Chillzee KiMo Books - நீ பாதி நான் பாதி! - பிந்து வினோத் : Nee paathi naan paathi! - Bindu Vinod

(Reading time: 30 - 45 minutes)
நீ பாதி நான் பாதி! - பிந்து வினோத் : Nee paathi naan paathi! - Bindu Vinod
 

நீ பாதி நான் பாதி! - பிந்து வினோத்

சில நேரங்களில் 'unconventional' ஆக இருப்பதும் தவறில்லை தான். அப்படி ஒரு வித்தியாசமான தம்பதியின் கதை இது :-)

 

 

நீ பாதி நான் பாதி!

  

டிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு மனைவியையும், குழந்தைகளையும் எழுப்ப வந்த அஜய், ஒவ்வொரு கோணத்தில் படுத்திருந்த மூன்று பேரையும் பார்த்து புன்னகையுடன் நின்றான்.

  

இவர்களில் யார் அம்மா, யார் குழந்தைகள் என்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம்! என மனதினுள் நினைத்துக் கொண்டவன், நேரமாகி விட்டதை உணர்ந்துக் கொண்டு,

  

“ஹேய் பிரீத்ஸ்! எழுந்திரு டைம் ஆச்சு... குட்டீஸ் எழுந்திருங்க... சீக்கிரம்...” என மூவரையும் எழுப்பினான்.

  

ஐந்து நிமிட போராட்டத்திற்கு பிறகு மூவரும் ஒருவழியாக கண் விழிக்க,

  

“இன்னைக்கு லஞ்ச்க்கு என் பிரெண்ட் வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருந்தேனே மறந்துட்டீங்களா? மணி பத்தாக போகுது சீக்கிரம் எழுந்து ரெடி ஆகுங்க...” என்றான்.

  

“என்ன டாடி ப்ரேக்பாஸ்ட்?” கண்ணை கசக்கிக் கொண்டு கேட்ட பெரியவள் சமிகாவை, அகியில் அலேக்காக தூக்கி செல்லம் கொஞ்சியவன்,

  

“டைம் இல்லை, அதனால சீரியல் தான்... சாப்பிட்டுட்டு ட்வெல்வ் தர்ட்டிக்கு ரெடியா இருக்கனும்...” என்றான்.

  

“போங்க டாடி சண்டேவும் அதுவுமா, தொல்லை செய்றீங்க...” என்ற கடைக்குட்டி பூமிகாவின் புகாரை கேட்டு,

  

“ஹோய்...! ஒழுங்கா டைமுக்கு கிளம்பு, இல்லை, டி.வில கார்ட்டூன் போட மாட்டேன்....” என்றான் அஜய்.

  

“ஹேய் அஜய், இது மாதிரி பசங்களை ப்ரைப் (bribe) செய்யாதீங்ன்னு சொல்லி இருக்கேன்ல?” என்ற அவனின் மனைவி பிரீத்தா,

  

“பூம்ஸ் பாப்பா, குட் கர்ளா தொல்லை செய்யாமல் ரெடி ஆனால் நீ குட் பாப்பா... நிறைய குட் பாயிண்ட்ஸ் தருவேன் அம்மா...” என்றாள்.

  

பூமிகா மட்டுமல்லாமல் சமிகாவும் துள்ளி குதித்தாள்.

  

“எனக்கு தான் பாயின்ட்ஸ்...” என்று இருவரும் துள்ளி குதித்து செல்வதை அமைதியாக பார்த்திருந்தான் அஜய்.

  

குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்கள், குறும்புகள் என இனம் பிரித்து குட் பாயிண்ட்ஸ் & பேட் பாயிண்ட்ஸ் என கொடுத்து அவர்களிடம் நல்ல பழக்கங்களை அதிகரிக்க ஒரு விளையாட்டு போல செய்வது பிரீத்தாவின் வாடிக்கை..

  

இருவருக்கும் அவரவர் பெறும் பாயிண்ட்ஸ் அடிப்படையில் சர்ப்ரைஸ் பரிசும் உண்டு!

  

“நீ ஒரு மந்திரவாதி பிரீத்ஸ்... எவ்வளவு ஈசியா பசங்களை வழிக்கு கொண்டு வர” என்றான் அஜய்.

  

“பசங்களை மட்டும் தானா?” என விழிகளை விரித்து விளையாட்டாக கேட்டு விட்டு சென்றாள் பிரீத்தா.

  

அஜய்வின் முகத்தில் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.