Chillzee KiMo Books - ஸ்வேதாவின் ராகுல் - பிந்து வினோத் : Swethavin Rahul - Bindu Vinod

(Reading time: 1 - 1.75 hours)
ஸ்வேதாவின் ராகுல் - பிந்து வினோத் : Swethavin Rahul - Bindu Vinod
 

ஸ்வேதாவின் ராகுல் - பிந்து வினோத்

ஸ்வேதா இன்றைய கால நவீன யுவதி. எதையுமே சீரியசாக யோசிப்பவள்.

ராகுலும் இளைஞன். ஆனால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்பவன்.

ஸ்வேதா, ராகுல் இருவரும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தக் காதலை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.

ஈகோ, தவறான புரிதல் அனைத்தையும் தாண்டி இந்த காதலர்களின் காதல் வெற்றிப் பெறுமா?

 

 

அறிமுகம்!

ஸ்வேதா – பின் இருபதுகளில் இருக்கும் நவீன யுவதி.

  

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டால், அவளை பொறுத்த வரை அது தான் சரி. உலகெங்கும் தேடி நாலைந்து ப்ரூஃப் கண்டுப்பிடித்து மற்றவர்களையும் அதையே நம்ப வைப்பாள்.

  

அந்த அளவிற்கு அவளுக்கு வறட்டு பிடிவாதம், ஈகோ இருந்தது.

  

இதனாலேயே அவளுக்கு அதிக ஃபிரென்ட்ஸ் கிடையாது. ஒரே ஒரு ஃபிரென்ட், ஷெல்லி. அவளும் ஸ்வேதா அவளுக்கு செய்திருக்கும் உதவிகளுக்காக ஸ்வேதாவின் பிடிவாத குணத்தைப் பொறுத்து போபவள்.

  

பிடிவாதம் இருந்தாலும் ஸ்வேதாவிடம் நல்ல மனதும், உதவும் மனப்பான்மையும் இருந்தது. அவள் அயராது உழைப்பவளும் கூட!

  

***************

  

ராகுல் – ஸ்வேதாவை விட இரண்டு, மூன்று வயது பெரியவன்.

  

வாழ்க்கையில் எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஈசியாக எடுத்துக் கொள்பவன். பெண்களின் மனதை சுண்டி இழுக்கும் ஆளுமையும், புன்னகையும் அவனுடைய மிகப் பெரிய ப்ளஸ். இதனாலேயே எப்போதும் அவனைச் சுற்றி பெண்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.

  

ராகுலுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ‘கமிட்மென்ட்’.

  

தன்னை கட்டுப்படுத்தும் எதுவும் ராகுலுக்கு பிடிக்காது. மனம் போல வாழ்பவன்.

  

ஆனால் ராகுல் வேலையில் படு சுட்டி! வேலையிலும் சரி, வெளி உலகிலும் சரி, ராகுலை பிடிக்காதவர்கள் மிக மிக அரிது! இலகுவாக எல்லோருடனும் பேசி பழக அவனால் முடியும்.

  

************

  

ப்படி எதிரும் புதிருமாக இருக்கும் ஸ்வேதா & ராகுலுக்கு நடுவே ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது.

  

அது என்ன என்றால்...

  

***********

  

னக்கு கமிட்மெண்ட்ஸ் சுத்தமா பிடிக்காது. எந்த கட்டுப்பாடும் இல்லாம சுதந்திரமா சுத்த தான் பிடிக்கும். தேங்க் காட் நான் இந்த மாடர்ன் 22 ஆம் நூற்றாண்டுல பிறந்திருக்கேன். அதனால லைஃபை ஜாலியா என்ஜாய் செய்யலாம், அதுக்காக கல்யாணம், குடும்பம்னு மாட்டிக்க வேண்டாம்.”

  

ஐந்து வருடங்களுக்கு முன் ராகுல் சொன்னது ஸ்வேதாவிற்கு இப்போதும் அப்படியே நினைவில் இருந்தது.

  

அவ்வப்போது ராகுலுடன் ஜோடியாக கண்ணில் படும் புது, புது பெண்கள் அவன் இப்போதும் மாறவில்லை என்பதை அவளுக்கு சொன்னது.

  

ஸ்வேதா ராகுலை வெறுத்தாள்!

  

அவன் எப்போதுமே அவள் கண்ணுக்கு அவ்வளவு கவர்ச்சியாக தெரிகிறானே, அதற்காக வெறுத்தாள்!

  

வேலையில் அவ்வளவு திறமைசாலியாக திகழ்ந்து அசத்துகிறானே அதற்காகவும் வெறுத்தாள்!

  

அதை எல்லாம் விட...