவளை எதேச்சையாக பார்க்க , அவளுடைய அழகில் கவர பட்டவன் அவளைப் பார்த்து கண்சிமிட்டி உதடு குவித்து முத்தமிட அதைக்கண்டு டென்ஷனானவள் கோபம் கொண்டு தன் செருப்பை கழட்டி காண்பித்தாள்..

அவனும் அதைக் கண்டு கோபம் கொண்டவன் அவளை வெறுப்பேற்றுவதற்காக பொது இடத்தில் அந்த அழகியை இறுக்க அணைத்து அவளை பார்த்தவாறு அவளாக பாவித்து முத்தமிட அந்த காட்சி மணுவின் அலைபேசியில் அப்படியே பதிவாகியது..

அடுத்த நாள் அந்த நெடியவன் மணுவின் தோழி நித்யாவை அவனுடைய அன்னையின் வற்புறுத்தலால் பெண் பார்த்து நிச்சயம் செய்ய வந்திருக்க நேற்று மாலை அவள் சந்தித்த அதே பொறுக்கிதான் இவன் என கண்டு கொண்டாள்..

கூடவே அவள் கண்ட காட்சி நினைவுக்கு வர,  பொங்கி எழுந்தவள் துஷ்யந்த் மற்றும் அவன் அம்மாவை ஏக வசனத்தில் திட்டி அந்த நிச்சயத்தை நிறுத்தி விடுகிறாள்..  .

அதனால் கோபம் கொண்ட துஷ்யந்த் அவளை கடத்திச் சென்று அவளை மிரட்டி தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லி உறுமினான்..  .

ஆனால் எதிலும் தைர்யத்துடன் துணிந்து நிற்கும் மணிகர்ணிகா அவனிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று நிமிர்ந்து நிற்கிறாள்..  .

அதை தாங்கிக்கொள்ள முடியாத அவன் அவளை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என்று அவளை பலவந்தப்படுத்தி அவளை அடிபணிய வைக்க முயல்கிறான்..