Chillzee KiMo Books - வானவில் வரும் வாழ்வில் மீண்டும் - சசிரேகா : Vanavil varum valvil mintum - Sasirekha

வானவில் வரும் வாழ்வில் மீண்டும் - சசிரேகா : Vanavil varum valvil mintum - Sasirekha
 

புது நாவல்.

 


வானவில் வரும் வாழ்வில் மீண்டும்.

  

ஜோவென்று மழை பொழிய கார் ஓட்டக்கூட முடியாமல் திணறினான் டிரைவர்.

  

”சே என்ன மழை இது பேய் மழையால்ல இருக்கு” என தேவா சொல்ல உடனே,

  

”சின்னய்யா கூப்பிட்டீங்களா” என வேலைக்காரன் கேட்க தேவாவிற்கு சிரிப்பாக இருந்தது,

  

”உன்னையில்லைடா பேயி, நான் மழையைச் சொன்னேன்”,

  

”என்னை ஏன் மழையோட சேர்த்துப் பேசறீங்கய்யா” என்ற பேயாழ்வர் சுருக்கமாக பேயி வெளியே மழை பொழிவதைக்கண்டு வியந்து,

  

”ஆமாய்யா மழை செக்க போடு போடுதுய்யா, இப்படி மழை பெய்யுதே பொண்ணை காட்டுவாங்களா மாட்டாங்களா சின்னய்யா” என கேட்க அதற்கு தேவாவோ,