Chillzee KiMo T-E-N Contest Winner - Srija Venkatesh

அன்புள்ள சில்ஜீ கிமோ வாசகர்களே,

 

வணக்கம். பல நாவல்கள் மூலமாக நான் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும் போட்டியில் வென்ற பெருமையோடு உங்களுடன் பேசும்  தருணம் இது. போட்டியில் முதல் பரிசு பெற என்னைத் தேர்ந்தெடுத்த குழுவினருக்கு என் நன்றி! தரமான நல்ல எழுத்துக்கு எப்போதுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது சில்ஜீ கிமோ.   ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளையும் சேர்த்து நடைபெறும் முதல் போட்டி இது. மிகவும் வித்தியாசமான வரவேற்கத்தக்க மாற்றம் இது. தமிழ் எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் எழுத ஊக்குவிக்கும் முயற்சி. புதிய எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் களமாகவும், மற்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லும் களமாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சில்ஜீ  கிமோ. 

நேர்மையான முறையில் எந்தப் பாகுபாடும் இன்றி வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவது இதன் தனிச் சிறப்பு. எழுத்தாளர்களை வெறுமே ஊக்குவித்தால் போதாது என அவர்களது எழுத்துக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்களுக்கு ராயல்டியும் வழங்குகிறது இந்தத் தளம். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம். உலகெங்கும் தமிழைப் பரப்புவதோடு, தமிழ் ஆங்கில எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழ்கிறது. இந்தத் தளத்தில் நமது படைப்பை பிரசுரிப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் சில்ஜீ கிமோ குழுவிற்கு எனது நன்றிகள் பல. வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இந்த நாட்களில் இளம் தலைமுறையினரை வாசிப்பின் பக்கம் இழுக்கும் பணியை திறம்படச் செய்கிறது சில்ஜீ கிமோ.

 

இவர்களது பணிகள் மேலும் தொடர! சில்ஜீ கிமோ மேலும் மேலும் உயர! இறைவனை வேண்டுகிறேன். நன்றி!