Chillzee KiMo Books - கண்டதும் காதல் - சசிரேகா : Kandathum kadhal - Sasirekha

(Reading time: 10 - 20 hours)
கண்டதும் காதல் - சசிரேகா : Kandathum kadhal - Sasirekha
 

கண்டதும் காதல் - சசிரேகா

முன்னுரை
ஆதிபனின் காதலியின் அடுத்த பாகம்தான் இந்த கதை. இதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும்.

 

 

பாகம் 1

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் ஊர்திருவிழா

மக்கள் அலைபோல திரண்டு அம்மன் கோயிலை நோக்கி பக்தியுடன் சென்ற வண்ணமும் வந்த வண்ணமுமாக இருந்தனர். பலபேர் குடும்பமாகவும் சில பேர் தனியாகவும் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

அங்கப்பிரதட்சணம் செய்வது, அடிபிரதட்சணம், மண்சோறு சாப்பிடுவது போன்ற பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். பல பேர் புண்ணியத்தை தேடி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் என பலவிதமான தானங்களை செய்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் தங்கள் ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்த தோஷங்களை நிவர்த்தி செய்யவும் அங்கு வந்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

திருவிழா என்பதால் வழக்கம் போல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. காலம் காலமாக பெரியதனக்காரர்களின் குடும்பங்கள் போட்டிகளை நடத்துவது வழக்கம். ஊர் விசேஷமாகட்டும் கோயில் விசேஷம் மற்றும் இது போல ஊரில் நடக்கும் பல விழாக்களைக் கூட அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்துக் கொண்டிருந்தார்கள்.

பல வருஷங்களாக பூபதிபாண்டியர் தான் பெரியதனக்காரராக இருந்து அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்தினார். அவரின் இறப்பிற்கு பின் அவரது மகன் ரத்தினவேல் பாண்டியன் பொறுப்பிற்கு வந்தார். அவரும் அவரது குடும்பமும் கிராமத்து மக்களுக்கு பல நன்மைகள் செய்தார்கள்.

விளையாட்டு போட்டி என்றதுமே பல கிராமங்களிலும் இருந்து இளைஞர்கள் வண்டிக்கட்டிக் கொண்டு இந்த கிராமத்துக்கு வந்தார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டும், மெடலும் உண்டு. எப்போதும் இந்த கிராமத்தில் அதற்காகவே சிறப்பாக பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும்.

ஒவ்வொரு வருடமும் திருவிழா என்று வந்தாலே மற்ற கிராமத்து இளைஞர்களை தோற்கடித்து உள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று பரிசுகளும் பெறுவார்கள். சுத்துபட்டு 8 கிராமங்களில் இந்த கிராமம் என்றாலே ஒரு தனி மவுசுதான்.

இன்றும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமானது. தேர் இழுத்துக் கொண்டு மக்கள் வீதிகளில் செல்ல இளைஞர்களும் பெண்களும் விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்வதற்காகவும் அதை வேடிக்கை பார்ப்பதற்காகவும் வந்திருந்தார்கள்.

கோவிலுக்கு அருகில் இருந்த பெரிய மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் கலந்துக் கொள்வார்கள்.

என்னதான் போட்டியில் கலந்துக் கொண்டாலும் இன்றளவும் மற்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றதில்லை. போட்டிகள் அந்தளவுக்கு கடுமையானதாக இருக்கும்.

மைதானம் முன்பு போடப்பட்டிருந்த மேடையில் வரிசையாக சேர்கள் போடப்பட்டு அந்த கிராமத்தின் முக்கியமான அரசு பதவியில் இருப்பவர்கள், நாட்டாமைகாரர், பெரியதனக்காரரான ரத்தினவேல்பாண்டியரும் ஊரிலிருந்த மற்ற பணக்காரர்கள் மற்றும் மற்ற கிராமத்து நாட்டாமைக்காரர்கள், பணக்காரர்கள், 8 ஊரை ஆளும் ஆளவந்தான் என ஒரு 10 பேர் அமர்ந்திருந்தனர்.

பூபதி பாண்டியன் 10 வருடங்களுக்கு முன்பு இறந்த காரணத்தால் அவரின் வாரிசான ரத்தினவேல் பாண்டியரின் தலைமையில் இந்த 10 வருடங்களாக இந்த 10 பேர் தலைமையில் போட்டிகளை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இன்று பெரியதனக்காரர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கூட போட்டியில் கலந்துக் கொள்வதால் திருவிழாவிற்கு வந்த 8 ஊர் மக்களும் அதை காண்பதற்காகவே குடும்பம் குடும்பமாக வந்து இறங்கினார்கள்.

அக்கம் பக்கம் ஊரில் இருக்கும் இளைஞர்களும் வந்திருந்தார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் சேட்டை பிடித்தவர்கள் 5 பேர் இருக்கிறார்கள் எப்போதும் பெரியதனக்காரர்களை வம்புக்கு இழுப்பது இவர்களது தலையாய வேலை. அவர்களின் வாரிசுகளுடன் மோதி ஒவ்வொரு முறையும் தோற்றாலும் சரி அதற்காக அடங்கவே மாட்டார்கள். கடந்த 10 வருடங்களாக அவர்களும் தொடர்ந்து வம்பு செய்துக் கொண்டேயிருந்தார்கள். யார் பேச்சையும் கேட்காமல் பெரியதனக்காரர்களின் மானத்தை வாங்குவதற்காகவே வேண்டுமென்றே போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

தினேஷ், கார்த்தி, அசோகன், சண்முகம், சந்திரன் இந்த 5 பேரும் ஒரு இடத்திற்கு வந்துவிட்டால் அந்த இடத்தில் பிரச்சனையும் களைகட்டும் கூட்டமும் களைகட்டும். சிலம்பம் போட்டியில் வேண்டுமென்றே தங்கள் பெயர்களை பதிவு செய்தார்கள்.

முதலில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் முடிந்த நிலையில் மைக்கில்