Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

சின்ன மருமகள் - சசிரேகா

தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வந்த நாயகியே நாயகனின் வசம் தன் மனதை இழக்கிறாள் தோழிக்கு துரோகம் செய்தால் மட்டுமே நாயகி தன் காதலை அடைய முடியும் தன் காதலை வெற்றி பெற வைக்க அவள் நடத்தும் நாடகத்தில் யாருடைய மனம் மாறியது நாயகன் நாயகியின் காதலை ஏற்றானா அல்லது நாயகியே தன் தோழிக்காக நாயகனை விட்டுக்கொடுத்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

  

Published in Books

இன்று நீ நாளை நான் - சசிரேகா

திருமணம் ஆனதும் பெண்கள் தன் குடும்பத்தை விடுத்து கணவன் வீட்டிற்கு மருமகளாக செல்கிறாள் அதுவே ஒரு ஆண் திருமணம் ஆனதும் தன் குடும்பத்தை விடுத்து மனைவியின் வீட்டிற்கு மருமகனாக சென்றால் என்னாகும் என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books

Mathiyur Mysteries Series - Novel # 01 | A Sathya & Shakti Mystery Novel.

   

Second edition.

முன்னுரை.

மதியூர் மிஸ்டரீஸ் கதைகளின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதை, மதியூர் எனும் கற்பனைக் கிராமத்தில் நிகழ்வது. இந்தக் கதைகளில் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.

அவர்களுடன் மதியூர் மிஸ்ட்ரீஸ் கதைகளின் ஒரு கதாநாயகியான சக்தியும் இந்த கதையில் நமக்கு அறிமுகம் ஆகப் போகிறாள்.

  

'இன்ஸ்பெக்டர் தேன்' படிக்காதவர்களுக்காக ஒரு க்விக் இன்ட்ரோ:

இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.

தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள். தென்றல்வாணன் சத்யாவின் ஒரே மகள் ஷாலினி!

   

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals 

கதையைப் பற்றி:

மதியூர் எனும் அமைதியான கிராமத்தில் நிகழ்ந்த ஒரு மரணம், கொலையா விபத்தா என்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஊரில் இருக்கும் பலரும் நடந்தது கொலை, அதற்கு காரணம் அஹல்யா என்று நம்புகிறார்கள். அஹல்யாவை பற்றி பலரும் பலவிதமான தவறான செய்திகளை சொல்கிறார்கள்.

ஆனால், அஹல்யா நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா? அஹல்யா சம்மந்தப்பட்டதாக சொல்லப்படும் மரணம், கொலையா விபத்தா??

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - சசிரேகா

தன் மீது விழுந்த பழிக்காக சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க வந்த நாயகியும் தன் மீது விழுந்த பழியால் திருமணம் ஆகாமல் இருக்கும் நாயகனும் சந்திக்கும் போது நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

  

Published in Books