Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

சீர்மிகு சித்திரை பிறப்பு - ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஆங்கில ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதத்துக்கு உரிய சிறப்பம்சங்கள், தமிழ்ப்புத்தாண்டு, அட்சய திருதியை மற்றும் சித்திர குப்த விரதம் ஆகியவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள்  இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண்டிகைகள் பிறந்த காரணம், இவற்றை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளது. அதோடு பூஜை முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சிகரம் வைத்தாற் போல தமிழ்ப் புத்தாண்டன்று செய்ய வேண்டிய உணவு வகைகள், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகள் எனஆன்மீகப் புத்தகத்தோடு, தெய்வீகமான சமையற்கலையையும் இணைத்து செய்யப்பட்ட முதல் முயற்சி " சீர் மிகு சித்திரை பிறப்பு" புத்தகம் .  

Published in Books

தொலைந்து போனது என் இதயமடி - ராசு

கதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்

அமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.

இளங்கனியன்.  தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர்,  மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.

மகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.

பிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.

இவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.

இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை  "தொலைந்து போனதுஎன் இதயமடி" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றென்றும் அன்புடன்

ராசு

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 04

Story Name - Ragasiya snegithane

Author Name - Padmini Selvaraj

Debut writer - No


ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை

கிராமத்தைச் சேர்ந்த வெகுளியான பேதைப் பெண் நம் கதையின் நாயகி.. தன் கல்லூரி படிப்பை முடித்து வாழ்வின் அடுத்த நிலையான திருமணத்திற்கு காத்து நிற்கும் பருவ மங்கையவள்..

எல்லா பெண்களையும் போல தன்  திருமண வாழ்க்கையை பற்றி பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் சுமந்து நிற்பவள்..அவள் ஊர் எல்லையை கூட  தாண்டியிராதவள் சந்தர்ப்ப சூழ்நிலையால், திருமணம் முடித்து நகரத்துக்கு தன் கணவனுடன் குடியேறுகிறாள்..

கூடவே இன்றைய நவீன பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் பழக்கமாகிறாள்.. அதனால் அவள் வாழ்க்கை படகு பெரும் சுழலில் சிக்கி  தடம் மாறுகிறது..

அவள் கனவு கண்டு கொண்டிருந்த அவளுடைய கற்பனை,  கனவு வாழ்க்கை நிறைவேறியதா??  தடுமாறிய அந்த பேதைப் பெண்ணின் வாழ்வு மீண்டும் நேரானதா?  இல்லை அந்த சுழலில் சிக்கி அழிந்து போனாளா? என்று  தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

என்னுடைய இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..நன்றி !!! Happy Reading!!!

Published in Books

அழகான ராட்சசியே!!! - பத்மினி செல்வராஜ்

Summary:
நாயகன் மகிழன் IT துறையில் இருப்பவன்... நாயகியும் அதே துறையில் இருப்பவள்.. ஆனால் எதிர் எதிரான பிரிவு..நாயகன் மகிழன் டெவலப்மென்ட்(Development) லும் நம் நாயகி டெஸ்டிங் (Testing) லும் வேலை செய்பவர்கள்....

பொதுவாக எல்லா IT நிறுவனங்களிலும் டெவலப்மென்ட் டீமும் டெஸ்டிங் டீமும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி எப்பவும் முறைத்து கொண்டே இருப்பார்கள்...

அது மாதிரி நம் நாயகனும் நாயகியும் இப்படி பட்ட எதிர் எதிர் பிரிவில் வேலை செய்ய, அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், மAzற்றும் IT அலுவலகத்தில் நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் நிறைந்ததே இந்த கதையின் போக்கு...

இது ஒரு மோதல் + காதல் + கலாட்டாக்கள் கலந்த ஜாலியான கதை... முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக எழுதிய கதை..இந்த கதையை தொடர்ந்து படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

Published in Booksஎங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்

 

Dedication

இந்தக் கதை,

தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,

எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்

சமர்ப்பணம்!!!!

 

கதையைப் பற்றி:

இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!

 

கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,

கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.

அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Published in Books