Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 07

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 07: - Is it fate?

   

ஹர்ஷா மீண்டும் சுஜய் மற்றும் அறிவழகன் இருந்த அறைக்கு வந்தாள்.

  

சுஜய் இப்போதும் சோர்வாக ஷோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

  

அறிவழகன் தாடி நிறைந்த தன் கன்னத்தை தடவிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

  

கணவன் பக்கத்தில் அமர்ந்தவள்,

  

"என்னால நம்பவே முடியலை!" என்றாள்!

  

"ஏன் ரூமுல அவ இல்லையா? ஓடிப் போயிட்டாளா?" என்றான் அறிவழகன் கடுப்புடன்.

  

"எதுக்கு அடிப்பட்டு இருக்கவங்களை பத்தி அப்படி பேசுறீங்க அறிவழகன்??" என்றுப் புரியாமல் வினவினாள் ஹர்ஷா.

  

"அடிப்பட்டு இருந்தா என்ன? காப்பாத்தினதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல முடியாதா? என்னமோ பெரிய மஹாராணி மாதிரி கேள்வி கேட்குறா, முறைக்குறா. அந்த காருலேயே அவளை விட்டுட்டு வந்திருக்கனும்!"

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home