Chillzee KiMo T-E-N Contest Winner - Sasirekha

வணக்கம்

சக எழுத்தாளர்களை பாராட்ட பெருமைப்படுத்த எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் கௌரவமாக நினைக்கிறேன். என்னை எழுத்தாளராக ஆக்கிய சில்ஸிக்கு மிக்க நன்றி என்னைப் போன்ற நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சில்ஸிக்கும் கிமோக்கும் எனது வாழ்த்துக்கள்

நாவல் உலகம் அழியாமல் மேன்மேலும் சிறக்க உதவும் சில்ஸி மற்றும் கிமோ போன்ற தளங்கள் பாராட்டுக்குறியவை இத்தளத்தினால் கதை எழுதும் ஆர்வம் உண்டானவர்களின் பட்டியலில் நானும் ஒருத்தி என்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்

போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற அனைத்து நாவலாசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றியை அடையும் வரை இருக்கும் ஆர்வம் அது கிடைத்தபின்பும் அதை தக்க வைப்பதிலும் மேம்படுத்துவதிலும் அதிகமாக இருக்க வேண்டும்

இத்தளத்தில் பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தங்களின் படைப்புகள் சிறப்பாக வர வாழ்த்துகிறேன் தொடர்ந்து அதிகமான நாவல்களை வழங்கிக் கொண்டே இருங்கள் எழுத்தாளர்களின் உலகத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் அவர்களின் ஒவ்வொரு கதைகளும் மைல்கல்கள் போலவே ஒவ்வொருவரும் தொடர்ந்து முயற்சி செய்தால் எழுத்துலகில் வெற்றியை தக்கவைத்துக் கொள்ளலாம்

அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் நல்ல  வரவேற்பு அடைய வேண்டும் என நான் வாழ்த்துக்கிறேன். அனைத்து எழுத்தாளர்களின் கற்பனை திறனையும் வசன நடையையும் கதையின் போக்கையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை ஒவ்வொன்றும் சிப்பிக்குள் உதித்த முத்துக்கள் போல ஒளிவீசியது என்பது உண்மை

நன்றி

சசிரேகா