ஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை. [ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]
இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!
காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா? என்பதே இக்கதையின் கருவாகும்.