Chillzee KiMo Books - புத்தம் புது பூ பூத்ததோ... - பிந்து வினோத் : Putham puthu poo poothatho... - Bindu Vinod

(Reading time: 30 - 60 minutes)
புத்தம் புது பூ பூத்ததோ... - பிந்து வினோத் : Putham puthu poo poothatho... - Bindu Vinod
 

புத்தம் புது பூ பூத்ததோ... - பிந்து வினோத்

புத்தம் பூ பூத்ததோ எனும் இந்த கதை, ஒரு சிறிய காதல் கதை :-)

இந்தக் கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

ஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தாள் கண்மணி. வீடு பக்கத்தில் வர வர அவளின் இதயம் அவளின் கட்டுபாடுகளையும் மீறி படபடத்தது. வீட்டினுள் நுழையும் போதே,

 

“சீட்டிங் சீட்டிங்” என்று அலறிய அம்ருதாவின் மழலை குரலும் அவளுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அகிலனின் சிரிப்பும் அவள் காதுகளுக்கு இனிமையைக் கொடுத்தது.

 

செருப்பை கழற்றும் நொடிகளில் தன்னை தானே அமைதியாக்கி கொண்டவள், எப்போதும் போல சாதாரண புன்னகையுடன் வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

 

அங்கே அகிலன், அமிர்தா மட்டுமல்லாமல் அவளுடைய அம்மா காமாட்சி, தம்பி கலைச்செல்வன் மற்றும் அவனின் மனைவி தாமரையும் இருந்தார்கள்.

 

“மம்மி....’ என்றபடி அம்ருதா அவளைப் பார்த்த உடனே அகிலனிடம் இருந்து ஓடி வந்துக் கட்டிக் கொண்டாள்.

 

“என்னக்கா இன்னைக்கு இவ்வளவு லேட்?” என தாமரை விசாரிக்கவும்,

 

“எப்போவும் வர பஸ் மிஸ் செய்துட்டேன் தாமரை” என தாமரைக்கு பதிலளித்த கண்மணி, முடிந்த அளவு அகிலன் பக்கம் பார்ப்பதை தவிர்த்தாள்.

 

“நீங்க வரதுக்காக தான் வெயிட் செய்துட்டு இருந்தேன். நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்து நின்றான் அகிலன்.

 

அப்போது தான் அவன் வெளியில் செல்ல கிளம்பி தயாராக இருப்பதை கவனித்தாள் கண்மணி.

 

எங்கே கிளம்புகிறான்? ஏன் கிளம்புகிறான் என பல நூறு கேள்விகள் கேட்க விருப்பம் இருந்தாலும் உதட்டைக் கடித்து கேள்விகள் வெளி வராமல் தடுத்து நிறுத்தினாள்.

 

“அகிலண்ணா வந்த வேலை முடிஞ்சிருச்சாம்க்கா. அதான் காஞ்சிப்புரம் கிளம்புறார்” என அவள் கேட்காத கேள்விக்கு விளக்கம் கொடுத்தாள் தாமரை.

 

திரும்பிப் போகிறானா? அப்படி என்றால் இனி அவனை பார்க்க முடியுமா??? அதிர்ந்து போன இதயத்துடன்... அதை வெளியேக் கட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றபடி தாமரையைப் பார்த்தாள் கண்மணி...

 

அதற்குள் அகிலனே அவள் முன் வந்து நின்றான்.

 

“லாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் உங்க ஃபேமிலியோட ஹாஸ்பிடாலிட்டிக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலைங்க. அதும் எனக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ நீங்க... ஹ்ம்ம்... நீங்க எல்லோரும் காட்டின அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ்.”

 

அகிலன் அவளை நேராக பார்த்து தான் பேசினான்... கண்மணியால் அப்படி பார்க்க முடியவில்லை... விழிகளை தழைத்து காலைக் கட்டிக் கொண்டிருந்த மகளின் தலையை வருடியவள்,

 

“இதுக்கு எதுக்குங்க தேங்க்ஸ் எல்லாம்? ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த அளவுக்கு கூட செய்யலைனா எப்படி?” என்றாள்.

 

“அக்கா சரியா சொன்னா அகிலன். எத்தனை தடவை தான் தாங்க்ஸ் சொல்வீங்க? சரி, காஞ்சிப்புரம் போன உடனே எங்களை மறந்துப் போயிடாதீங்க. வீக்கென்ட்ல என்ன செய்வீங்க? இங்கே கிளம்பி