Chillzee KiMo Books - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - ரவை : Nee orumuraithaan vazhgiraai - RaVai

 

நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - ரவை : Nee orumuraithaan vazhgiraai - RaVai
 

நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்

முன்னுரை:

ஆசிரியர் ராம்ராமகிருஷ்ணன், அமெரிக்காவில் வாழ்கிற 93 வயது இளைஞர். அவர் தனது எழுபதாவது வயதுக்குமேல் எழுத தொடங்கி, இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஐந்து நூல்களும், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில், வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவை.

'நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்!' எனும் இந்த ஆங்கில நூல், 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த நூலிலிருந்து முக்கியமான பகுதிகளை தமிழில் தருவதே, எனது இந்த முயற்சி! இருநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்த நூலிலிருந்து பகுதிகளாக, தொடர்ந்து, சில்ஸீ வாசகர்களுக்கு அளிப்பதே எனது நோக்கம். நான் படித்து வெகுவாக ரசித்துப் பயனடைந்த நூல்!

 

பகுதி எண்.1. - வாழ்க்கை

வாழ்க்கை என்பது என்ன? பிறப்பிலிருந்து இறப்புவரை நடப்பது என்றும் உயிரில்லாத ஜடப் பொருளுக்கும் உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையே உள்ள பாகுபாடு அல்லது தன்னை என்றும் கூறலாம்.

வாழ்க்கை வினோதமானது. கண்களை மூடி கனவு கண்டால், ஒரு வினாடியில், ஒரு யுகமே கழிந்து இடும். பதினைந்து வயதில் நம் தோற்றம் எப்படியிருக்கப்போகிறதோ என கனவு கண்டு விழித்துப் பார்த்தால், நம் வயது இருப்தொன்றை கடந்திருக்கும், வாழ்க்கை ஒரு பந்தயமல்ல, கடந்துபோகும் நேரத்துக்கு ஈடுகொடுத்து, பின்னால் ஓடுவதே! வாழ்க்கை குறுகியது. அதன் வேகத்தில், நமக்கு திரும்பிப் பார்க்கக்கூட நேரமிருக்காது. அப்படிப்பட்ட வாழ்க்கையை, நாம் மகிழ்ச்சியுடன் கழிக்க உறுதிகொள்ளவேண்டும்!

ஒருவன் இறந்தபோது, கையில் ஒரு பெரிய பெட்டியுடன் கடவுள் எதிரே நின்றார்.

" சரி, மகனே! வா,போகலாம்!"

"அதற்குள்ளாகவா? நிறைய வேலைகள் மீதமிருக்கிறதே!......"

"உன் வாழ்வு முடிந்துவிட்டதே....."

"அதுசரி, உன்கையிலுள்ள பெட்டியில் என்ன உள்ளது?"

"உனது உடைமைகள் எல்லாம் உள்ளன....."

"என்ன! என் ஆடை, பணம், சொத்து, உறவு எல்லாமா?"

"அவைகள் உன்னுடையவையல்ல, இந்த பூமிக்கு சொந்தமானது......."

"என்நினைவுகளா?"

"அவைகள்காலத்துக்குசொந்தம்..."

"என் திறமைகளா?"

"அவை சூழ்நிலைகளுக்குசொந்தமானது"

"என் சுற்றமும்நட்புமா?"

"அவை நீ வந்தபாதைக்குரியது."

"என்மனைவியும் குழந்தைகளுமா?"

"அவைஉன் இதயத்துக்கு சொந்தம்"

"என்உடலா?"

"அது இந்த மண்ணுக்குரியது"

"என்ஆன்மாவா?"

"அதுஎன்னுடையது"

பொறுமையிழந்து, அவன்பெட்டியைகடவுளிடமிருந்துபிடுங்கி, திறந்துபார்த்தான். காலியாயிருந்தது!

"இறைவா! அப்படியென்றால், எனக்குஎதுவுமே சொந்தமில்லையா?"

"ஆம், நீ வாழ்கிற ஒவ்வொரு நிமிடம் மட்டுமே உனக்கு சொந்தம்."

வாழ்க்கை என்பதே அந்த ஒரு வினாடிதான்! அதுமட்டுமே உனக்குச் சொந்தம். ஆகவே, வாழ்கிற ஒவ்வொரு நொடியையும் அனுபவி! உனது சொந்தமோ, பந்தமோ, எதுவும் அதில்குறுக்கிட அனுமதியாதே! இந்தநொடியில் வாழ்! உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துகாட்டு! எல்லாநேரங்களிலும் மகிழ்ச்சியாயிருக்க தவறிவிடாதே! அது ஒன்றுதான் முக்கியம்! வெறும் கையுடன் வந்ததுபோல், வெறும்கையுடன்தான்இறக்கப்போகிறாய்!

கவிஞர்களும், வேதாந்திகளும், அறிஞர்களும் வாழ்க்கையைப்பற்றி சொல்லியிருப்பதை பார்ப்போம்!

வாழ்க்கை ஒரு ஊதுகுழல்! அதில் ஓட்டைகளும், காலிஇடமும் இருக்கலாம், ஆனால் அதை நீசரியாகபயன்படுத்தினால், மனதை அள்ளும் தெய்வீக இசையை பெறலாம்.

வாழ்க்கை கடல்போன்றது. கரையற்றது, அலைகளைப்போல் சில உறவுகள். வரும் போகும்.

வாழ்க்கை அறிவுள்ளோர்க்கு ஒரு கனவு! முட்டாளுக்கு விளையாட்டு, பணக்கார்ர்களுக்கு வேடிக்கை, ஏழைகளுக்கு நரகம்!

வாழ்க்கை நிலவைப்போல! பாதிதேரம் இருளில்இருக்கும், நாம் துயரப்படும்போது. மற்ற நேரங்களில், பிரகாசமாயிருக்கும், நாம்சந்தோஷமாயிருக்கும்போது! பௌர்ணமியன்று, இருளைமுழுமையாக விரட்டிவிடும்.