Chillzee KiMo Books - முப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா : Muppozhuthum un ninaive - Sasirekha

(Reading time: 9 - 18 hours)
முப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா : Muppozhuthum un ninaive - Sasirekha
 

முப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா

முன்னுரை
மகளின் எதிர்காலத்திற்காக பாடுபடும் மாமனுக்கும் மாமன் மகளின் அன்புக்காக தவிக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை.

 

 

பாகம் 1

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு டவுனில்

காலை மணி 6.00

”டேய் ஜேம்ஸ் மிதிடா அவனை, வாயே திறக்க கூடாது மீறி அவன் பேசினா அதோடு அவன் செத்தான் தரையில தள்ளி வயித்து மேலயே மிதி” என உக்கிரமாகக் கத்தினான் சிவசங்கரன்.

அந்நேரம் மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. சாலையோரம் அதுவும் அவுட்டரில் நடந்த சம்பவம் இது. ஒரு பக்கம் சிவசங்கரனின் கார் எதிர்பக்கம் வேலுவின் கார் இருந்தது.

காரின் பேனர் மீது அமர்ந்துக் கொண்டு அடிவாங்கிக் கொண்டிருக்கும் வேலுவை ரசித்துக் கொண்டிருந்தான் சிவா. மழையில் நனைந்து விடக்கூடாதென சிவாவுக்கு ஜார்ஜ் குடை பிடித்தான். அவனும் அடிப்பதை வேடிக்கைப் பார்த்து ரசித்தான்

”அண்ணா ஜேம்ஸ் சரியாவே அடிக்கலைண்ணா, நான் போய் அடிக்கிறேண்ணா” என ஆர்வமாகக் கேட்டான் ஜார்ஜ்

”இருடா முதல்ல அவனுக்கு ட்ரையினிங் தருவோம், அப்புறம் நீ போலாம், குடையை ஒழுங்கா பிடி” என சொல்ல அவனும் அமைதியாக அங்கு நடந்த சம்பவத்தைப் பார்த்து உணர்ச்சியில் தனக்குத்தானே கத்திக் கொண்டிருந்தான் ஜார்ஜ்

”அப்படித்தான் அடி, அவனை மிதி, தொடையில மிதி” என ஜார்ஜ் ஒரு கட்டத்தில் குடையை கீழே வைத்துவிட்டு கத்த அவனை மெதுவாக ஏறிட்டுப் பார்த்தான் சிவசங்கரன்

”ஏண்டா இப்படி” என மழைத் தூரலில் நனைந்துக் கொண்டே கேட்க அதற்கு

”அண்ணா ஆர்வக்கோளாருல கத்திட்டேன் சாரிண்ணா” என வழியவும் மெல்ல சிரித்துவிட்டு

”உன் ஆசையை ஏன் கெடுப்பானேன், பார்த்து அடிடா செத்து கித்து போயிட போறான் போ” என சொன்னதுதான் தாமதம், சட்டென குடையை சிவாவிடம் கொடுத்துவிட்டு ஜேம்ஸ் இருந்த இடத்திற்கு ஓடினான். ஜேம்ஸ்சை சிறிது தள்ளிவிட்டு ஜார்ஜ் ஆக்ரோஷமாக அடித்தான்.

ஒரு பக்கம் கையில் குடையை பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் சிகரெட் பிடித்துக் கொண்டு வெள்ளை வேட்டி ஜரிகை சரசரக்க, சிவப்பு நிற சட்டையில், கையில் கோல்ட் கலர் வாட்ச், இன்னொரு கையில் தங்க காப்பு, கழுத்தில் 15 சவரனில் 3 முறுக்கு செயின்கள் பட்டையாக, அவனது ஆஜானுபாகுவான தேகத்திற்கு அது மிகவும் பொருந்திவிட்டது. ஒரு முறை சிகரெட் பிடித்துப் புகையை ஸ்டைலாக விட்டவன் மறுபக்கம் வாட்சில் நேரத்தை பார்த்தான்.

 

காலை மணி 6.30

”என்னடா ஜேம்ஸ், அரை மணி நேரம் ஆகுது, இவ்ளோ அடிவாங்கிக்கிட்டு  படுத்துக்கிடக்கறானே ஒத்து வரமாட்டேங்கறானே என்னடா செய்றது இவனை”

”தெரியலைண்ணா பலமாதான் அடிச்சேன் ஆனாலும் அசராம கிடக்கறாண்ணா, தம்கட்டறான்னு நினைக்கிறேண்ணா”

“போடா அடிக்க கூட தெரியலை, நீங்கள்லாம் என்னோட அடியாளுங்களாடா, உங்களை நம்பி நான் இருக்கேன்னு நினைக்காதீங்கடா இப்ப பாருங்க என் அடி எப்படின்னு” என சொன்னவன் உடனே சிகரெட்டையும், குடையையும் தன் அருகில் வந்த ஜேம்ஸிடம் தந்துவிட்டு எழுந்து நின்றான்.

வேட்டியை மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு அவனிடம் சிகரெட் வாங்கி ஒரு இழு இழுத்துப் புகையை விட்டுக் கொண்டே மழையில் நனைந்தபடி முன்னேறிச் செல்ல ஜேம்ஸ் குடையை பிடித்துக் கொண்டு சிவாவின் பின்னாடியே வந்தான்.

வேலுவிடம் வரவும் ஜார்ஜ் ஒதுங்கினான்.

குனிந்து வேலுவைப் பார்த்தான்

”பத்திரத்தில கையெழுத்து போட முடியுமா முடியாதாடா” என அமைதியாக கேட்க வேலுவோ திமிராக முறைக்கவும் சிரித்தான். அவனது கழுத்தை பிடித்து எழுப்பியவன் நேராக அவனது கார் பேனரிடம் சென்று பேனரைத் திறந்தான்

”டேய் ஜேம்ஸ் வண்டியை ஸ்டார்ட் பண்றா” என கத்த அவனும் ஓடிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

வண்டியை ஸ்டார்ட் செய்யவும் வேலுவின் தலையை இன்ஜின் மேல் படுக்க வைக்க, வேலுவால் இன்ஜின் சூடு தாங்காமல் அலறினான். மெதுவாக சிகரெட் பிடித்துக் கொண்டே மணியைப் பார்த்தான். 2 நிமிடம் ஓடியது அதற்குள் அவனே கத்தினான்

”போடறேன் போடறேன்” என கத்தவும்

”வண்டியை நிறுத்துடா” என சிவா கத்த ஜேம்ஸ் வண்டியை ஆப் செய்துவிட்டு இறங்கி வந்தான்.

வேலுவை நிமிர்த்தி பார்த்தான் அவன் முகத்தின் ஒரு பக்கம் வெந்து போனது போல இருக்கவே சிரித்தான்

”இது தேவையா உனக்கு, ஏண்டா இப்படி என்னை வற்புறுத்தறீங்க ம் சரி கையெழுத்துப் போடு” என சொல்ல நடுங்கும் கைகளோடு ஜார்ஜ் நீட்டியப் பத்திரத்தில் கையெழுத்திட்டான் வேலு.

”டேய் வேலு மறுபடியும் அந்த ஆசிரமத்தை காலி பண்ணனும்னு ஆடினேன்னு வை,