Chillzee KiMo Books - ஊடலில் வந்த காதல் - சசிரேகா : Oodalil vantha kadhal - Sasirekha

ஊடலில் வந்த காதல் - சசிரேகா : Oodalil vantha kadhal - Sasirekha
 

ஊடலில் வந்த காதல் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த குறுநாவல் தலைப்பு "ஊடலில் வந்த காதல்".
இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
 

ஊடலில் வந்த காதல் - சசிரேகா,

  

பாபநாசம்,

  

”இதுதான் கடைசி தடவை, இதுக்கு அப்புறமும் நீங்க ரெண்டு பேரும் தப்பு செய்தீங்கன்னா என்னைப் பெத்த அப்பன்னு கூட பார்க்க மாட்டேன், நான் பெத்த பையன்னும் பார்க்க மாட்டேன், ரெண்டு பேரையும் வீட்டை விட்டு விரட்டிடுவேன், ஒழுங்கா இருக்கறதா இருந்தா இருங்க இல்லை நானா உங்களை விரட்டறதுக்குள்ள நீங்களே வெளியே போயிடுங்க” என கோபமாக பேசினார் சேதுபதி. ,

  

அவருக்கு முன்னால் கைகட்டியபடி சேதுபதியின் தந்தை பூபதியும் அவருக்கு பக்கத்தில் சேதுபதியின் ஒரே வாரிசு ரகுபதியும் பவ்யமாக நின்றிருந்தார்கள், அவர்களை பார்த்தபடி கவலையாக ஒரு ஓரமாக நின்றிருந்தார் ரகுபதியின் தாயார் திலகா. ,

  

”திலகா இனி என் கையில எதுவும் இல்லை, நானும் போனா போகட்டும்னு விட்டா இவங்க ரெண்டு பேரும் ரொம்பவே சேட்டை பண்றாங்க, இவங்க தொல்லை தாங்க முடியலை வீட்லதான் இவங்க இம்சை தாங்கலைன்னா வெளியிலயும் எல்லார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிறாங்க, வர்றவங்க போறவங்க எனக்கு புத்திமதி சொல்லிட்டுப் போறாங்க, எல்லாம் யாரால இவங்களாலதானே” என கத்த அதற்கு திலகாவோ,

  

”ஏங்க விடுங்க, அவங்க என்ன தெரிஞ்சேவா செய்றாங்க, இந்த முறை விடுங்க, அடுத்த முறை பாருங்க, இவங்களால யாருக்கும் எந்த பிரச்சனையும் வராதுங்க”,

  

”இப்படித்தான் போன முறையும் நீ சொன்ன, உனக்காக இவங்களை மன்னிச்சி விட்டேன் 10 நாள்கூட ஆகலை, அதுக்குள்ள ரெண்டு பேரும் சண்டித்தனத்தில இறங்கிட்டாங்க, என்னை பெத்ததுதான் சரியில்லைன்னு பார்த்தா நான் பெத்ததும் அதுக்கு மேல இருக்கே, யாரால யார் கெட்டாங்கன்னே தெரியலை, ரகுவோட சேர்ந்து எங்கப்பனும் இளவட்டம் போல ஊரையே வளைய வராரு ,

  

காடு வா வாங்குது வீடு போ போங்குது காசி ராமேஸ்வரம்னு போய் வந்து புண்ணியத்தை தேடிக்காம கண்ட கண்ட காலி பயலுகளோடு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்றாரு, இதுல என் பையனையும் இழுத்து விடறாரு, அவனாவது உருப்படியா ஏதாவது செய்வான்னு பார்த்தா தாத்தாவோடவே இருக்கான், பிசினஸ்க்கும் வர்றதில்லை, எப்ப பாரு ரெண்டு பேரும் ஊரையே சுத்திக்கிட்டு இருக்காங்க, ரகு பிசினஸ்க்கு வரலைன்னா வீட்லயாவது அமைதியா இருக்க சொல்லு, வெளிய இவங்களோட தலையை பார்த்தேன் அவ்ளோதான்” என அதட்டினார்,

  

”சரிங்க சரிங்க நான் சொல்லிடறேன் நீங்க வேலைக்குக் கிளம்புங்க”,

  

”ஆமா என்னை விரட்டறதிலயே இரு, அவங்களுக்கு புத்திமதி சொல்லு”,

  

”சரிங்க சொல்லிடறேன்” என திலகா சொல்ல அதற்கு சேதுபதியும் தன் தந்தை மற்றும் மகனைப் பார்த்து ஆட்காட்டி விரல் உயர்த்தி காட்டி,

  

”ஒழுங்கா வீட்ல இருக்கனும் எங்கயாவது வெளிய போய் சண்டித்தனம் செய்றதை நான் பார்த்தேன்” என மிரட்டலாக சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பிச் சென்றார். அவர் சென்றதும் பூபதியும் ரகுபதியும் நிம்மதியானார்கள், இயல்புக்கு திரும்பினார்கள், திலகாவோ அவர்களிடம்,

  

”மாமா இது உங்களுக்கு தேவையா, வயசான காலத்தில எதுக்கு ஊர் வம்பெல்லாம் பார்த்துக்கிட்டு வீட்லயே இருங்களேன்”,

  

”திலகா நான் வீட்டுக்குள்ள இருந்தா மக்களோட கஷ்டத்தை யார் போக்குவா சொல்லு”,

  

”ஆனா அவர் உங்களை தினமும் திட்றாரே உங்களுக்கு அது கஷ்டமாயில்லையா”,

  

”அட அதை விடும்மா, அவன் யாரு என் பையன்தானே, என்னை திட்டறதுக்கு அவனுக்கு உரிமையிருக்கு, திட்டினா திட்டிட்டுப் போறான், நாங்க வெளிய போறோம், ஒரு கட்ட பஞ்சாயத்து இருக்கு முடிச்சிட்டு மதியத்துக்குள்ள வந்துடுவோம், கோழி குழம்பு செஞ்சி வைம்மா” என சொல்ல திலகாவோ அவர்களின் முன் கையை தடுப்பாக வைத்துக் கொண்டு நின்றார். அதைக்கண்ட ரகுபதியோ,