Chillzee KiMo Books - வொர்க் பர்ம் ஹோம் - சசிரேகா : Work from home - Sasirekha

வொர்க் பர்ம் ஹோம் - சசிரேகா : Work from home - Sasirekha
 

வொர்க் பர்ம் ஹோம் - சசிரேகா

ஒரு சிறு கதை.

 

 


 

வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home).

  

அம்மாக்களுக்கு உலகமே தங்கள் வீடுதான் ஆனால், பிள்ளைகளுக்கு தங்கள் கையில் அடங்கியிருக்கும் சின்ன செல்போன் வழியாக உலகை பார்ப்பதால் மற்ற அனைத்தும் அல்ப்பமாக மாறிவிடுகிறது, அதிலும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற வசதி வந்த பின் பலர் சிரமத்துக்கு ஆளானார்கள், சிலர் நிம்மதியானார்கள், அதிலும் சிலர் அதனால் பாதிக்கவும் பட்டார்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் மூலமாக அடைந்ததும் இழந்ததும் அதிகமே அதில் ஒன்று….,

  

”அம்மாடி ராசாத்தி எந்நேரமும் அந்த பொட்டி முன்னாடியே இருக்கியே உடம்பு கெடப்போகுதும்மா, கொஞ்சம்  ஓய்வு எடுத்துக்க” என சொல்லிய அலமேலுவைக் கண்டு சட்டென கோபம் கொண்டாள் வசந்தி,

  

”அம்மா எத்தனை முறை சொல்றது, என்னை ராசாத்தின்னு கூப்பிடாதேன்னு”,

  

”ஏன் அப்படி சொல்ற, உனக்கு ஏத்த பேர் ராசாத்திதான், நீதான் அந்த பேரு நல்லாயில்லைன்னு பேரை மாத்தி வைச்சிக்கிட்ட, ஆனா கூப்பிடறப்ப சட்டுன்னு எனக்கு ராசாத்திதானே வருது”,

  

”உன்னோட முடியலைம்மா, இப்ப எதுக்கு என்னை தொல்லை பண்ற”,

  

”ராத்திரி வெகுநேரம் கண்விழிச்சிருந்தா உடம்பு கெடும்ல கண்ணு, போய் தூங்கு”,

  

”வேலையிருக்கும்மா பார்த்தா தெரியலை” என எரிந்து விழுந்தாள் வசந்தி,

  

”எனக்கு இதைப்பத்தி என்ன தெரியும், உன் உடம்பு கெடுதேன்னு அக்கறையில சொன்னேன்”,

  

”என் வேலையை பத்தி சொன்னா உனக்கு புரியாது, நைட் நேரத்திலதான் நெட்வொர்க் வேகமாக வேலை செய்யும், அதான் இப்ப செய்றேன் கம்பெனிக்கு போகாம வீட்ல இருந்துக்கிட்டே வேலை செய்ய சொல்லிட்டாங்க அதுக்கு பேருதான் வொர்க் ஃப்ரம் ஹோம் புரியுதா உனக்கு”,

  

”என்னவோ நீ சொல்ற எனக்கு ஒண்ணும் புரியலையே ராசாத்தி”,