Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

யானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி

தலைப்பு: யானும் நீயும் எவ்வழி அறிதும்… அப்படியென்றால்… நானும் நீயும் எந்த வழியாக ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?... அதாவது இந்த காதல்தானே நம்மை இணைத்து வைத்தது. இருவருக்கிடையே அறிமுகம் ஏற்படவும்…அன்பு ஏற்படவும்… உறவு ஏற்படவும் ஏதாவது ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் எது?

சில சமயம் உறவின் முறையில் இருக்கலாம்…

சில சமயம் நட்பின் அடிப்படையில் இருக்கலாம்..

அவர்கள் இருப்பிடத்தை பொறுத்தவரை அண்டைவீடு இருக்கலாம்.... அடுத்த தெருவாக இருக்கலாம்… பக்கத்து ஊராக இருக்கலாம்… அண்டை மாநிலமாக இருக்கலாம், அட, அடுத்த தேசமாகக் கூட இருக்கட்டுமே.  ஆனால் அடுத்த உலகமாக இருந்தால்…

அச்சோ… உள்ளூர் காதல் கலவரத்தையே சமாளிக்க முடியவில்லை… இதில் இவர்களை எப்படி சமாளிப்பது?

ம்… புரிந்திருக்குமே? ஆமாம் இரண்டு வெவ்வேறு உலகங்களை சார்ந்தவர்கள் இணையும் கதைதான்…

பட்… ட்ரஸ்ட் மீ! மாறுபட்ட உலகின் வேறுபட்ட எதிக்ஸ்…. எண்ணங்கள்… அறிவியல் சிக்கல்கள்… வேற்றினத்தின் மீதான வெறுப்பு… இத்தனையும் தாண்டி எப்பவும் நம்ம ஓட்டு காதலின் வெற்றிக்குத்தான்!

அப்படியே ப்ளாக் ஹோல், வார்ம் ஹோல், பரலல் யுனிவர்ஸ், டைம் டைலேஸன் போன்ற விண்வெளி விசயங்களை தெரிந்து கொள்வோமா…

ஐன்ஸ்டைன் மற்றும் விண்வெளி இயற்பிலார் ஸ்டிஃபன் ஹாக்கின்ஸின்   நிருபிக்கப்பட்ட…  நிருபிக்கப்படாத.. தியேரிகளை உதவி கொண்டு ட்ராவல் செய்யலாமா?.

அன்புடன்

சாகம்பரி

Published in Books

தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ்

நாயகன் பார்த்திபன்.  கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும்  இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

அந்த தேவதை,  பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று  பார்க்கலாம்...   

இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!! 

Published in Books

கல்லறையில் ஒர் கருவறை - சுபஸ்ரீ முரளி

கருவறை முதல் கல்லறை வரை இன்று அறிவியல் தன் அசுர கைகளால் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி ஆள்கிறது.

அழகான உணர்வுபூர்வமான காதல் இதில் அடங்குமா?

காதலர்களிடையே அறிவியல் குறுக்கிட்டால் எப்படி இருக்கும்?

இந்த கதையில் வரும் காதலர்களின் காதல் அறிவியல் வளர்ச்சியில் சிக்கி சீரழியுமா? இல்லை சிங்காரமாய் மீண்டெழுமா?

அறிவியல் வரமா? சாபமா?

இவர்களோடு பயணிக்க வாருங்கள் . .

கல்லறையில் ஓர் கருவறை  

 

நன்றி

சுபஸ்ரீ முரளி

Published in Books

ரோஜா மலரே ராஜக்குமாரி...! - பிந்து வினோத்

ஹாய் ஃபிரென்ட்ஸ், இப்போதும் இருக்கும் அரசக் குடும்பங்கள் பற்றி படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. அப்படி இன்றைய மாடர்ன் அரசக் குடும்பத்தினரை பற்றிய செய்திகள் படிக்கும் போது, இது போல மாடர்ன் ஆனால் ட்ரேடிஷ்னல் அரச குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதை எழுதினால் என்ன என தோன்றிய எண்ணத்தின் விளைவு தான் இந்த காதல் கதை :-)

கதையை முடித்து விட்டு, மீண்டும் படித்து எடிட் செய்தப் போது, என்னுடைய கதை தானா என எனக்கே சந்தேகத்தை கொடுத்த கதையும் கூட :-) எனக்கு வித்தியாசமான அனுபவம்! உங்களுக்கும் இந்த கதை அதே இனிய + வித்தியாசமான உணர்வை கொடுக்கும் என்று நம்புகிறேன் :-)

Published in Books

சுழலும் மர்மம் - சுபஸ்ரீ முரளி

முன்னுரை 

சராசரி இளைஞன் வினய்,

பிரபல நடிகை யாமினி  மற்றும்

ஒரு திருநங்கை மஹி.

வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இம்மூவரையும் ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்கிறது. ஏன்? எதற்கு? என்பதே கதை.

இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.                               

நன்றி

சுபஸ்ரீ முரளி

**********

Published in Books